சான்றோர்களில் இருவகை உண்டு. ஒன்று சமூகச் சான்றோர் மற்றது ஆன்மீகச் சான்றோர்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:51 | Best Blogger Tips
சமூகச் சான்றோர் யாருடைய பிரச்சனைகளிலும் தலையிட மாட்டார்கள். தான் உண்டு தன் கடமை உண்டு என்று போய்கிட்டு இருப்பார்கள். யாரைப் பற்றியும் வம்பு தும்பு பேச மாட்டாரகள். மிக மென்மையாகப் பேசுவார்கள். அவரது நடை, உடை பாவனையில் அடக்கமும் எளிமையும் இருக்கும். நல்ல நூல்களைப் படித்து தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கு சொல்லுவார்கள். உலக நடைமுறையில் அறிவு உள்ளவர்கள்.

ஆன்மீகச் சான்றோர் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். ஆன்மா மாசு பட்டிருந்தால் காரணத்தை அறிந்து பரிகாரம் தேடுவார்கள். சரியை,கிரியை,யோகம்,ஞானம் மூலம் காமதேகத்தை நீக்கி ஒளி உடம்பைப் பெற்றவர்கள்.

சரியை மார்க்கம் என்பது ஜீவ காருண்யம், அன்பு காட்டுதல், கடமையைச் செய்தல், உயிர்க்கொலை தவிர்த்தல், பிறர்மீது புறஞ் சொல்லாமை, பொறாமைப்படாதிருத்தல், சகிப்பத்தன்மை, ஜாதி, இன துவேசம் பேசாதிருத்தலாகும்.

கிரியை மார்க்கம் என்பது ஆன்மாவின் மாசை நீக்கி, ஞானிகளை பூசை செய்ய வேண்டும்.

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
-மகான் திருமூலர்

காசிக்கோ டில்வினைபோமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசுமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
-மகான் கடுவெளிச்சித்தர்

கோவிலுக்குப் போனால் நமக்கு மன அமைதி கிடைக்கலாம் ஆனால் நமது வினை தீராதென்று ஞானிகள் சொல்வார்கள்.
 
Via FB சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்