இதுவே உண்மையான திருநீறாகும்.

மணக்கால் அய்யம்பேட்டை | 9:00 PM | Best Blogger Tipsஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1.
புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.
தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.
நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

Via FB இயற்கை உணவும் இனிய வாழ்வும்

காதலிக்காமல் இருக்கும் பெண்ணா நீங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:19 PM | | Best Blogger Tips
காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள். மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும்.

ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம். அதுவே காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர்.

எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால், சந்தோஷமாக இருக்கலாமோ, பெண்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. அவர்களுக்கும் ஆண்களைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில் விழுந்துவிட்டால் நடக்காது. எனவே தற்போதுள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். " இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று அனுபவசாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்

சுதந்திரப் பறவை காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம்.

சந்தோஷமாக ஷாப்பிங் செய்யலாம் பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம்.

நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம் காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

ஆண் நண்பர்களுடன் பேசலாம் சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.
எந்நேரமும் பணம் இருக்கும் தனி ஒரு பெண்ணாக இருந்தால், பொறுப்புக்களானது மிகவும் குறைவு. மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்பதோடு, விருப்பப்பட்டவாறு செலவழிக்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.

பிடித்ததை செய்யலாம் பொதுவாக காதல் வந்தால், காதலரைப் பற்றிய நினைவே அதிகம் இருக்கும். தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்காது. ஆனால் தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக்கலாம். பிடித்தவாறு நேரத்தை செலவழிக்கலாம்

நோ கமிட்மெண்ட் காதல் செய்யாமல் இருந்தால், யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். பிடித்தவாறு வாழ்க்கையை வாழலாம்.

அரட்டை அடிக்கலாம் பொதுவாக நாம் நிறைய அழகான ஆண்களை பார்க்கலாம். அதனால் சிலருக்கு அந்த ஆண்களுடன் பேச வேண்டுமென்று தோன்றும். இவை அனைத்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்தால் செய்யலாம். குறிப்பாக, மேற்கூறிய அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்.
 
Via FB Relax Please
 

கங்கையும் அதன் புனிததன்மை மற்றும் விஞ்ஞானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips
கங்கை ஒரு புனித நதி அது சிவபெருமானின் சிரசில் தோன்றியது என்று புராணம் உண்டு.அது ஹிந்துகளின் புனித நீர் என்பது பாரதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல மேல்நாட்டினருக்கும் தெரியும் அதில் உள்ள விஞ்ஞான உண்மையை பார்போம்
கனடாவின் மெக்கின் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் எஃப்.சி.ஹாரிசன் என்பவர் கங்கை நீரில் 5மணி நெரம் நின்றால் அது முற்றிலும் காலரா கிருமி இறந்து விடுகிறது.அதற்கு காரணம் என்னால் அறிய முடியவில்லை ஆனால் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று கூரியுள்ளார்

டி.ஹெல் என்பவர் காலரா,சீதபேதி போன்றவையால் இறந்தவர்கள் சவங்களுக்கு அருகில் எதாவது ஒரு கிருமி இருக்கும் என்று கங்கை நீரை ஆராய்ச்சி செய்தார் அதிலும் அவர் கிருமி இல்லாதிருப்பதை கண்டு வியப்பாளிருக்கிறது என்று கூரியுள்ளார்

பிரிட்டனைச் சேர்ந்த சி.இ.நெல்சன் எஃப்.ஆர்.சி.எஸ் என்பவர் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஹூக்ளி நதியிலிருந்து கங்கை நீர் எடுத்து சென்றார்.அந்த நீர் இங்கிலாந்து செல்லும் வரை கெடவே இல்லை
பின்னர் அவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது நீர் எடுத்துவந்தார் அது 2 நாட்களில் கெட்டுவிட்டது எனவே அவர் கங்கை நீருக்கு ஒரு விந்தையான ஆற்றல் உள்ளது என்று கூறியுள்ளார்
 

நம்பினார் கெடுவதில்லை !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:39 PM | Best Blogger Tipsகளங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர்
, சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளாஎன்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த
விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த
சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே
, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார்
என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர்
கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது

“இதோ
பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது
களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம்
, “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு
அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன்
வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே
, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி
, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை
போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான

மணக்கால் அய்யம்பேட்டை | 1:20 PM | Best Blogger Tips
சம்பிரதாயங்கள்.
..............................
.
உலக நாட்டு மக்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க

வழக்கங்கள்.

* ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

* கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

* ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

* தாய்லாந்தில் தலையில் கை வைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

*நம் தமிழ்நாட்டில் பொதுவாக யாராவது வெளியே போகும்போது,

"எங்கே போகின்றீர்கள்..?

என்று கேட்பது அபச குணமாக கருதுகின்றனர்.


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

விபூதி தரிக்கும் காலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips


முச்சந்தி உடனுதயம் அத்தமன காலம்;

முன்உணவின் முன் பின்னும்; உறங்கு முன்னும் பின்னும்;

அர்ச்சனையின் முன்பின்னும்; மலசலங்கள் விட்டால்

ஆசமித்த பின்னும்; அதீக்கிதர் தொட்டாலும்;

பொச்சவர்கள், மார்ச்சாரம், கொக்கு,எலிகள் முதலாப்

பொல்லாத தீண்டிடினும் புனிதநீறு அணிக;

நிச்சயமே சிவன், அங்கி, குரு,வித்தை முன்னும்;

நீசர்முன்னும்; நடவையினும் அணியற்க நீறே

-தத்துவப் பிரகாசம் பாடல் 66-சந்தி- சந்தியா காலம்;

ஆசமனம்- உட் சுத்திக்காக வலது உள்ளங்கையில் உழுந்து அமிழும் அளவுக்கு நீர் விட்டு உள்ளங்கை அடியில் உதடு வைத்து மந்திரம் சொல்லி ஒலி எழுப்பாமல் உறிஞ்சிக் குடித்தல். உறிஞ்சும் நீர் இருதயத்தானம் வரை போகவேண்டும், உதரம் வரை அல்ல.

அதீக்கிதர் - தீட்சை இல்லாதவர்கள்;

பொச்சவர்கள் - தவத்தில் இருந்து வழுவியவர்கள்;

மார்ச்சாரம் - பூனை;

அங்கி - அக்கினி;காலை, மதியம், மாலை என்கின்ற மூன்று சந்தியா காலங்களிலும், உணவுண்பதற்கு முன்னரும், பின்னரும், உறங்குவதற்கு முன்னரும் பின்னரும், பூசை செய்வதற்கு முன்னரும், பின்னரும், மல சலங் கழித்த பின்னர் சுத்தி செய்து ஆசமனம் செய்த பின்னரும், தீட்சையில்லாதவர்கள் தீண்டினாலும், தவ ஒழுக்கம் விட்டவர்கள், பூனை, கொக்கு, எலி முதலியவற்றைத் தீண்ட நேரிடினும், திருநீறு இட்டுக்கொள்ள வேண்டும். இறைவன் சன்னிதானத்துக்கு முன்னாலும், அக்கினிக்கு முன்னாலும், குருவுக்கு முன்னாலும், கற்கும் வித்தைக்கு முன்னாலும் முகத்தை எதிர்நோக்காது, முகத்தை மாறி நோக்கி நின்று திருநீறு தரிக்க வேண்டும். நீசர்களுக்கு முன்னாலும், நடந்து கொண்டும் விபூதி தரிக்கக்கூடாது.


Via FB Aiyaarappar Dharmasamvardhini