மஹாபாரதத்தை படிப்பவர்களை அதிசயிக்க செய்பவை, அதன் விமானங்களும், பல விதமான அஸ்திரங்களும், அதிநவீன கருவிகளும், யுத்த தந்திரங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை உண்மையில் நடந்திருக்குமா ? அப்படி நடக்காமல் இருந்திருந்தால் இவை எல்லாமே கற்பனையாக இருக்க சாத்திய கூறுகள் உள்ளதா ?
மஹாபாரதத்தின் அமைப்பே, சம்பவத்திற்குள் சம்பவம் எனும் முறையை கொண்டது. ஒன்றை விவரித்து கொண்டு போகும் போது, அந்த நிகழ்வுக்குள் வேறொரு சம்பவம் நிகழும், அந்த சம்பவத்திற்குள் வேறொரு சம்பவத்தை குறித்து நினைவு கூறுவார்கள். இப்படி பல இடங்களில் நடக்கும். அதுபோலவே எங்கோ ஒரு இடத்தில் நடந்த ஒரு நிகழ்வின் எதிரொலியாக பல ஆண்டுகள் கழித்து அதன் தொடர்ச்சி இருக்கும். இவையெல்லாம் ஒருவர் கற்பனையில் உதித்தது என்று சொல்வோமானால் அது கிட்டத்தட்ட இயலாத காரியம் தான். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய கவிதை நடையில் எழுதப்பட்ட இந்த சரித்திரம், கற்பனையில் கூட எழுத இயலாதது என்று சொன்னால் அது மிகையில்லை.
மற்றொரு புறம் மஹாபாரதத்தில் உள்ள பல வர்ணனைகளை படிக்கும் போது, அது மிக ஆழமான பூகோள விவரங்களை தருகிறது. இந்திய துணை கண்டம் மற்றும் சீன ஐரோப்பிய நாடுகளை குறித்த வர்ணனைகள் விவரமாக உள்ளன. இந்திய துணை கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடு மற்றும் சிற்றூர்கள் குறித்தும், அதன் மன்னர்கள், அதன் பல இனங்கள், அதன் நதிகள், அதன் மலைகள் என பல விவரங்களை காணலாம். உதாரணமாக, மஹாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் இவ்வாறு பல வர்ணனைகளை காணலாம். பாண்டவர்களின் ராஜ சூய வேள்வியில் பங்கு பெற்ற பல அரசர்களை குறித்த விவரங்கள் உள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்புகள், வியாபாரம் ஆகியவையும் விவரிக்கப் பட்டுள்ளன. இவற்றை குறித்து விரிவாக எழுதுவது கடிணம். இதை குறித்து மேலும் படிக்க விரும்புவோர் என் வலைப்பூவிற்கு செல்லலாம். http://
மஹாபாரதம் என்று ஒரு வரலாறு நடந்ததே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தன பல அந்நிய சக்திகள், அது நடந்ததற்கு எந்த விதமான விஞ்ஞான தடயங்கள் இல்லை என்றும் அவை கொக்கரித்தன.. அகழ்வாராய்சித் துறை இந்தியாவில் வளரத் தொடங்கியதும் அதன் பயனாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் உண்மைககளை வெளிக் கொணர்ந்தன. கடலுக்கு கீழே துவாரகை எனும் ஒரு பெரும் நகரம் இருந்ததை இந்திய விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்து உலகத்திற்கு உரைத்தனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருந்த பல பொருட்கள் கிடைத்தன.
இது ஒருபுறம் இருக்க மஹாபாரதம் எப்போது நிகழ்ந்தது என்பதை குறித்தும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை மஹாபாரதத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்த வான் கோள்களின் அடிப்படைகளை நவீன விஞ்ஞானத்தின் துனை கொண்டு, கனினி மூலமாக அலசி ஆராயப்பட்டன. முடிவு மஹாபாரத போர், 22 நவம்பர் 3067 (கி.மு) நிகழ்ந்தது, என்று துல்லியமாக கணிக்கப்பட்டது.
ஆக மஹாபாரதம் நிகழ்ந்தது, பூகோள ரீதியாகவும், அகழ்வாராய்சி துறையினாலும், கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தை மையமாக கொண்டும் நிரூபிக்கப்பட்டது. அவற்றை குறித்து நான் தனித்தனியாக பிறகு எழுதுகிறேன்.
இந்த கட்டுரையின் மைய கருத்தான மஹாபாரதம் என்பது வேற்று கிரக மனிதர்களின் ஒரு பூமி பிரவேசம் என்ற என்னுடைய அனுமானத்தை குறித்தே நான் இப்போதைக்கு விரிவாக எழுத இருக்கிறேன். முதலில் வேற்று கிரகத்தவர்கள் யார் ? அவர்கள் ஏன் இந்த பூமிக்கு வரவேண்டும் ? என்பதை குறித்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.