கங்கையும் அதன் புனிததன்மை மற்றும் விஞ்ஞானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips
கங்கை ஒரு புனித நதி அது சிவபெருமானின் சிரசில் தோன்றியது என்று புராணம் உண்டு.அது ஹிந்துகளின் புனித நீர் என்பது பாரதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல மேல்நாட்டினருக்கும் தெரியும் அதில் உள்ள விஞ்ஞான உண்மையை பார்போம்
கனடாவின் மெக்கின் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் எஃப்.சி.ஹாரிசன் என்பவர் கங்கை நீரில் 5மணி நெரம் நின்றால் அது முற்றிலும் காலரா கிருமி இறந்து விடுகிறது.அதற்கு காரணம் என்னால் அறிய முடியவில்லை ஆனால் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று கூரியுள்ளார்

டி.ஹெல் என்பவர் காலரா,சீதபேதி போன்றவையால் இறந்தவர்கள் சவங்களுக்கு அருகில் எதாவது ஒரு கிருமி இருக்கும் என்று கங்கை நீரை ஆராய்ச்சி செய்தார் அதிலும் அவர் கிருமி இல்லாதிருப்பதை கண்டு வியப்பாளிருக்கிறது என்று கூரியுள்ளார்

பிரிட்டனைச் சேர்ந்த சி.இ.நெல்சன் எஃப்.ஆர்.சி.எஸ் என்பவர் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஹூக்ளி நதியிலிருந்து கங்கை நீர் எடுத்து சென்றார்.அந்த நீர் இங்கிலாந்து செல்லும் வரை கெடவே இல்லை
பின்னர் அவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது நீர் எடுத்துவந்தார் அது 2 நாட்களில் கெட்டுவிட்டது எனவே அவர் கங்கை நீருக்கு ஒரு விந்தையான ஆற்றல் உள்ளது என்று கூறியுள்ளார்