*எப்படி உடம்பைக் குறைக்கலாம்?*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:14 PM | Best Blogger Tips*(இதோ அதற்கான வழிமுறைகள்!*
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள்குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும்.கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச்சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரியசிறந்த வழிமுறைகளாகும்.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும்ஒரு வழிமுறைகளே.. உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..! 🌳🌳🌳🌳
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!🌿🌿🌿🌿🌿
Good night 🌜my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams 
🍫& Sleep well!💤 Have a lovely happy tomorrow too..!💕💕
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!🙏ஓம் சிவ சத்தி ஓம் 🙌-என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran


*விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:01 PM | Best Blogger Tips


*1. மச்ச அவதாரம்-*
உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.
*2. கூர்ம அவதாரம்-*
reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
*3. வராக அவதாரம்-*
mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி. விலங்கு உயிரினம்.
*4. நரசிம்ம அவதாரம்-*
பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
*5. வாமண அவதாரம்-*
குள்ள மனிதன்...
பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்...
*6. பரசுராம அவதாரம்-*
மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
*7. ராம அவதாரம்-*
விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
*8. பலராம அவதாரம்-*
வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
*9. கிருஷ்ண அவதாரம்-*
சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்
*இந்து மதம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளுடன் கலந்து உருவான ஒரு கலாச்சாரம் ...*

 நன்றி இணையம்