பிளஸ் டூவுக்குப் பின்... பைலட் ஆகலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:21 PM | Best Blogger Tips
பிளஸ் டூ படித்திருந்தால் போதும். உரிய பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றால் விமானங்களில் பைலட் ஆகிவிடலாம்.

விமானியாகி விண்ணில் பறக்க வேண்டும் என்பது பல இந்திய இளைஞர்களின் கனவு. தரையில் வேலை பார்த்தால் கிடைக்கும் வருமானத்தைவிட பறந்து கொண்டே பார்க்கும் வேலையில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், பைலட்டுகளாக விரும்புவோர் பலர். விமானங்களில் பைலட் ஆக பணிபுரிவதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளித்து வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் இயங்கி வரும் தி மெட்ராஸ் ஃபிளையிங் கிளப், அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமாகும். 1930-இல் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்பில் சேர்ந்து விமானியாகப் பயிற்சி பெற விரும்புபவர்கள், பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷனின் அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் இருந்து உடல் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். அத்துடன் காவல் துறையின் சரிபார்ப்புச் சான்றிதழ் பெற வேண்டியதும் அவசியம்.

விமானிகளுக்கான பயிற்சி மூன்று கட்டங்களைக் கொண்டது. மத்திய அரசின்கீழ் இயங்கும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் துறையின் விதிமுறைகளின்படி இந்தப் பயிற்சி நடைபெறும். முதலில் கிரவுண்ட் கிளாஸ் பயிற்சி. இதில் விமானத்தின் பாகங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லித் தருகிறோம். இந்தப் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ் (SPL) சான்றிதழ் அளிக்கப்படும். கிரவுண்ட் கிளாஸ் முடித்தபிறகு, மாணவர்கள் 40 மணி நேரம் வானில் விமானம் ஓட்டிப் பயிற்சி பெறவேண்டும். இதை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, பிரைவேட் பைலட் லைசென்ஸ் (PPL) வழங்கப்படும். அதற்குப் பிறகு வணிக விமான ஓட்டுநர் பயிற்சி உரிமம் (Commercial Pilot License) அளிக்கப்படும். CPL சான்றிதழ் பெற குறைந்தது 160 மணி நேரம் வானில் பறக்க வேண்டும். இப்படி மொத்தம் 200 மணி நேரம் பறக்க வேண்டும். இதில் இரவு நேரங்களில் பறந்து பயிற்சி செய்தல், நாடு விட்டு நாடு பறத்தல் போன்றவையும் அடங்கும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் இரண்டரை ஆண்டுகளுக்குள் விமான ஓட்டுநர் பயிற்சியை முடித்துவிடலாம். இந்தப் பயிற்சியை முடித்தவர்களுக்கு டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன், கமர்சியல் பைலட் லைசென்சை வழங்குகிறது" என்கிறார், சென்னை ஃபிளையிங் கிளப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரி குபேரன்.

பைலட் பயிற்சி பெறும் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் ரூ.20 லட்சம்வரை செலவாகும். இந்தக் கட்டணத்தை பல தவணைகளில் செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், விமான ஓட்டுநர் பயிற்சிக்கு இங்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் வங்கிக் கடன் பெறலாம். கமர்சியல் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களில் பைலட்டாகப் பணியாற்றலாம். ஆரம்பத்தில் மாதச் சம்பளமாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். பணி அனுபவத்தைப் பொருத்து மாதம் ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரைகூட ஊதியம் பெற வாய்ப்புள்ளது" என்கிறார் குபேரன்.

சென்னை ஃபிளையிங் கிளப்பில் சேர்ந்து படிக்க தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர், ரூ.1,000-க்கான டிமாண்ட் டிராப்ட்டை, "The Madras Flying Club Limited’ என்ற பெயரில் எடுத்து அனுப்பி, விண்ணப்பப் படிவங்களையும் தகவல் அறிக்கையையும் பெறலாம்.

விவரங்களுக்கு:
The Madras Flying Club Ltd,

Civil Aerodrome,

Chennai Airport,

Chennai – 600 027

Phone: 044-22561709, 044-22560436

விவரங்களுக்கு :
The Madras Flying Club Ltd,

Civil Aerodrome,

Chennai Airport,

Chennai – 600 027

Phone: 044-22561709, 044-22560436