இராப்பட்டீஸ்வரம் சிவன்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:27 PM | Best Blogger Tips

 






திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், இராப்பட்டீஸ்வரம் சிவன்கோயில்

Rapatteeswaram sivan temple

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.



நல்லூரே நன்றாக நட்டமிட்டு

நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்

பல்லூரும் பலி திரிந்து சேற்றூர் மீதே

பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே

இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி

இராப் பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு

எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண

இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

திருநாவுக்கரசரின் 6ம் திருமுறையில் ௨௫ 25 வது பதிகத்தில் ௰ 10வது பாடலில் இந்த வைப்பு தலத்தை பற்றிய குறிப்பு உள்ளது இது திருவாரூர் தலத்துக்குரிய பதிகமாகும்.

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வடக்கில் செல்லும் சாலையில் உள்ளது கோயில். இக்கோயிலின் வடமேற்கில் பாடல் பெற்ற தலம் பெருவேளூர் உள்ளது வடகிழக்கில் கங்காதர ஈஸ்வரர் கோயில் உள்ளது. தெற்கில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது இவை அனைத்தும் சேர்ந்தே மணக்கால் அய்யம்பேட்டை என்று அழைக்கின்றனர்.

இறைவன் - சேஷபுரீசுவரர். இறைவி - அந்தப்புர நாயகி.

சிறப்புக்கள் பல உள்ளன.

௧. மூலவரின் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது, அதனால் சேஷபுரீஸ்வரர் எனப்படுகிறார்.

௨. மேற்கு நோக்கிய திருக்கோயில்

௩. உள் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி சிலை 5 ½ அடி உயரத்திலும் சனகாதி முனிவர்கள் பக்கத்தில் 2 அடி உயரத்திலும் உள்ளனர். இறைவன் இறைவி சன்னதிகளின் இடையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

௪. மூலவர் முன்புள்ள நந்தி, தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதும் ஒரு அதிசயம்.

௫. மேற்கு நோக்கிய பைரவர் 5 ½ அடி உயரத் திருமேனி.

௬. வீணையில்லா சரஸ்வதி

புராண வரலாற்றை விரிவாக சொல்கிறேன் வாருங்கள்;

ராப்பட்டீச்வரம் என்ற பதம் ரிக்வேத ரக்திரி சூக்தம் என்பதில் இருந்து வந்தது, அதுமட்டுமல்லாது காமதேனு இத்தல இறைவனை வணங்கி பட்டி, நந்தினி, விமலை, சபாலி எனும் நான்கு பெண் குழந்தைகளை பெற்றதாலும் ரக்திரி+பட்டி+ஈஸ்வரர் என சேர்ந்து மருவி ராப்பட்டீச்வரம் என ஆனது.

அகத்திய முனிவர் ஆதித்ய ஹிருதய உபதேசத்தை இலங்கையில் போர் நடந்த போது ராமருக்கு உபதேசித்தார். சித்த கிரந்தம் எனப்படும் ஆதிசௌரபுராணத்தில் அகத்திய மகரிஷி மீண்டும் ஆதித்ய ஹிருதய உபதேசத்தை ராமருக்கு இரண்டு பாஸ்கர சக்தி ஷேத்திரங்களில் உபதேசம் செய்தார், என்கிறது. அவையே இந்த ராப்பட்டீச்வரம் மற்றும் சுரைக்காயூர் என்பதாகும்.

இங்குள்ள தக்ஷணமூர்த்தி சரஸ்வதிக்கு ஞானத்தையும் லட்சுமிக்கு வித்யா எனப்படும் கல்வியையும் அளித்துள்ளார் அதனால் இங்குள்ள சரஸ்வதி இரு கைகளிலும் தாமரை ஏந்தி ஞானசரஸ்வதியாகவும், அக்ஷர மாலை கொண்ட வித்யாலக்ஷ்மியாகவும் காட்சியளிக்கின்றனர் என்பது சிறப்பு.

சிவாகம கிரந்தம் சந்தனவித்யா என்றொரு சொல்லுக்கு விளக்கமாக, பல பிறப்புக்கள் எடுக்கிறோம் அதில் கற்கும் கல்வியானது மறுபிறப்பிலும் நம்முள் வாசமாக வருவதை சந்தனவித்யா என்கிறது.இதையே நாம் ஞானம் என்கிறோம், இந்த சந்தனவித்யா எனப்படுவதை இங்குள்ள தக்ஷணமூர்த்தி அளிக்கிறார் என்பது நமையெல்லாம் ஆச்சரியப்படத்தானே வைக்கும்.

இப்படி ஒரு ஞானத்தை வேண்டி சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் தக்ஷணமூர்த்திக்கு சந்தன அபிஷேகம் செய்தால் அவர் நமக்கு இந்த ஆன்ம ஞானத்தினை அளிப்பார்.

ஆலயத்தில் முகப்பு கோபுரமில்லை முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நீண்ட முகப்பு மண்டபத்தின் வாயிலில் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கருவறையில் மேற்கு நோக்கிய இறைவன் சேஷபுரீஸ்வரும், அவரது வாயிலில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புற துவாரபாலகர் அருகில் ஆறடிக்கு உயர்ந்து நிற்கும் பைரவபெருமான் உள்ளார்.

அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அருகில் ஆறடி உயரமுள்ள தக்ஷணமூர்த்தியும் அருகில் சனகாதி முனிவர்களும் 2 அடி உயரத்தில் தனித்தனியே உள்ளனர். கோட்டத்து மூர்த்தியாக இல்லாமல் இறைவன் இறைவி இருவருக்கும் இடையில் உள்ளது சிறப்பு திட்டை ஓமாம்புலியூர் போன்ற ஊர்களில் மட்டுமே இவ்வாறான தரிசனம் கிடைக்கும்.

இங்குள்ள இறைவன் சேஷபுரீஸ்வரர் மேற்கு நோக்கியவர், லிங்கத்தின் மீது பாம்பு போன்ற வடிவம் காணப்படுகிறது, இத்தல இறைவனை ஆதிசேஷன் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளார். இதனால் இது சர்ப்பதோஷ நிவர்த்தி தலம் ஆகும்.

பைரவ பெருமான் மிகவும் வரப்பிரசாதி ஆவார், தேய்பிறை அஷ்டமியில் வாழை இலையில் தயிர்சாதமும் வடையும் பைரவருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இவர் வடகிழக்கில் இருந்தவர் ஆகலாம். பங்குனி 7-11 ௭ -௧௧ தேதி வரை ஐந்து நாட்கள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய ஒளி இறைவன் மீது விழுவது அபூர்வகாட்சி.

உள்மண்டபத்தில் பெரிய விநாயகர் ஒருவர் தென்மேற்கில் உள்ளார் வடமேற்கில் பெரிய முருகனும் வள்ளி தெய்வானையும் உள்ளனர் இவ்விரு மூர்த்தங்களும் வெளி பிரகாரத்தில் இருந்தவர்கள் ஆகலாம்.

கோயிலுக்கு வடபுறம் உள்ள தீர்த்தம் மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மையதாகச் சொல்லப்படுகிறது.

பிரகாரங்களில் வடகிழக்கில் சண்டேசர் சன்னதி பெரியதாக கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் நிலக்கொடை அளித்த விபரங்களே உள்ளன. தென்கிழக்கில் உள்ள மடைப்பள்ளி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

கருவறை கோட்டங்களில் துர்க்கை லிங்கோத்பவர் தென்முகன் உள்ளனர். தென்புற கருவறை சுவற்றிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.தென்புறம் முன்னிழுக்கப்பட்ட மண்டபம் நடராஜர் தரிசனம் காண்பதற்காக இருந்திருக்கலாம். பல சிலைகள் உடைந்தும் சிதைந்தும் ஆங்கங்கே கிடத்தப்பட்டுள்ளன.

பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் சரியான பராமரிப்பின்றி சிதைவடைய ஆரம்பித்துள்ளது. முறையான பூசகரும் இல்லை என்பது காலை நேரத்தில் அடைத்த கதவுகள் சொல்கின்றன. அருகாமை வீட்டில் இருக்கும் வயதான கமலம்மாள் இருக்கும் வரை விளக்கு மட்டுமாவது எரியும்.

#வாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்.

 



நன்றி இணையம்

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 PM | Best Blogger Tips

 









தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.

காலையில் எழுப்பிட அப்பா

வேண்டாம் - Alarm app -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்

வேண்டாம் - step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா

வேண்டாம் - zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து

வேண்டாம் - Uber,OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,

ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்

Google Map இருக்கு!

மளிகை வாங்க

செட்டியார் தாத்தா கடைக்கும்,


அண்ணாச்சி கடைக்கும்

போக வேண்டாம் - Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க

கடைத்தெரு போக வேண்டாம் -

Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட

நண்பன் வேண்டாம் -

What's up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க

பங்காளியும்,அங்காளியும்

தேவையில்லை - Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம

Google டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட

அனைத்தும் இருக்கு.....

App என்னும் ஆப்பு!!!

உள்ளங்கை நெல்லிக்கனியென

நீ நினைக்க !

விரித்திருப்பதோ மீள முடியாத

வலைதளம்.!

சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!

விழித்தெழந்து விடை கொடு..!

செல்லின அடிமைகயாய் இல்லாமல்

உறவுகளோடும் சேர்ந்து ஓர்

வலை பின்னுவோம்.....!

என்றும் அன்புடன் ...

படித்ததில் பிடித்தது ..

 

நன்றி இணையம்


நாரத முனி என்கிற சுப்பிரமணிய சுவாமி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips

 


இந்த நாரத முனி என்பவர் சரஸ்வதியின் புதல்வர், பெரும் அறிவாளி. ஆனால் ஓரிடத்தில் நிற்பவரும் அல்ல, அவரால் ஏற்படாத கலகமும் அல்ல என்றாலும் அவரின் கலகமெல்லாம் நன்மையிலே முடியும்

தனி ஒரு மனிதனாக ஏகபட்ட தர்மங்களை மீட்டெடுப்பவர் அவர், புராணங்களில் தர்மம் வென்ற இடமெல்லாம், நியாயம் செழித்த இடமெல்லாம் அவரின் பங்களிப்பு இருக்கும்

அப்படி இந்திய அரசியலில் மிகபெரும் அறிவாளியும், பெரும் விவகாரங்களை இங்கு செய்வித்து நாட்டுக்கு மகா முக்கிய பங்களிப்பினை செய்தவர் அந்த சுவாமி

சுப்பிரமணிய சுவாமி


அவர் மதுரை பூர்வீகம், சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார், கல்வி அவருக்கு இயல்பாய் வந்தது, எதிரும் புதிருமான கல்வி பிரிவுகளை அனாசயாமாக கடந்தார்

அவருக்கு புள்ளியல் கணிதம் பொருளாதாரம் என எல்லாமும் அழகாய் புரிந்தது, அந்த பெருமையுடன் டெல்லி ஐ.ஐ.டியில் பேராசிரியரானார்

டி.என் சேஷன் போன்ற பெரும் பிம்பங்களுக்கெல்லாம் பாடம் நடத்திய குருநாதர் அவர்

மன்மோகன் சிங் போன்ற பெரும் பொருளாதார மேதைகளின் ‌ ஆய்வு கட்டுரைகளை சிலவற்றில் சாமியின் பங்கும் இருந்தது


மன்மோகன் போலவே சமத்தாக இருந்திருந்தால் சந்தேகமின்றி மன்மோகன் சிங்கின் இடம் சாமிக்குத்தான் கிடைத்திருக்கும், காங்கிரசுக்கு ஜால்ரா அடித்து நாட்டை பற்றி யோசிக்காமல் இருந்திருந்தால் மிகபெரும் இடத்தை சுப்பிரமணிய சாமி பெற்றிருப்பார்

ஆனால் அவருக்கு நாட்டுபற்று இருந்தது, பணமதிப்பினை இந்திரா குறைத்தபொழுது அதை கண்டித்த முதல் நபர் சுப்பிரமணியன் சாமி

அந்த மோதலில் இந்திரா ஒரு பெரும் அநியாயம் செய்தார் , உண்மை சொன்ன சாமியினை ஐ.ஐ.டி விட்டு விரட்டினார்

இந்திராவினை மிக தைரியமாக எதிர்கொண்ட முதல் நபர் சுப்பிரமணியன் சாமியே. இந்திராவின் ஏகாதிபத்திய மனநிலையினை முதலில் கண்டு சொன்னது அவர்தான்

பின் சாமி அகில உலக பிரபலமானார், உலகின் மிகபெரும் பல்கலைகழகமெல்லாம் அவரை கொண்டாடின, அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லா பல்கலைகழகமும் அவரை உரை நிகழ்த்த அழைத்தன‌

சென்னை தமிழன் உலகெல்லாம் மிகபெரும் கல்விமானாக, ஞானவானாக வலம் வந்தார். அவருக்கென தனி இடம் இருந்தது

துர்வாச முனி போல யாருக்கும் அடங்காமல் நியாயத்தை மட்டும் பேசிவந்த அவரை ஜனசங்கம் அதாவது பாரதீய ஜனசங்கம் அடையாளம் கொடுத்து மேல்சபை எம்பி ஆக்கியது, பின் ஜனதா கட்சியில் இருந்தார் சாமி

அதன் பின் பாஜகவில் இணைந்து இன்று மிகபெரும் சக்தி மிக்கவராக வலம் வருகின்றார்

சாமி நினைத்திருந்தால் அமெரிக்காவின் பலகலைகழக பேராசிரியராக அமர்ந்து இன்று கமலா ஹாரிஸ் வலதுகரம் ஆகியிருக்கலாம்

இந்திராவுக்கு அடிபணிந்திருந்தால் இங்கு சோனியா காலத்தில் பிரதமாராகியிருக்கலாம்

அட ரிசர்வ் வங்கியின் நிரந்தர ஆளுநரகாகியிருக்கலாம், பாஜகவுக்கு முழு அடிமையாகியிருந்தால் இந்நேரம் மாநில கவர்ணர், உள்துறை அமைச்சர் என கம்பீரமாக வலம் வரலாம்

ஆனால் சாமி அப்படி அல்ல, அவர் மனதில் பட்டதை மகேசனே முன் நின்றாலும் அஞ்சாமல் கூறும் சிங்கம்

இதனால் அரசியலுக்கு அவர் தேவையில்லை என்பது பலரின் முடிவு, அரசியல் அறத்துக்கு அப்பாற்பட்டது

ஆனால் சாமி அறம் ஒன்றே தர்மம் என தனித்து நிற்பவர், அந்த அறமே இன்று அவருக்கு தனி அடையாளம் பெற்று கொடுத்தது

இன்றும் மோடிக்கு எதிரான தலமை இல்லை எனும் நிலையில் சாமி ஒருவர்தான் அவருக்கும் சில நேரம் குடைச்சல் கொடுக்கின்றார்

அதுதான் சுப்பிரமணியன் சாமி, அதுதான் நாட்டுபற்று

சாமியின் சாதனைகள் ஏராளம் உண்டு. இந்திராவின் பொருளாதார திட்டத்தை எதிர்த்து நின்றது முதல் அவர் ஈழத்தில் தலையிட்டு புலிகளை வளர்த்தது வரை துணிச்சலாக எதிர்த்தவர் சாமி

காஷ்மீர் முதல் தமிழகம் வரை எங்கெல்லாம் தேச ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளையுமோ அங்கெல்லாம் சாமி முதல் ஆளாக இருப்பார்

அப்படியே இந்துக்களின் நலன் காக்கவும் அவர் முதல் ஆளாக நின்றார் சேது பாலத்திற்கு தடை வாங்கியது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றது என ஏராளம் உண்டு

திருப்பதி கோவிலுக்குள் தங்க கவசம் பொருத்தும் முயற்சியை அவர் தடுத்ததிலும் விஷயம் இருந்தது

கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலையை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது.அரசாங்கத்தின் பிடியில் இருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது என்பதெல்லாம் குறிப்பிடதக்கவை

திருப்பதி கோவில் சொத்துக்களை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்ய உத்தரவு பெற்றவர்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997–ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரி மாதம் 27–ம்தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்த தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தர்மம் எப்பொழுதும் அதர்மத்துக்கு எதிராய் ஒரு சக்தியினை நிறுத்தி அதை காத்தும் நிற்கும், அப்படி திமுக அதிமுகவின் அராஜகங்களை தனி மனிதனாக எதிர் கொண்டு நின்று வென்றவர் சுப்பிரமணியன் சாமி

எல்லோரும் வாய்பேச அஞ்சிய காலத்தில் புலிகளை கிழித்தவர் அவர்தான், ராஜிவ் பற்றி புலிகள் வெளியிட்ட அறிக்கையினை உன்னிப்பாக கண்ட அவர், அக்கொலை நடந்ததும் இதை செய்தது புலிகள் என தெளிவாக சொன்னார்

புலிகள் இந்தியாவினை நம்பி இருக்க வேண்டியவர்கள் என அவர்களை கணக்கில் எடுக்கா விசாரணை குழு பின் புலிகள்தான் குற்றவாளி என கடைசியாக கண்டறிந்தது

இந்த அதீதமான முன்னெச்செரிக்கைதான் சாமி

முக அழகிரியினை மதுரையில் முதலில் எதிர் கொண்டவரும் அவரே, ஜெயாவின் ரவுடி கூட்டத்தால் சந்திரலேகா மேல் அமிலம் ஊற்றபட்ட காலங்கலில் உயிர் ஆபத்தினை சந்தத்தவரும் அவரே

கருணாநிதி என்பவர் ஜெயலலிதாவினை பலவீனபடுத்த சில வலுவில்லா வழக்குகளை தொடுத்திருந்ந்தார், அதிமுக பலம் குறையவேண்டுமே அன்றி அழிய கூடாது எனும் அரசியல் அதில் இருந்தது

சுப்பிரமணிய சாமி தொடுத்த வலுவான வழக்கே பின் ஜெயாவுக்கும் சசிகலாவுக்கும் எமன் ஆனது, இல்லையேல் இன்று சசிகலா முதல்வராக வீற்றிருப்பார்

2000க்கு பின் டெல்லியில் மிகபெரும் ஊழலை செய்த திமுகவினை கேட்க யாருமன்று இருந்த நிலை இருந்தது, அந்த ஸ்பெக்ட்ரம் எனும் மிகபெரிய முறைகேட்டினை சுவாமிதான் வெளி கொண்டு வந்தார்

தமிழகம் என்றல்ல கர்நாடாகவிலும் 1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஹெக்டெ ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதாக சுவாமி தொடர்ந்த வழக்கில் ஹெக்டே ராஜினாமா செய்தார்

இன்றும் காங்கிரஸின் தூக்கத்தை கெடுக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கினை வெளி கொண்டுவந்தவர் அவர்தான்

அலகாபாத் நீதிமன்றம் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியிருந்தது, அதை விரைவுபடுத்த உயர்நீதி மன்றம் சென்றவர் சாமிதான், அந்த வழக்குத்தான் வெற்றியாய் முடிந்தது

ஒரு மனிதன் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எதிராக ஒரே நேரத்தில் இயங்கமுடியுமென்றால் அவனிடம் 100% உண்மை இருக்க வேண்டும், அது சாமிக்கு உண்டு

இன்று சாமிக்கு பிறந்த நாள்.

எத்தனையோ முனிகள் இருந்த பாரதத்தில் துர்வாசருக்கு தனி இடம் உண்டு. அவர் கோபக்காரர் என்பார்கள், ஆனால் அவருக்கு நியாயமான விஷயங்களில்தான் கோபம் வரும், அந்த கோபம் உலகுக்கு நன்மையாய் முடியும்

அப்படி இன்று யார் வலையிலும் சிக்காமல் தனக்கென தனிபாதை வகுத்து கிட்டதட்ட 80 வயதிலும் ஆளும் கட்சி எதிர்கட்சி என எல்லோருக்கும் சிம்ம சொப்பணமாய் வலம் வரும் சுப்பிரமணியன் சாமி ஒரு அதிசயம்

4 வார்த்தை ஆங்கிலத்தில் பேசதெரிந்தாலே மேதாவி என கருதும் பதர்கள் இருக்கும் உலகில் ஐ.ஐ.டி பேராசிரியர், அகில உலக பேராசிரியர் என்ற நிலையில் இருந்தும் பணிவாக நிற்கும் சாமி ஒரு அதிசயம்

10ம் வகுப்பு தாண்டினாலே தான் இந்தியாவில் இருக்க கூடாதவன் அமெரிக்காவில் குடியேற தகுதியுள்ளவன் என கருதுவோர் மத்தியில் அமெரிக்க பல்கலைகழக வேலையினை விட்டு வந்த சாமி ஒரு அதிசயம்

படிப்பும் சம்பாதிக்க, அரசியலும் சம்பாதிக்க என நினைக்கும் உலகில் இரண்டும் நாட்டு மக்களுக்காக என வந்து நிற்கும் சாமி ஒரு அதிசயம்

அரைகுறை படிப்போடு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் ஏதோ பிரிட்டிஷ் பரம்பரை போல் அங்கேயே தங்கிவிடும் இந்தியர் மத்தியில், இந்தியாவினை மறப்போர் மத்தியில், விசா இன்றியே அந்நிய நாடுகளில் தங்கிவிடுவோர் மத்தியில் பெரும் வாய்பிருந்தும் அதை புறந்தள்ளி தேசம் என வந்து நிற்கும் சாமி அதிசயம்

தன், தன்வீடு, தன் படிப்பு , தன் குடும்பம் என்போர் மத்தியில் நாடு, நாட்டு மக்கள் தேசியம் என நிற்கும் சாமி அதிசயம்

மிகபெரும் படிப்பிருந்தும் , பல்கலைகழகமே நடத்தும் தகுதி இருந்தும் அதையெல்லாம் தூக்கி எறிந்து நல்ல சமூகம் உருவாக, அது உண்மை தெரிந்து தேசியத்தில் கலந்து வளர பாடுபடும் சாமி ஒரு அதிசயம்

கவுன்சிலர் தேர்தலில் வென்ற நினைப்பில் அவனவன் முதல்வர் பதவிக்கு குறிவைக்கும் காலத்தில் பதவிக்கு ஆசைபடாத அவர் ஒரு அதிசயம்

உண்மை பேசாமல் இருக்க மந்திரி பதவி, கொள்ளையடிக்க மந்திரி பதவி என கொள்கை கோட்பாடு எதுவுமன்றி சம்பாதிப்பவர் மத்தியில் பதவி வேண்டாம், நாட்டில் சத்தியம் நிலைக்க வேண்டும் என பாடுபடும் சாமி ஒரு அதிசயம்

புலிகள் இருக்கும்பொழுது ஒரு நிலப்பாடும், அவர்கள் அழியும் போது ஒரு நிலைப்பாடும் எடுப்போர் மத்தியில் கடைசிவரை புலிகளை தேசவிரோதிகள் என சொல்லி நின்ற அந்த தைரிய சாமி ஒரு அதிசயம்

சுப்பிரமணியம் சாமி போன்றவர்கள் மிக மிக அரிதானவர்கள், அப்படி ஒருவர் கிடைக்க இத்தேசம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

திராவிட இம்சைகளின் தமிழகத்தில் அவரின் பெருமை ஒரு காமெடியன் போல சித்தரிக்கபட்டிருக்கலாம்

ஆனால் யாருக்கும் இல்லா மிகபெரும் பெருமையும் ஆளுமையும் அறிவும் நாட்டுபற்றும் மத அபிமானமும் அவருக்கு உண்டு

சாமி மதவெறியர் அல்ல மத நெறியர், ஆம் அவரது மகள் இஸ்லாமியரைத்தான் திருமணம் செய்தார், அதை சாமி வரவேற்றார்

இதுதான் சுப்பிரமணியன் சாமி

இன்றும் தேசவிரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பமணமாகவும், ஆளும் கட்சி தவறான முடிவெடுத்தால் மண்டையில் கொட்டி ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகவும் அவரே விளங்குகின்றார்

மாரிதாஸ் மேல் திமுக வழக்குகளை தொடுப்பதை கண்ட சாமி, மாரிதாஸுக்கு ஆதரவாக ஒரே ஒரு டிவிட் போட்டதில் திமுக மகா அமைதி

ஆம், சாமியின் பலம் அவர்களுக்கு தெரியும். அதுதான் சாமி

இன்று 80 வயதை கடக்கும் சுப்பிரமணியன் சாமி , இன்னும் நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு மகத்தான தொண்டுகளை செய்ய

வாழ்த்துக்கள்

சாமியிடம் ஒவ்வொரு இந்திய மாணவனும் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் நிறைய உண்டு

அவரின் கல்வி, தைரியம், நாட்டுபற்று, பதவிக்கு ஆசைபடா தன்மை, பணபற்று இல்லாமை மகா முக்கியமாக அவரின் ஒழுக்கம்

இன்றுவரை தனிபட்ட ஊழலோ இல்லை இதர விவகாரங்களிலோ சிக்காத மிகபெரிய கண்ணியவான் அவர், அதனை அவரின் எதிரிகளும் மறுக்க முடியாது

எவ்வளவு எதிர்ப்புகள்? எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு ஆபத்தான சவால்கள்?

சாமி அதை எப்படி கடந்தார்? உண்மையினை பேசுவோர் மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல இடங்களில் வெட்டியும் , சுட்டும் கொல்லபடும் நாட்டில், வெடிகுண்டிலோ விஷ உணவிலோ கொல்லபடும் நாட்டில் சாமி இதுகாலமும் எப்படி தப்பி வந்தார்?

தர்மம் அவரை காத்து வருகின்றது, அவர் காத்த உண்மைகள் சத்தியமாய் அவரை காத்து நிற்கின்றன.

சுப்பிரமணியன் சாமியின் வாழ்வும் தொண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டிய பாடம்

சமயநூல்கள் உண்மையினை சொல்லும் என்பது போல, சாமியின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை என்பதுதான் அவரின் பலம், மிகபெரும் பலம்

நாட்டுக்காய் வாழும் ஒரு தவமுனியின் அந்த வார்த்தைகள் எக்காலமும் உண்மை ஒன்றே சுமந்து வந்தன,வருகின்றன இன்னும் வரும்

ஒரு காலம் வரும், அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மிகபடித்த அறிவாளி, மிகபெரிய கல்விமான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைபடாமல், வளமான வாழ்க்கைக்கும் சுகமான வாழ்க்கைக்கும் ஆசைபடாமல் , உயிரை பணயம் வைத்து உண்மை பேசினான் என்றால் அப்பொழுது சுப்பிரமணியன் சாமியினைத்தான் தேசம் கைகாட்டும்

காமராஜர், கலாம் போலவே தமிழரின் மிகபெரும் அடையாளம் சுப்பிரமணிய சுவாமி

சுப்பிரமணியன் என்றால் காக்கும் தெய்வம் என பொருள்

அப்படி தேசத்தின் மிகபெரிய காவல்காரனுக்கு , ராஜ குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது தேசம்

வாழ்க நீ எம்மான்.. இந்நாடு பயனுற வாழ்வதற்கே.

 


நன்றி இணையம்