நம்பித்தான் ஆகவேண்டும். சீனாவைச்சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர். இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில் இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக.. இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் .
இன்றைய காலகட்டத்தில் 40 வயது வரை வாழ்வதே பெரிய விசயமாக கருதப்படுகிறது. காரணம் நாகரீக வளர்ச்சியில் மனிதன் உணவு என்ற பெயரில் விசத்தை உண்டு கூடிய சீக்கிரமே பரலோகம் சென்றுவிடுவதுதான். ஆனால் கடந்த காலங்களில் வாழ்ந்து மூதாதையர்கள் நோய் நொடி இன்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வதற்கு அவர்கள் அன்று பின்பற்றிய உணவு முறையே முக்கிய காரணியாகும்.