உடல் எடை குறைய - கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips


பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..

வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .

ஆனால் பத்து நாளில் குறையாது

ஆனால் நாற்பது நாளில் குறையும்

-கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???

1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?

கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.

கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .

காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.

இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.

6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது

8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.

9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.

10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.

கொடம்புளி எப்படி இருக்கும் .இந்த high resolution படம் உங்களுக்காக .


Via FB Aatika Ashreen