சில அரிய அதிசய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:25 AM | Best Blogger Tips
சில அரிய அதிசய தகவல்கள் க்கான பட முடிவுசில அரிய அதிசய தகவல்கள் க்கான பட முடிவு

1. நந்தி வழிபாடு
நந்தி வழிபாடு க்கான பட முடிவு
சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் நந்தி தேவரை வணங்க வேண்டும். மூலையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் நந்தி என்று பெயர். நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புத்தியாக மாற்றிக்கொள்ளலாம்.
சில அரிய அதிசய தகவல்கள் க்கான பட முடிவு
2. சிரிக்கும் சிலை
சிரிக்கும் சிலை க்கான பட முடிவு
ஈடோட்டில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ளது பவானி கூடல் என்ற இடம். இங்கு வேதநாயகி அம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது பழமைவாய்ந்த இந்தக் கோவிலில் வேதநாயகி அம்மன் சந்திதியில் சிரிக்கும் சிலை ஒன்றும் அழும் சிலை ஒன்றும் உள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அது உயிர் பெற்று சிரிப்பது போல் இருக்கும். அழும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் உண்மையிலேயே அது அழுவது போன்று இருக்கும்

3. மீசையுடன் ராமர்

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ராமபிரான் கைகளில் வில் அம்பு ஏந்தி முறுக்கிய மீசையோடு காட்சியளிக்கிறார். அசுர வதைக்காக ஸ்ரீ ராமன் போர்க்கோலம் பூண்டதையே முறுக்கிய மீசை உணர்த்துகிரதாம்.

4. விலகிய கருடாழ்வார்

பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் நெல்லை மாவட்டம் தென்திருப்பேரையில் கருடன் சன்னதி சற்று விலகி இருக்கிறது. நந்தனாருக்கு நந்தி விலகியது போல நம்மாழ்வார் பாசுரம் பாடியதால் கருடாழ்வார் வடக்குப் புறமாக நகர்ந்து எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது.

5. நவ விரதக் கோயில்கள்

ஹைதிராபாத்திலிருந்து கிட்டத்தட்ட 150 கி மீ தொலைவில் மகப்பூர் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆளாம்பூர் என்றார் இடத்தில் அரை கருட விரதக் கோவில், தாரக விரதக் கோவில், அர்த்த விரதக் கோவில், சவர்க்க விரதக் கோவில், குமார விரதக் கோவில், விஸ்வ விரதக் கோவில், வீர விரதக் கோவில், பால் விரதக் கோவில் பத்ம விரதக் கோவில் என்று நவ விரதக் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அணையாவிளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன.

6. அடுப்புக் கரி காணிக்கை

முகத்தில் கரும்புள்ளி ஏற்பட்டு அதனால் முக அழகு பாதிக்கப்படுபவர்கள் பரமக்குடியிலிருந்து 19 கி மீ தொலைவில் உள்ள நயினார்கோவில் என்னும் ஊரில் உள்ள சௌந்தரநாயகி சமேத நாகநாதர் திருக்கோவிலுக்கு அடுப்புக்கரியை காணிக்கையாகத் தருகின்றனர். அதனால் முகத்தில் கரும்புள்ளி நீங்குவதாக சொல்கிறார்கள்.

7. பாம்பு வடிவில் முருகன்

கேரளாவிலுள்ள மஞ்சுகேசுவரர் ஆலயத்தில் ஆதிசேஷன் வடிவில் முருகப் பெருமான் எழுந்ததுளியுள்ளார். இங்கு புற்று மண்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

8. ஒரே கல்லில்

கர்னாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள சரவணபெலகொலாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐம்பத்தெட்டடி உயர பாகுபலி சிலை நிறுவப்பட்டது. ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிலைகளில் உலகிலேயே இதுதான் மிக உயரமானது என்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

9. மூலிகைப் பாறை

கேரளா மாநிலம் மாவேளிக்கரைக்கு வடகிழக்கில் சுமார் இருபது கி மீ தொலைவில் செங்கனூர் என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வட்டப்பாறை ஒன்றுள்ளது. இப்பாறையில் பல மூலிகைகள் அடங்கியுள்ளன. இதன்மீது ஏறி நின்று ஆலயத்தின் கோபுரத்தை தரிசிப்போருக்கு விஷ ஜந்துக்களால் ஒரு போதும் தீங்கு நேர்வதில்லை என்பது நம்பிக்கை

நன்றி இணையம்