நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

பரிசு வழங்கும் பிரகாஷ்
 

 

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்..
(ஜனவரி 2020)
👍👍
👍

May be an image of one or more people and people studying  

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கும் இந்தக் கிராமம், மிகவும் பின்தங்கிய கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தினமும் கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை நகர்த்தும் நிலையில் உள்ளவர்கள். இந்த நிலையில், தங்களின் மகன், மகள்களை படிக்க வைக்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு அனுப்பவேண்டிய சூழல். இரண்டு ஊர்களுக்கும் இடையில் மூன்று சிறு வாய்க்கால்கள் ஓடுவதால், தங்கள் பிள்ளைகளை பயந்துகொண்டே பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
 

அந்தப் பேருந்து
இந்த நிலையில்தான், தெற்கு அய்யம்பாளையத்துக்கு வரும் தனியார் பேருந்து ஒன்றின் முதலாளி, கடந்த 10 வருடங்களாக தெற்கு அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை தனது பேருந்தில் காலை, மாலையில் இலவசமாக அழைத்துக்கொண்டு போகவும் வரவும் செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், தெற்கு அய்யம்பாளைய மக்கள் அந்தப் பேருந்தின் முதலாளி பிரகாஷை அழைத்துவந்து பாராட்டு விழா நடத்தியதோடு, அவரை வைத்து மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்க வைத்தனர். அப்போதுதான், மாணவர்கள் சிலர் பிரகாஷின் கால்களில் விழுந்து வணங்கியதோடு, `நீங்க எங்களை இலவசமாக உங்க பேருந்துல அழைச்சுக்கிட்டு போய் வரலன்னா, எங்களால படிக்க முடியாம போயிருக்கும். உங்களுக்கு நன்றி' என்று கூறி, பிரகாஷையும், கிராம மக்களையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.
 பாராட்டு விழாவில் பிரகாஷ்
தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம். ``எங்க ஊர் வறட்சியான ஊர். எங்க ஊர்ல இருந்து கடவூருக்குச் சரியான சாலை வசதிகூட கிடையாது. எங்க கிராமத்துப் பிள்ளைகள் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூர் போய் படிக்க வேண்டிய சூழல். தினமும் நடந்துதான் பள்ளிக்குப் போய்வந்தார்கள். அந்த வழியில் மூன்று வாய்க்கால்கள் ஓடுவதால், மழைக்காலங்களில் பயந்துகொண்டேதான் எங்க கிராமத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பி வந்தனர். பல பெற்றோர்கள் அப்படி அனுப்ப பயந்துகொண்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமையும் நடந்தது.
 
இந்தப் பிரச்னையை யதேச்சையாக அறிந்த அந்தப் பேருந்தின் உரிமையாளர் பிரகாஷ், மாணவர்களிடம், `நீங்கள் தினந்தோறும் நடந்துதான் பள்ளிக்குப் போய் வீடு திரும்புகிறீர்களா?'னு கேட்டிருக்கிறார். 
 
மாணவர்களும், `ஆமாம்' என்று பதில் சொல்ல, பிரகாஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்கள் இலவசமாக தனது பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிவித்தார். கடகடனு 9 வருடங்கள் ஓடி, பத்தாவது ஆண்டை தொடங்கியிருக்கு, இந்த இலவசப் பேருந்துப் பயணம். அவரின் இந்தச் சேவையால் பல பிள்ளைகளின் கல்வி தடையில்லாமல் தொடருது. 
 
அதற்கு நன்றிக்கடனாதான் அவரை அழைத்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
 
தனியார் பேருந்தின் உரிமையாளரான பிரகாஷிடம் பேசினோம். ``நான் கீழ்நிலையில் இருந்து உழைப்பின் காரணமாக முன்னுக்கு வந்தவன். எனக்குதான் தெரியும், படிப்பு எவ்வளவு முக்கியம்னு. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த ஏழைவீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கணும்னு நினைச்சேன். என்னால அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்னு நினைச்சேன். அப்போதுதான், தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடவூர் வரை நடந்துபோய் படிக்கும் அவலத்தைப் பார்த்தேன்.
 
உடனே, அவர்கள் எனது பேருந்தில் இலவசமா பயணிக்கலாம்னு அறிவிச்சேன். இதை சாதாரணமான உதவியா நினைச்சுதான் செய்தேன். ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் என்னை அழைத்து பாராட்டு விழா நடத்தி என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அதைவிட, அந்த மாணவர்கள் எனது கால்களில் விழுந்து வணங்கி, என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன்" என்றார்.
 
 
Thanks & Copy from 

Paranji Sankar 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷