அகத்திக்கீரையின்
அருமை!தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம்
அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும்
தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத்
தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.
வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத்
தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும்.
மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு
மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.
இலைகள் இரட்டைச் சிறகமைப்புக்
கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும்,
சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்........ ஈரப்பதம்-73 சதவீதம், புரதச்சத்து-83 சதவீதம், தாது உப்புகள்-3.1 சதவீதம், நார்ச் சத்து-2.2 சதவீதம், மாவுச்சத்து-12 சதவீதம், கொழுப்புச் சத்து-1.4 சதவீதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.
தாது உப்புகளில் சுண்ணாம்புச் சத்து,பாஸ்பரஸ், இரும்புச் சத்து,
பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வைட்டமின் ஏ, தயாமின், நிபோ
பிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவையும் அடங்கியுள்ளன.
மேலும் அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணம்........... அகத்திக்கீரை பொதுவாக நஞ்சை நீக்கும் குணமுள்ளதால், மருந்துண்μம் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் விதம்............ அகத்திக் கீரையை வதக்கி உண்ணலாம்.
குழம்பில் இட்டும் சாப்பிடலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை
கசாயமாக்கியும் அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
அகத்தியின் மருத்துவப் பயன்கள்........... அகத்திப் பூவை சமைத்துச்
சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும்
வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.
அகத்தி இலைகளைப்
பிழிந்து சாறு எடுத்து,ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து
அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல்
கட்டிவந்தால் புண்கள் ஆறும்.
அகத்திக்கீரைப் பொடியைநீர் அல்லது பாலில்
கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால்
சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும்.
அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால்,
தலைவலி மாறும்.
அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி
தேன் கலந்துசாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை
நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.
Thanks to FB Ram Krishnan
அகத்திக்கீரையின்
அருமை!தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம்
அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும்
தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத்
தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.
வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.
இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும், சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்........ ஈரப்பதம்-73 சதவீதம், புரதச்சத்து-83 சதவீதம், தாது உப்புகள்-3.1 சதவீதம், நார்ச் சத்து-2.2 சதவீதம், மாவுச்சத்து-12 சதவீதம், கொழுப்புச் சத்து-1.4 சதவீதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.
தாது உப்புகளில் சுண்ணாம்புச் சத்து,பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வைட்டமின் ஏ, தயாமின், நிபோ பிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவையும் அடங்கியுள்ளன. மேலும் அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணம்........... அகத்திக்கீரை பொதுவாக நஞ்சை நீக்கும் குணமுள்ளதால், மருந்துண்μம் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் விதம்............ அகத்திக் கீரையை வதக்கி உண்ணலாம். குழம்பில் இட்டும் சாப்பிடலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை கசாயமாக்கியும் அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
அகத்தியின் மருத்துவப் பயன்கள்........... அகத்திப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவந்தால் புண்கள் ஆறும்.
அகத்திக்கீரைப் பொடியைநீர் அல்லது பாலில் கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால், தலைவலி மாறும்.
அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி தேன் கலந்துசாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.