ஆயுர்வேத வைத்தியம் - ஸ்ரீகாஞ்சி சுவாமிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:19 | Best Blogger Tips
வேத காலத்திலிருந்தே இருந்துவரும் ஆயுர்வேத வைத்தியம், நவீன மருத்துவத் துறையில் காணப்படும் அறிவியல் தத்துவங்களுக்கு எந்த விதத்திலும் குறைவு இல்லாத அரிய முறையாகும். அதில் காணப்படுபவை ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அரிய தத்துவங்களாகும். அதைப் பற்றி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதி பதி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், "ஆயுர்வேதத் தில் அறிவியல்' என்ற உபன்யாசத் தில் கூறிய அருமையான கருத்துக் களை இங்கு தொகுத்துத் தருகி றோம்.

""மினரல் தாதுக்களைக் கலந்தும் மருந்து செய்வதால் "கெமிஸ்ட்ரி' என்ற ரசாயன சாஸ்திரமும் நம் வைத்திய சாஸ்திரத்தில் வந்துவிடு கிறது. கெமிஸ்ட்ரி மட்டுமல்ல; இன்னும் ஏழெட்டு சயின்ஸ்களும் மெடிக்கல் சயின்ஸ் (ஙங்க்ண்ஸ்ரீஹப் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்) என்ற இது ஒன்றிலேயே அடங்கி விடுவதைப் பார்த்தால் ஆச்சரிய மாயிருக்கும். மூலிகைகளின் இயற்கையைத் தெரிந்துகொண்டே மருந்து பண்ண வேண்டும் என்ப தால், தாவர தத்துவ சாஸ்திரமான பாட்டனியையும் (இர்ற்ஹய்ஹ்) நன்றாகத் தெரிந்து சொல்லியிருக்கிறார்கள். மருந்துகளின் இன்னொரு மூலச் சரக்கான ரஸ வர்க்கங்களைப் பற்றி அறியப்போவதிலும் ரசாயனம் (கெமிஸ்ட்ரி) வந்துவிடுகிறது.

என்ன மருந்து கொடுக்க வேண்டும், அதில் என்னென்ன சாமான்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்தால் போதுமா? அது செலுத்தப்படுகிற தேக அமைப்பைப் பற்றி நன்றாகத் தெரிய வேண்டுமல்லவா? நோயாளியின் தேக தத்துவத்தைத் தெரிந்து கொள்ளாமல் சிகிச்சை எப்படி? இவ்வாறு பிசியாலஜியும் (டட்ஹ்ள்ண்ர்ப்ர்ஞ்ஹ்) வைத்திய சாஸ்திரத்தில் வந்துவிட்டது. "வெட்னரி' என்கிற பிராணி வைத்தியமும் புராதனமாகவே நம்மிடம் உண்டு. வீட்டுக்கு வீடு பசு, விவசாயத் துறைக்கு எருது, சைன்யத்தில் ரத, கஜ, துரகம் என்பதில் யானை, குதிரை- இப்படிப் பல மிருகங்களை ஆரோக்கியமாகக் காப்பாற்ற வேண்டியதை முன்னிட்டு, பிராணி தத்துவ சாஸ்திரமான ஜுவாலஜியையும் (ழர்ர்ப்ர்ஞ்ஹ்) நம் பூர்வீகர்கள் ஆயுர்வேதத்திலேயே சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். எந்த சத்தியத்தையும் துளைத்துக் கொண்டு பார்க்கிற அதீந்த்ரிய சக்தியால் ரிஷிகள் இந்த எல்லா சயின்ஸ்களை யும் தெரிந்துகொண்டு, ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் தெரிவித்திருக்கிறார்கள். கருணை மிகுந்த ரிஷிகள், பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், மரம், செடி, கொடிகளுக்கு வருகிற நோய்களைக்கூடப் போக்க வேண்டுமென்று "வ்ருக்ஷாயுர் வேதம்' என்றே ஒரு சாஸ்திரம் செய்திருக்கிறார்கள்.

சரக்குகளை இன்னவிதத்தில் கலக்கணும், ஒவ்வொன்றும் இன்ன எடை இருக்கணும், நோயாளி இன்ன அளவு சாப்பிடணும் என்று துல்லியமாய்க் கணிப்பதில் கணிதமும் வந்து விடுகிறது. இப்படி பௌதீக சாஸ்திரம் என்கிற பிசிக்ஸைத் (டட்ஹ்ள்ண்ஸ்ரீள்) தவிர பாக்கி முக்கியமான சயின்ஸ்களையெல்லாம் ஆயுர்வேதம் ஒன்றிலேயே அகப்படும்படியாகக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். வேறு சாஸ்திரங் களிலும் தனியாகவும் பிசிக்சையும் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கிறார்கள். சர்.பி.சி.ரே என்பவர் நம்முடைய பிராசீன சாஸ்திரங்களில் நவீன சயின்ஸ்கள் எல்லாவற்றுக்கும் மூலம் இருக்கிறதென்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தி ருக்கிறார். வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொள்ளுகிறபடி குறைந்தபட்சம் இரண்டாயி ரம் வருடங்களுக்கு முற்பட்ட சரகம், ஸூச்ருதம் முதலிய கிரந்தங்களில், "இந்த இருநூறு முந்நூறு வருடங்களில் நாங்கள் கண்டுபிடிப்ப தற்கு முன்னர் எவருக்குமே இந்த உண்மைகள் தெரிந்திருக்கவில்லை' என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் நவீன சயின்ஸ்களையெல்லாம் அடங்கியிருக்கின்றன.

மற்றவர்கள் (வெளிநாட்டவர்)- நவீனர்கள் நம்முடைய ஆயுர்வேதத்தில் சிலாகித்துச் சொல்கிற ஒரு விஷயம், இதில் மருந்துகளைச் சொன்னதோடு மாத்திரமன்றி, அதைவிட முக்கியமான பத்தியங்களையும் சொல்லியிருப்பதாகும்.

பத்தியம் என்றால் ஒரு வழியில் போகப் பண்ணுவது. பாதை (டஹற்ட்) என்பதெல்லாம் "பதி'யிலிருந்து வந்ததுதான். ஆரோக்கியப் பாதையில் செலுத்துவதற்காக ஏற்பட்டதே பத்தியம். மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. உடம்பு சரியாவதற்கு இன்ன ஆகாரங் களை நீக்கிவிட்டு, இன்ன ஆகாரத்தை மட்டுமே இன்ன அளவில் சாப்பிட வேண்டுமென்பது முக்கியம். இதுதான் பத்தியமாயிருப்பது. இந்தப் பத்தியத்தில் ஒன்றாக சகல ஜனங்களுக்குமே பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உபவாசம் இருக்க வேண்டுமென்று வைத்திருக்கிறது. சகல ஜனங்களுமே அவ்வப்போது ஒரு வேளை லங்கனம் போடுவது நல்லது. பக்ஷத்துக்கு ஒரு நாள் பூராவும் பட்டினியிருப்பது விசேஷம் என்று வைத்திய சாஸ்திரம் கருதுகிறது. இதையே ஏகாதசி என்று விரதானுஷ்டானமாகவும் பெற்றிருக்கிறோம். தர்ம சாஸ்திரமும், நம் பூர்வீக வைத்திய முறை சாஸ்திரமும் கைகோர்த்துக் கொண்டு போகின்றன என்பதற்கு இதுவும் உதாரணம்.

இந்தியாவிலுள்ள நாம் நம் தேசத்திலேயே ஏற்பட்ட ஆயுர்வேத முறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமென்பது ஒரு காரணம். அப்போதுதான் கூடிய மட்டும் சாஸ்திர விரோதமான அனா சாரங்கள் சேராமலிருக்கின்றன என்ற இன்னொரு காரணமும் உண்டு. அது இயற்கையாக அமைந்திருப்பது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கி நடத்துகிற ஈசுவரனே சகஜமாக ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்புகளைச் சேர்ந்தது. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான சீதோஷண நிலை இருக்கிறது. ஒவ்வொரு விதமான பயிர் பச்சைகள் விளைவித்து அவற்றை அங்கே உள்ளவர்கள் ஆகாரம் பண்ணுகிறார்கள். அவற்றையொட்டி அவர்களுடைய ஆரோக்கி யம், வியாதி இரண்டும் ஏற்படுகின்றன. அந்தந்த சீதோஷணமும் அங்கே கிடைக்கிற ஆகார பதார்த்தங்களும்தான் ஒவ்வொரு தேசத்த வருக்கும் "ஸூட்' ஆகிறது என்பதைப் பார்க்கி றோம் அல்லவா? இப்படியே ஆங்காங்கே இந்த சீதோஷணம், ஆகாரம் முதலியவற்றை அனுசரித்து அனாரோக்யத்தைப் போக்கிக் கொள்ளவும், அங்கே உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வைத்தியமுறை தோன்றுமாறு பகவான் புத்தி கொடுக்கிறான்.

அந்த வைத்தியத்துக்கு வேண்டிய சரக்குகள் அந்தந்த தேசத்தில் கிடைக்கும்படியாகவும் வைத்திருக்கிறான். சாத்விகர்களாக வாழ வேண்டிய நம் தேச ஜனங்களுக்கு நம்முடைய சீதோஷணம், ஆகாரம் முதலியவற்றுக்கு அனுசரணையாகப் பச்சிலை, ரஸவர்க்கம் போன்ற சாத்வீக மருந்துகளாலேயே வியாதி நிவர்த்தி ஏற்படுமாறு அவன் ஏற்படுத்தியிருக்கும் சகஜமான அமைப்பிலே இருக்கிறது. "கர்ம பூமியிலுள்ளவர்கள் கர்மானுஷ்டானத்துக்கு முதுகெலும்பாயிருக்கிற தர்மசாஸ்திரத்தை மீறாமலே சரீர ரக்ஷை, வியாதி நிவர்த்தி, ஆயுர்விருத்தி முதலியவற்றைப் பெறட்டும்' என்றே நம் ரிஷிகளுக்கு ஆயுர்வேதம் புரிபடும்படியாக அனுக்ரஹித்திருக்கி றான். அந்தந்த தேசத்திலுள்ள ஜனங்க ளின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவர் களுக்கு தேசாச்சார, மதாச்சாரங்களைக் கொடுத்து, இவற்றுக்கு அனுசரணை யாகவே வைத்தியமுறை முதலியவை ஆங்காங்கே தோன்றும்படிச் செய்திருக் கிறான்.

வைத்தியம் மட்டுமில்லை; "சில்பம்' என்று வீடு வாசல் கட்டிக் கொள்கிற முறை, க்ருஷி என்பதான விவசாய முறை எல்லாவற்றிலும் இப்படி ஒவ்வொரு தேசத்திற்கும் "ஸூட்' ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அனுஷ்டானங்கனையே பண்ண முடியாமல் விடவேண்டியதாகிறது. ஓஹல்ஹய்ங்ள்ங் ஙங்ற்ட்ர்க் ர்ச் ஆஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் பண்ணி நாலு மடங்கு மகசூல் காட்டுவேன் என்று போனால், நம் கையை மீறி அதிவ்ருஷ்டி, அநாவ்ருஷ்டி (பெருமழை அல்லது வறட்சி) என்று ஏற்பட்டு பஞ்சநிலை உண்டாகிறது. "நேச்சரை டிஸ்டர்ப்' பண்ணக் கூடாது. அதுவே ஏற்றத் தாழ்வுகளை "பாலன்ஸ்' பண்ண விட வேண்டும் என்று அறிவாளிகள் ஒரு பக்கம் சொல்கிறார்கள். இது மெடிக்கல் சயின்ஸ் உள்பட எல்லா வற்றிலும் ஆலோசனைக்குக் கொண்டு வரவேண்டிய விஷயம்.

ஆயுர்வேதத்தின் பிரமாண நூலான "சரக ஸம்ஹிதை'யிலேயே இந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

"யஸ்மித தேசேஹி யோ ஜாத:/

தஸ்மை தஜ் ஜெஷதம் ஹிதம்//

ஒரு தேசம் என்றால் அதில் பல மனுஷ்யர்கள் உண்டாகிறார்கள். மனுஷ்யர்களைப்போலவே ஒவ்வொரு தேசத்திலும் மூலிகை முதலான மருந்து சரக்குகளும் உண்டாகின்றன. ஈச்வர நியதியில் இது ஏதோ குருட்டாம் போக் கில் நடப்பதல்ல; இந்த தேசத்துக் காரனுக்கு இந்தச் சரக்கால் பண்ணின ஔஷதம்தான் ஏற்றது என்று இது காட்டுகிறது. இதைத்தான் எந்த தேசத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவனுக்கு அங்கேயே உண்டான சரக்குகளால் ஏற்பட்டதுதான் மருந்து என்று சரகத்தில் சொல்லியிருக்கிறது.''

-எச். திவ்யாஹரி

நன்றி நக்கீரன்