கானாம் வாழை செடியின் மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips
கானாம் வாழை செடியின் மருத்துவ குணங்கள்:

மழைக்காலம் வந்து விட்டாலே சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி கானாம் வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் பலன்களை பெறலாம்.

தாது விருத்தி:

நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

கானாம்வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும். கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

காய்ச்சல்:

எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.

கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

இரத்த பேதி:

கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.மழைக்காலம் வந்து விட்டாலே சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி கானாம் வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் பலன்களை பெறலாம்.

தாது விருத்தி:

நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

கானாம்வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும். கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

காய்ச்சல்:

எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.

கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

இரத்த பேதி:

கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.