2000 #வருடங்களுக்கு_முன்பே #செதுக்கிய_நம்_முன்னோர்கள்
கலை நேர்த்தியும் பண்டைய பாரம்பரியமும் — இந்த சிற்பத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்!
இந்த அற்புதமான சிலையை கவனிக்கவும் —
ஒரு பெண், கையில் கூடையுடன், இடுப்பில் ஒரு பெல்டில் குழந்தையை சுமந்து செல்கிறார்.
இன்று நாம் குழந்தைகளை "#Baby_Carrier"
மூலம் சுமப்பது போல,
பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த மாபெரும் கலைஞர்கள் அதை கற்களில் செதுக்கி வைத்துள்ளனர்.
இந்த சிற்பத்தின் மேன்மை செதுக்கி உருவாக்கிய கலைஞர்களின் துல்லியத்தையும், அந்த காலம் முந்தைய சமூகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்ததையும் காட்டுகிறது.
ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் பாசத்தின் அழகையும், மனித கையால் உருவாக்கப்பட்ட கலைப்பொக்கிஷத்தையும் உணரலாம்.
இன்று கூட நீங்கள் சில பெண்கள் குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு
வேலைக்கு செல்கிறார்கள்
நீங்கள் பார்த்திருக்கலாம்
அதேபோல் இந்த சிலையில் ஒரு பெண் கையில் கூடையுடன் எங்கேயோ செல்கிறார்
அல்லது இந்த சிலையின் பின்னால் ஏதாவது ஒரு புராதான வரலாறுகள் இருக்கக் கூடும் என்று நினைக்கின்றேன்
அந்தக் கூடையையும் எவ்வளவு அழகாக நுணுக்கமாக செதுக்கி உள்ளார்கள்
அந்தப் பெண் அணிந்திருக்கும் ஆபரணங்களும் எவ்வளவு அழகாக செதுக்கி உள்ளார்கள்
இந்த பெண்மணி குழந்தையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு செல்ல இருப்பதை காட்டுகின்றது
பாராட்டுகள் அந்த வித்தக கலைஞர்களுக்கு, பாராட்டுகள் நம் பாரம்பரியத்திற்கு!
ஜம்புகேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ( திருவானைக்கல் ,
ஜம்புகேஸ்வரம் ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு #சிவன்_கோயிலாகும் .