வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | | Best Blogger Tips
வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம்.
(For betterment of financial condition and to get rid of poverty.) Hindu prayer for healing
Thirumurai - The medicine to sufferings.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருவாவடுதுறை தேவாரத் திருப்பதிகம் (மூன்றாம் திருமுறை 4வது திருப்பதிகம்)

நாலடிமேல் வைப்பு 

பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம்

34	
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

01
35.	
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

02
36.	
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

03
37.	
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

04
38.	
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

05
39.	
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

06
40.	
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

07
41.	
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

08
42.	
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

09
43.	
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

10
44.	
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் 
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
11

திருவாவடுதுறை! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் பெயர் பசுபதியார். சிவ வாகனமான ச்நந்தியின் அருளைப் பெற்றவர்களில் சுந்தரநாதர் இவருக்கு அகத்தியரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்க விருப்பம் ஏற்பட அகத்தியரைக் காண புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் திருவாவடுதுறையில் உள்ள பசுபதிநாதரை வணங்கி சில காலம் அங்கேயே தங்கி, அங்குள்ள பிற தலங்களையும் தரிசிக்க நனைத்து காவிரியாற்றின் கரை வழியாக போய்க்கொண்டிருந்தார். அங்கு சாத்தனூரைச் சேர்ந்த இடையர் குல மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து கொண்டிருந்தான். இவன் அன்போடு மாடுகளை மேய்த்து அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தான். அன்றும் மூலன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கும்போது அவனது வாழ்நாள் ¬முடிந்து விட திடீரென மூலன் இறந்து விட்டான். இதைக்கண்ட இவன் அன்புடன் மேய்த்த பசுக்கள் எல்லாம் இவனைப் பிரிந்த துக்கத்தில் கதறி இறந்த மூலனின் உடலை நாக்கால் நக்கி அங்குமிங்கும் சுற்றித்திரிந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரநாதர் மூலனின் பிரிவால் அனைத்து பசுக்களும் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடும் என நினைத்தார். எப்படியாவது பசுக்களில் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார்.

அவ்வளவுதான். மூலன் உறங்குபவன்போல் கண்விழித்து திருமூலராய் எழுந்தான்.இதனைக் கண்ட பசுக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க ¬டியவில்லை. பின்னர் பசுக்களையெல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்த்துவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் மூலனின் வீட்டு நிலையை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். மூலனுக்கோ திருமணம் ஆகி இருந்தது. என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மூலனின் மனைவி அவன் வீடு வர தாமதமானதால் அவனை தேடி வந்தும் விட்டாள். மூலனிடம் தாமதத்திற்கான காரணம் கேட்டாள். மூலனோ மவுனம் சாதித்தார். இதனால் வருத்தமடைந்த அவள் திருமூலரின் கையைப்பிடித்து வீட்டிற்கு அழைத்தாள். பதறிப்போன திருமூலர் அவளிடம் இனிமேல் நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன். உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது எனவே நீ சிவனை வழிபட்டு அமைதி அடைய வேண்டும் என்று கூறியதோடு பக்கத்திலிருந்து மடத்திற்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். கவலையுடன் வீடு திரும்பிய அவள் மறுநாள் தன் சுற்றத்தாருடன் திருமூலரை சந்திக்க சென்றாள். அங்கு நிஷ்டையில் இருந்த அவரின் முகத்தில் தெய்வ சக்தி ஜொலித்தது. இதைக்கண்ட அனைவரும் திகைத்தனர். இருந்தாலும் அந்த பெண்ணிற்காக திருமூலரிடம் வாதாடினர். எந்த பலனும் இல்லை.

அதன் பின் தான் திருமூலர் ¬முனிவர் என்பதையும் அவருடன் வாழ்வது முடியாத காரியம் என்பதையும் தெளிவாக அந்த பெண்ணிடம் சுற்றத்தார் தெரிவித்தனர். இதைக்கேட்ட அந்தப்பெண் அழுது புலம்பி பின் திருமூலரை வணங்கிவிட்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். சிறிது நேரத்தில் யோகநிலை கலைந்த திருமூலர் மறைத்து வைத்திருந்த பழைய திருமேனியை தேடினார். கிடைக்கவில்லை.  இறைவன் அருளிய ஆகமப் பொருளை தமிழிலே வகுத்து உலகிற்கு உணர்த்தவே சிவன் தன் உடலை மறைத்துவிட்டார் என்பதை தன் ஞான திருஷ்டியால் திருமூலர் உணர்ந்தார். உடனே இறைவனின் கட்டளையை நிறைவேற்றிட திருவாவடுதுறை பசுபதிநாதரை வணங்கி கோயில் மதிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தடியில் அமர்ந்து சிவயோகம் செய்ய ஆரம்பித்தார். சிவயோகத்தில் நிலைத்துநின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார்.  இங்குதான் மூவாயிரம் மந்திரங்கள் அடங்கிய திருமந்திரத்தை இயற்றினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக்கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! இப்புனிதமான திருமந்திரத் திரு¬றைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை.

திருச்சிற்றம்பலம்
(For betterment of financial condition and to get rid of poverty.) Hindu prayer for healing
Thirumurai - T
he medicine to sufferings.

Via FB Aiyaarappar Dharmasamvardhini