நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:27 PM | Best Blogger Tips

 File:Subhas Chandra Bose meeting Adolf Hitler.jpg - Wikimedia Commons

🔥 நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் 🔥

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
முதல் முறையாக ஜெர்மனியில் ஹிட்லரை சந்திக்க சென்ற போது…

ஹிட்லரின் பாதுகாவலர்கள்,
நேதாஜியை ஒரு அறையில் தனியாக உட்கார வைத்தார்கள்.
Roar Tamil - இந்திய தேசிய இராணுவத்தின் சரித்திர நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ்

“ஹிட்லர் வருகிறார்…”
“ஹிட்லர் இன்னும் சில நிமிடங்களில்…”

என்று சொல்லிக் கொண்டே நேரம் இழுத்தார்கள்.
Subhash Chandra Bose's death anniversary 1945 august 18th filght accident  tiwan The mysterious death that remains unbroken to this day | சுபாஷ்  சந்திர போஷின் நினைவு தினம்; இன்று வரை விலகாமல் ...
அந்த நேரத்தில் நேதாஜி என்ன செய்தார் தெரியுமா?

👉 எந்த பதற்றமும் இல்லாமல்
👉 எந்த அவசரமும் இல்லாமல்
👉 ஒரு புத்தகத்தை எடுத்து
அமைதியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டார் 📖



😮 ஹிட்லரின் சோதனை

சிறிது நேரம் கழித்து…

ஹிட்லரைப் போலவே வேடமணிந்த ஒருவர்
அந்த அறைக்குள் வந்தார்.

ஆனால்…

👉 நேதாஜி அவரைப் பார்க்கவே இல்லை
👉 தலை கூட தூக்கவில்லை
👉 வாசிப்பதைத் தொடர்ந்தார்

மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் -  tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்
ஒவ்வொருவரும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.

ஆனால் நேதாஜி
ஒரு கணமும் கவனம் சிதறவில்லை.

📌 காரணம் என்ன தெரியுமா?

அந்த காலத்தில்,
ஹிட்லரைப் போலவே வேடமணிந்தவர்களை வைத்து
பலரை ஏமாற்றி,

“நான் ஹிட்லரை சந்தித்தேன்”
என்று சொல்ல வைத்த சம்பவங்கள் இருந்தன.
18.8.1945 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள் 📌🥷🏻⚔️⚡ . . . ##nethaji  #nethajideathday #nethajisubashchandrabose👑🔥❤️ #nethajipakthan  #nethajibloods♥️💥 #ɴᴇᴛʜᴀᴊɪ ...


👑 உண்மையான ஹிட்லர் வந்த தருணம்

கடைசியாக…

உண்மையான ஹிட்லர்
மெதுவாக நேதாஜியின் பின்னால் வந்து,

👉 அவரின் தோளில் கை வைத்தார்.

உடனே நேதாஜி தலை தூக்கி,
ஒரே வார்த்தை சொன்னார்:

“ஹிட்லர்.”

😳
ஹிட்லருக்கு ஒரே வியப்பு!
Why did Netaji Subhas Chandra Bose believe that Hitler could be a great  ally?


🤯 ஹிட்லரின் கேள்வி

ஹிட்லர் கேட்டார்:

“நீங்கள் இதற்கு முன் என்னை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.
அப்படியிருக்க,
எப்படி என்னை நீங்கள் சரியாக அடையாளம் கண்டீர்கள்?”


The interpreter tempered Neta Ji's sharp rebuke to make it more acceptable  to Hitler. Netaji Subhas Chandra Bose met Hitler solely for strategic and  political purposes, aiming to secure support against British
🔥 நேதாஜியின் பதில் (வரலாற்றுப் punchline)

நேதாஜி சிரித்துக் கொண்டு சொன்னார்:

“இந்த உலகத்தில்
சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரைத் தவிர
வேறு யாருக்கும் தைரியம் கிடையாது!”

💥💥💥



🇮🇳 இதுதான் நேதாஜி!

👉 அச்சமற்ற தைரியம்
👉 தன்னம்பிக்கையின் உச்சம்
👉 தன்மானத்தின் உயரம்
👉 தலைவருக்கே உரிய கம்பீரம்



❤️ கடைசி வரி

எத்தனை முறை படித்தாலும்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
ஒரு சரித்திர நிகழ்வு இது!

🙏
சூப்பர்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

பரிசு வழங்கும் பிரகாஷ்
 

 

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்..
(ஜனவரி 2020)
👍👍
👍

May be an image of one or more people and people studying  

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கும் இந்தக் கிராமம், மிகவும் பின்தங்கிய கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தினமும் கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை நகர்த்தும் நிலையில் உள்ளவர்கள். இந்த நிலையில், தங்களின் மகன், மகள்களை படிக்க வைக்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு அனுப்பவேண்டிய சூழல். இரண்டு ஊர்களுக்கும் இடையில் மூன்று சிறு வாய்க்கால்கள் ஓடுவதால், தங்கள் பிள்ளைகளை பயந்துகொண்டே பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
 

அந்தப் பேருந்து
இந்த நிலையில்தான், தெற்கு அய்யம்பாளையத்துக்கு வரும் தனியார் பேருந்து ஒன்றின் முதலாளி, கடந்த 10 வருடங்களாக தெற்கு அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை தனது பேருந்தில் காலை, மாலையில் இலவசமாக அழைத்துக்கொண்டு போகவும் வரவும் செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், தெற்கு அய்யம்பாளைய மக்கள் அந்தப் பேருந்தின் முதலாளி பிரகாஷை அழைத்துவந்து பாராட்டு விழா நடத்தியதோடு, அவரை வைத்து மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்க வைத்தனர். அப்போதுதான், மாணவர்கள் சிலர் பிரகாஷின் கால்களில் விழுந்து வணங்கியதோடு, `நீங்க எங்களை இலவசமாக உங்க பேருந்துல அழைச்சுக்கிட்டு போய் வரலன்னா, எங்களால படிக்க முடியாம போயிருக்கும். உங்களுக்கு நன்றி' என்று கூறி, பிரகாஷையும், கிராம மக்களையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.
 பாராட்டு விழாவில் பிரகாஷ்
தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம். ``எங்க ஊர் வறட்சியான ஊர். எங்க ஊர்ல இருந்து கடவூருக்குச் சரியான சாலை வசதிகூட கிடையாது. எங்க கிராமத்துப் பிள்ளைகள் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூர் போய் படிக்க வேண்டிய சூழல். தினமும் நடந்துதான் பள்ளிக்குப் போய்வந்தார்கள். அந்த வழியில் மூன்று வாய்க்கால்கள் ஓடுவதால், மழைக்காலங்களில் பயந்துகொண்டேதான் எங்க கிராமத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பி வந்தனர். பல பெற்றோர்கள் அப்படி அனுப்ப பயந்துகொண்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமையும் நடந்தது.
 
இந்தப் பிரச்னையை யதேச்சையாக அறிந்த அந்தப் பேருந்தின் உரிமையாளர் பிரகாஷ், மாணவர்களிடம், `நீங்கள் தினந்தோறும் நடந்துதான் பள்ளிக்குப் போய் வீடு திரும்புகிறீர்களா?'னு கேட்டிருக்கிறார். 
 
மாணவர்களும், `ஆமாம்' என்று பதில் சொல்ல, பிரகாஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்கள் இலவசமாக தனது பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிவித்தார். கடகடனு 9 வருடங்கள் ஓடி, பத்தாவது ஆண்டை தொடங்கியிருக்கு, இந்த இலவசப் பேருந்துப் பயணம். அவரின் இந்தச் சேவையால் பல பிள்ளைகளின் கல்வி தடையில்லாமல் தொடருது. 
 
அதற்கு நன்றிக்கடனாதான் அவரை அழைத்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
 
தனியார் பேருந்தின் உரிமையாளரான பிரகாஷிடம் பேசினோம். ``நான் கீழ்நிலையில் இருந்து உழைப்பின் காரணமாக முன்னுக்கு வந்தவன். எனக்குதான் தெரியும், படிப்பு எவ்வளவு முக்கியம்னு. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த ஏழைவீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கணும்னு நினைச்சேன். என்னால அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்னு நினைச்சேன். அப்போதுதான், தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடவூர் வரை நடந்துபோய் படிக்கும் அவலத்தைப் பார்த்தேன்.
 
உடனே, அவர்கள் எனது பேருந்தில் இலவசமா பயணிக்கலாம்னு அறிவிச்சேன். இதை சாதாரணமான உதவியா நினைச்சுதான் செய்தேன். ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் என்னை அழைத்து பாராட்டு விழா நடத்தி என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அதைவிட, அந்த மாணவர்கள் எனது கால்களில் விழுந்து வணங்கி, என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன்" என்றார்.
 
 
Thanks & Copy from 

Paranji Sankar 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷