மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து - ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது???? என்ன தீர்வு காணவேண்டும்???? {கேள்வி:சக்தி , கணேஷ்... இன்னும் சிலர்}
சில குட்டி தகவல்களைச் சொல்லிவிட்டு நான் கேட்க வந்ததைக் கேட்கிறேன்:
10 ஆம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ராஜா ராஜா சோழன் 17வகை வைரங்கள் முத்துகளை மட்டும் அல்லாமல் பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை அளித்தான். திருவெற்றியூர் கோவிலுக்கு தங்கத்தால் ஆணா கதவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அத்துடன் பூஜைக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை.
நான் படித்தவரை எனக்குத் தெரிந்து இந்து கோவில்களின் பெரும்பாலான பெரும் கோவில்கள் (தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000க்கும் மேல் இருக்கும் நிர்வாக ரீதியாகப் பெரிய கோவில்கள்) அனைத்துக்கும் தங்கத்தால் ஆணா பூஜை சாமான்கள் தான் இருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நன்கொடைகளுக்கு ஆதாரங்கள் தேடினால் தலை சுற்றுகிறது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1250களில் கொடுத்த நன்கொடைகள் மட்டுமே சில ஆயிரம் கோடி பெறுமானம் ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அலாவுதீன் கில்ஜி தளபதியாக இருந்த மாலிக் கபூர் தாக்கி அதில் இருந்த பல ஆயிரம் செல்வங்களை கொள்ளை அடிக்க - அவனை விரட்டி அடித்து மீண்டும் நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டி எழுப்பியது நாயக்கர்கள் தான். நன்கு புரிய வேண்டும் வைணவமும் சைவமும் இரண்டும் சமமாக நிற்கும் இடம் சங்கம் வளர்த்த மதுரையைச் சுற்றி கோவில்பட்டி வரை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றன இந்து ஆலயங்கள். மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்து கொண்டாட்டங்கள் தொட்டும் அனைத்துமே மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைத்துவிட்டுச் சென்றனர் நமது முன்னோர்கள்.
கிருண தேவராயர் காலத்தில் மீனாட்சி அம்மன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் , மதுரை கள்ளழகர் என்று இந்த மூன்று கோவிலுக்கு அவர் வழங்கிய பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆபரணங்களுக்குக் குறிப்பு மட்டும் தான் அதை இப்போது எங்கே இறுக்கு என்று தெரியாது ராமேஸ்வரம் கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் மூன்று முறை அவர் எடைக்கு நிகராக தங்கம் வழங்கியதாகத் தகவல்.
அய்யா இந்த பத்மநாபன் கோவிலில் கண்டிபிடிக்கபட்ட 1லட்சம் கோடி மதிப்பிலான தங்கள் புதையல் எல்லாம் வெறும் 0.001% கூட கிடையாது இந்த நாட்டில் இந்து கோவில்களின் செல்வச் செழிப்பில். இந்த பத்மநாபன் கோவில் இன்று தான் கேரளாவில் இருக்கலாம். அன்று நிர்வாகம் இங்கே இருந்து தான் இருந்தது. அந்தச் சின்ன கோவிலுக்கே 1லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நாம் தங்க வைர நகைகளாகக் கண்டெடுக்க முடிகிறது என்றால் எங்கள் மதுரை மீனாட்சிக்கு மதுரையே சொத்து தானே.
சிவனடியார்களுக்கு 12 ஜோதிலிங்க தளங்களில் முதலாவதாக இருந்த சோமநாதர் ஆலயத்தை தாக்கி அதைத் தொடர்ந்து சூறையாடி அதில் இருந்த பல லட்சம் கோடி பதிப்பிலான செல்வங்களை 17முறை கொள்ளை அடித்தான் கஜினி முகமது. அவன் ஒன்றும் நாடு பிடிக்கவோ இல்லை எதிரிகளுடன் சண்டை போடவோ இங்கே வரவில்லை. கொள்ளை அடிக்கத் தான் வந்தான் அடித்தான். {ஆனால் வெக்கமே இல்லாமல் நாம் வரலாற்று அவனை மாவீரன் என்று படித்தோம். இதில் படத்தின் தலைப்பு வேறு கஜினி.} ஒவ்வொரு முறையும் பல லட்சம் கோடி செல்வங்களைக் கொள்ளை
இதை ஏன் கூறுகிறேன் என்றால் : கஜினி ஒரே ஒரு முறை மட்டும் அடித்த கொள்ளையின் மதிப்பில் வெறும் தங்கத்தை மட்டும் கணக்கிட்டாலே சுமார் 3000கிலோ தங்கம் என்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போது மற்றவை மதிப்பு???? அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பன????இது ஒரு சேம்பில்... அடுத்து வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தந்திரமாக கொள்ளை அடிக்கும் வேலைத் தொடர்ந்தது.
இப்படி இங்கே ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.
-----------------------------------------------------------
நிறுத்துங்கள் போதும் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு. இப்போது அதுக்கென்ன?
ஏறக்குறைய 36,488 கோயில்கள், 56 மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன இவை அனைத்தையும் இந்து அறநிலை துறை என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். காரணம் அந்தச் சொத்துக்கள் சில தனி நபர் குடும்பங்கள் மட்டும் சாப்பிட்டு அனுபவித்து வருவதாக வந்த பிரச்சனை. (இந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசு கஜானாவை நோக்கி திருப்பினர்.)
ஆண்டு வருவாய் சராசரியாக 55 கோடி என்று கணக்கு காட்டுகிறது நமது தமிழ் நாடு இந்து அறநிலை துறை.
இதைப் படிக்கும் உங்கள் அனைவரையும் நான் நியாயமாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. கொஞ்சம் மனசாட்சிக்கு கட்டுபட்டு பதில் கூறுங்கள் திருமலை திருப்பதிக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 1000கோடி. ஆனால் தமிழகத்தில் 36,488 கோயில்கள் மொத்த வருமானம் 58கோடி தானா???? இதை நம்பினால் ஒன்று நான் மனநிலை சரி இல்லாதவன்- இல்லை நம்மை பைத்தியக்காரனாக இந்த இந்து அறநிலையத்துறை அரசு அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.
மதுரை அருகே மடப்புறம் காளியம்மன் கோவில் இறுக்கு - அங்கே நீங்களே போங்க ஒரு சர்வே எடுங்கள் அந்தச் சின்ன கோவிலுக்கு மட்டும் தாராளமாக வாரம் சில லட்சம் வருமானம் உண்டு. அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் கவர்ந்து இழுக்கும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் வருமானம் ?????
அதாவது இவனுக காட்டுற கணக்குபடி பார்த்தால் ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் 13703ரூபாய். அதாவது தினமும் ஒரு கோவிலின் வருமானம் 37ரூபாய்.
சத்தியமா நம்புங்கள் ஒரு கோவிலுக்கு 37ரூபாய் தான் தினமும் வருமானம் வருகிறது. மீண்டும் கூறுகிறேன் 37ரூபாய்!!!!
நீங்களும் நானும் பைத்தியக்காரன் - இந்தக் கணக்கு காட்டும் அறநிலையத்துறை என்ற கழகத்தின் உடன்பிறப்புகளின் வீட்டு நாய்க்குட்டியாக செயல்படும் அதிகாரிகள் எல்லாரும் புத்திசாலிகள்?????
இதை விட இந்த நாட்டில் வேறு ஒரு நாசகரமான செய்தல் உண்டா?????இதை எல்லாம் நம்பினால் உங்களை விட மட சாம்பிராணி வேறு ஒருவன் கிடையாது. திமுக காரனுக்கு எல்லாம் நலல் சாவே வராது. சிவன் கோவில் சொத்து அடித்து பிழைப்பு நடத்தி இன்று பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த திமுக கருணாநிதி வகேரா அனைவரையும் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவில்லை என்றால் இந்த அநியாயத்திற்கு ஒரு தீர்வே கிடைக்காது.
ஒரு சின்ன கணக்கு மட்டும் கேளுங்கள் :
ஒரு கோவிலுக்கு இன்றைய மதிப்பில் சராசரியாக 5லட்சம் வருமானம் என்று வைத்தால் கூட ஆண்டுக்கு 1824,40,00,000... அதாவது சுமார் 1824கோடி வருமானம் பத்தர்கள் காணிக்கை மூலமே காட்டமுடியுமே. இது தவிர கோவில் சொத்துக்கள் உண்டு. அதை வாடகைக்கு விடுவது முதல் ஒத்திக்கு விடுவது வரை அதன் மூலம் வருமானம் என்றாலும் கட்டாயம் இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 10,000கோடி வருமானம் மிக எளிதில் ஈட்டலாம். மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி இருக்கும் பல ஆயிரம் கடைகளை முறையாக வழூல் சேந்தாலே 1000கோடி வருமானம் எல்லாம் மிக சாதாரணம்.
எனவே இந்த வருமானங்கள் மட்டும் அல்லாமல் மடங்களுடைய சொத்துக்கள்?????
இந்தச் சொத்து வருமானத்தைக் கொண்டு எத்தனைப் பள்ளிகள் நடத்தலாம் ! எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம்???? எத்தனை ஆலயங்கள் கட்டலாம்???? கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு கிருஸ்தவ மக்களுக்கும் , ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கும் உரிமை தானே இது????? அட வருமானத்தை எடுத்து சமய பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் வேத பள்ளிகள் ஆரம்பிக்கலாமே!!!
இது என்ன நியாயம்???? குறைந்த பட்ச நியாயம் கூட கிடையாது இது. முழுக்க திட்டமிட்டு கொள்ளை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளில் மிக மிக பெரிய கொள்ளை இது என்று தாராளமாக கூறலாம்.
------------------------------------------------------------------
இதில் கொஞ்சம் கூடச் சகித்து கொள்ள முடியாத இன்னொரு அநியாயம் வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் மாணவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அது
உலகத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியம் மிக்க புராணகாலத்து வழிபாட்டுத் தளங்கள் எல்லாமே முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வயது 1500 முதல் 2000வருடம் மேல் பழையவை. ஆகையால் தீவிரமாக அதன் கட்டிட அமைப்பைக் கண்காணிக்க வேண்டும். சரிதானே.
SCTNH - saudi commission for tourism and national Heritage மூலம் சென்ற ஆண்டு சவுதி அரசு வரலாற்று முக்கியமான 8 மசூதிகளை மீண்டும் சீரனமைகும் பணியை அறிவித்தது. இது போல் உலக நாடுகள் அனைத்துமே அவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் restore செய்யும் வேலையை ஆக முக்கியமான பணியாக செய்வர்.
காரணம் அவை தான் அவர்கள் வரலாறு - அவை தான் அவர்களின் முன்னோர் ஆன்மவியல் வெளிப்பாடு. {ஆயிரம் குறைகள் சமூகத்தில் இருந்தாலும் அது அனைவருக்குமான சொத்து} அதை அதே உணர்வை வெளிப்படுத்தும் விதமாக - அதன் ஆன்மாவை அப்படியே மீண்டும் உயிர்பெறச் செய்யும் வேலை தான் Restoration.
இதற்கு உங்களுக்கு வரலாறு மட்டும் அல்ல archaeology , anthropology,paleontology,art என்று துறை சார்ந்த அறிவு மட்டும் அல்ல - அதையும் தான் அந்தப் புனிதமான பழமையான கட்டிடங்களை , பழமையான பொருட்கள், கல்வெட்டுகள், குறிப்புகளைக் காதலிக்கும் குணம் வேண்டும்.
அப்படி கோவில்களை சீரமைக்கும் பணி இங்கே எப்படி இருக்கு??
கோவில் கட்டட அமைப்பில் இடைவெளி விழுந்திருக்கு அதில் சிமின்ட் வச்சு பூசுரானே இவன் எல்லாம் நல்லா இருப்பானா???? பாரம்பரியம் மிக்க கோவில்களில் இப்படி ஏற்படும் சிதைவுகளை உரிய ஆய்வாளர்கள் கொண்டு ஆய்வு செய்து தக்க சீரமைக்கும் பணி செய்யுங்கடா என்றால் - சிமின்ட் வச்சு பூசுரேயே நீ எல்லாம் எதற்கு உயிரோட இருக்க???
History Tv அப்படியென்று ஒரு டீவி வரும் அதில் "king of Restoration" அபப்டின்னு ஒரு புரோகிராம் இரவு 9மணி அளவில் போகும். அதை கொஞ்சம் பாருங்கள் சின்ன சின்ன 100வருடம் பழமையான பொருளுக்கே அவ்வளவு மெனக்கெட்டு அதை அந்த காலகட்டத்தில் இருபது போலவே Restoration செய்வர். அப்படி உலகத்தில் Restoration என்பது மிக நுட்பமான அதி முக்கயமான ஒன்றாக இருக்க இங்கே நம்ம அறநிலையத்துறை அதிகாரிகள்???? நீங்கள் எல்லாம் எப்படி முறையாக பயிற்சி பெற்று வருபவர்கள் தானே????
உங்களக்கு என்ன பயிற்சி தரங்க என்று எனக்குப் புரியவில்லை. எப்படி திமுக காரனிடம் சலாம் போடுவது. அவனைத் தாஜா பண்ணி எப்படி கோவில் சொத்தை திருடலாம் என்றா பயிற்சி தரங்க . இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.
-----------------------------------------------------------
இப்போது அவசியம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால்:
கருணாநிதி 1967முதல் ஆட்சிக் காலத்தில் இருந்து அவர் கடைசி ஆட்சிக்காலம் (அதிமுக ஆட்சியையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்) வரை எந்த எந்தச் சொத்துக்கள் எப்படிக் கைமாறின எங்கே யார் விற்றார் யார் எவ்வளவுக்கு வாங்கினார் என்று மொத்த சொத்து விசாரணையும் தனியாக சிபிஐ மூலம் நடத்த வேண்டும் என்பது தான் எனது முதல் வேண்டுகோள்.
கேள்வி கேட்பாரற்ற கோவில் சொத்துக்களை இடம் கண்டு , அதைப் பட்டா மாற்றி அதை விற்று கோடி கோடியாக கவுன்சிலர் முதல் கருணா வரை அனைவரும் கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவது தான் முழு நேரம் வேலையாகக் களத்தில் இந்த 60வருடம்- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு ஊழியர்களைக் கையில் வைத்துக் கொண்டு சிவன் சொத்தை திருடியது தான் இவர்கள் செய்த முதல் வேலை. எனவே நீதி விசாரணை வேண்டும்.
மக்கள் சொத்தையே மிரட்டி உருட்டி வாங்கி ரவுடி தனம் செய்த இந்தக் கழக ஆட்சியர்கள் - கோவில் சொத்தையா விட்டு வைப்பார்கள்??????? நான் 100% நம்புகிறேன் இங்கே பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை கழக உடன்பிறப்புகள் திருடி இருக்கும். அதற்கு நீதிவிசாரணை தேவை. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை. அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன் உடனடியாக அனைத்து இந்துக்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க ஒன்றுபடுங்கள்.
அனைத்துக் கோவில் சொத்துகளையும் - திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த சொத்து பரிமாற்றங்களையும் ஒவ்வொரு கிராமம் , நகரம் , ஊராய்சி விடாமல் புலன் விசாரணை அமைக்கவேண்டும் என்று கேட்டு கொள்வேன்.
ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு இங்கே உணர்வை தூண்டி பேசி திரியும் முட்டாள்கள் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது
"ஒரு சமூகத்தின் மக்கள் பற்றிய வரலாற்று விவரங்களை எதனை கொண்டு உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் - வரலாற்று ஆய்வாளர்கள் வெளிபடுத்துவார்கள் தெரியுமா???? அந்த பண்டைய மக்கள் மொழி , அவர்கள் சமூக பழக்க வழக்கங்கள், ஆட்சியாளர்கள் ஆட்சி முறை , உணவுகள் இவைகளை தாண்டி - அவர்களின் தெய்வ வழிபாட்டு முறைகளின் மூலம் தான் அந்த மக்களின் பழமையும் நாகரீகமும் உலகத்திற்கு வெளிபடுத்துவர் archaeology , anthropology,paleontology என்ற துறைகளை சார்ந்தவர்கள் இதை தான் தேடுவர். ஆக இங்கே இருக்கும் பழமையான கோவில்கள் சித்திரங்கள் பண்டைய மக்களின் வாழ்வியல் அடையாளங்களை இங்கே பாதுகாக்க வக்கு இல்லாத நீங்கள் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் போய் என்னத்த தேடு போறேங்க????? அரசியல் மொழி அரசியல் செய்றேங்க வேற எந்த எழவும் இல்லை இந்த ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு என்று அடிக்கும் கூத்தில்.
ஏன் உங்கள் மாநிலத்தில் வரலாறு படிக்கும் மாணவர்கள் இல்லையா. அவனிடம் 10கோடி கொடுத்து புதிய தொல்லியல் துறைக்கு தேவையான நவீன கருவிகள் மூலம் உங்கள் பண்பாட்டை நீங்களே தேட வேண்டியது தானே?????? வெக்கமே இல்லையா உங்கள் யாருக்கும்????? இங்கே சிலை முதல் அனைத்தையும் திருடி வித்து தின்ற காசில் கொஞ்சம் நன்கொடை கொடுத்து அமெரிக்காவில் போய் அடையாளம் தேடுகிறாய உன்ன எதை கொண்டு அடித்து திருத்துவது. அந்த பல்கலைகழகம் ஆய்வாளர்கள் இங்கே வந்து இங்கே ஆய்வு செய்துவிட்டு சிலை எல்லாம் திருடிடாங்கே , பழைய பாரம்பரியமிக்க இடம் எல்லாம் பராமரிக்காம விட்டுடு எத தேடி எங்க பல்கலைகழகம் வந்தேங்க நீங்கள் எல்லாம் என்ன பைத்தியமா என்று கேட்பானே????? அப்போ "கல் தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடிங்க" அப்டின்னு அவனிடம் சொல்லாதா - கேவலாமா சிரிப்பான்".
இன்னும் கொஞ்ச நாள் நீ திமுக என்ற கட்சியை நம்பினே "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது ஈவே ராமசாமி பெரியார்னு கதை சொல்லுவான்" காத்திரு. ஏன் என்றால் இங்கே இவனுக தானே எல்லமே செய்தாணுக. இவனுக இல்லைனா எதுமே இல்லேன்னு சொல்லி திரியுரானுக. எனவே இவனுகளை இன்னும் எத்தனை நாள் நாம் நம்புவோம் என்று நானும் பார்க்கிறேன்.
{இன்று இஸ்லாமியராக , கிறிஸ்தவராக பலர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் இது தான் முன்னோர் அடையாளம். எனவே இது ஒட்டுமொத்த மக்களும் ஒன்று சேர குரல் கொடுக்கவேண்டிய ஒன்று.}
------------------------------------------------------------
இறுதியாக :
2014ல் மோடி ஆஸ்திரேலியா பயணத்தின் போது தமிழ் நாட்டின் சோழர்கள் காலத்து 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாதீஸ்வரர் சிலை இன்றைய மதிப்பு சுமார் 180கோடி. அந்தச் சிலையை மட்டும் சில ஆயிரம் மதிப்பு உள்ள சிலைகளை National Gallery of Australia (NGA) இருந்து மோடி மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டு வந்தார். எப்படி அங்கே ?????
இது வரை நடந்த கொள்ளைகள் கூட எதோ மனசு வலி தரும் செய்தி - இனி நடக்காது பாதுகாக்கலாம் என்றால் ஆனால் இந்தத் தெய்வங்களின் சிலை திட்டு தாங்க முடியாத கொடுமை.
கோவிலின் சிலைகளையும் திருடிக் கடத்திவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைத்து கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல் திருடுவது மட்டுமே கழகங்களின் கொள்கை என்று இந்தத் திராவிட கழகங்கள் வேலை செய்ய - எவன் நாசமா போன எனக்கென்ன எனக்குத் தேவை காசு, லஞ்சம், ஊழல். அதைக் கொடுத்தால் எவன் காலையும் நக்கிப் பிழைப்பு நடத்துவேன் என்று திரியும் அரசு ஊழியர்கள் என்ற கேடுகெட்ட கூட்டம் ஒன்று அதுவும் சேர்ந்து கோவிலைக் கரையான் கூட்டம் போல் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நாசம் - சர்வ நாசம் செய்வது என்ன விதம் சரி?
மதுரை கிராமத்து பெண்கள் குரலில் சொன்னால் "சாமி சிலையை திருடிக் கடத்தி விற்று காசு தேடும்- சிவன் கோவில் சொத்தைத் தின்று வாழும் உன் குடும்பம் உருப்படுமா? உனக்கெல்லாம் நல்லசாவு வருமா?? உன் தலைமுறை உருப்படுமா???? உன் வாரிசுகள் வெளங்குமா???? இந்த சாமி சிலை திருடி திரியும் அறநிலை துறை அரசு ஊழியர்கள் ஆரம்பித்து கழக உடன்பிறப்புகள் வரை எவன் எல்லாம் இதில் உடந்தையோ அவனை எல்லாம் தூக்கில் தொங்கவிடவேண்டும்".
முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் இன்றைய திடீர் போராளி ஐநா புகழ் திருமுருகன் காந்தி முதல் செபாச்டீன் என்றால் பெயரைச் சீமான் என்று மாற்றிக் கொண்டு தமிழன் இந்து இல்லை என்று 2005களில் தெய்வநாயகம் , சற்குணம் போன்றவர்கள் பரப்பிய அதே பல்லவியை தமிழன் என்று பிரிவினை பேசி பரப்பும் இந்த ஓநாய் வரை எந்த போராளி குரல் கொடுப்பான்?????
எப்படி குரல் கொடுப்பான்???? இங்கே இருக்கும் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இந்து மத எதிர்ப்பு தான் - அனைவரையும் உருவாக்கி விட்டது திக என்ற பெரியாரிய கூட்டம் தானே. பின்ன எப்படி குரல் கொடுப்பான்.
நான் மாரிதாஸ் நேரடியாகக் கேட்கிறேன் உங்கள் அனைவரையும் :
இவ்வளவு பட்டவர்த்தனமாக கொள்ளை அடித்துவிட்டு - பிரசன்னா என்ற திமுக காரனை விட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை அவமானமாகப் பேசவும் விடுகிறான் திமுக காரர்கள் என்றால் யார் கொடுத்த திமிறு இது????? ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்று கேள்வி கேட்டால் " அது திமுக கொள்கைக்கு எதிரானது" என்று வெளிப்படையாகக் கூறுவான் என்றால் என்ன திமிர் இவர்களுக்கு????
ஆகா கோவில் செல்வத்தைக் கொள்ளை அடித்தோம் , கோவில் சொத்துக்களை கேட்பார் இல்லாமல் விற்றுத் தின்றோம் , வரும் வருமானத்தைக் கணக்கு வழக்கு இல்லாமல் அதிகாரிகளும் திராவிட கழக கட்சிக்காரர்கள் வீட்டுக் கஜானாவுக்கு அனுப்பினோம் , மிச்சம் இருக்கிற கோவில் பராமரிப்பு என்ற பெயரில் கோவில் வளாகங்களையும் அதையும் கெடுத்து குட்டிசொராக்கினோம் என்றால் - போதாத குறைக்கு இந்துக்களை அவமானமாகவும் பேசுவோம். அடா அடா....
இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் ???????????
நன்றி
-
மாரிதாஸ்