காரைக்கால்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips
காரைக்கால் காவிரியின் கழிமுகத்தில் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதி தான் காரைக்கால். பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்
கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை.

கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி 1 நவம்பர் 1954 இந்தியாவோடு இணைக்கப்பட்டது!

காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த‌ ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்று இரண்டு மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுக நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் மற்றும் ரசாயண‌ தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

"கே. பி. சுந்தரம்பாள்"

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
கே. பி. சுந்தரம்பாள் பாடல் என்றாலே தனித்துவமாய் கம்பீரமாய் ஒலிப்பது. கரூரில் சிறுமியாய் தாயுடன் கழித்த காலத்திலே இவரது பாடலும் பாடும் திறனும் அந்தக் காலமே உற்றவர்களாலும், பெரியவர்களாலும் போற்றப்பட்டது. சொந்த ஊர் கொடுமுடி. பழனி முருகனைப் பாடியே காலம் எல்லாம் கழித்தவர் என்றே சொல்லலாம்.

தனிப் பாடல்களான 'தனித்திருந்து வாழும் தவமணியே... ' , 'பால் மணக்குது ,பழம் மணக்குது ;பழனி மலையிலே .பழனி மலையைத் தூக்கி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்..... ' என்று பாடி வரும்காலை ,'பால் காவடி பண்ணீர்க் காவடி புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி,சர்ப்பக் காவடி,சேவற் காவடியாம் ...என்று உச்சஸ்தாயில் குரல் ஒலிக்க எழுந்து ஆடாதவரும் உண்டோ ? திரைப் பாடல் என்று வரும் பொழுது,

ஔவையார் படத்தில் , 'மயிலேறும் வடிவேலனே...என்று வரும் பாடலில் இவரது இளமைக் குரலில் உள்ள தெய்வீகக் குழைவை நாம் ரசித்துப் பரவசமடையலாம். ',பழம் நீ அப்பா...பாடல் நம்மை மறந்து தலை அசைக்க வைக்கும். ஞானப் பழத்தைப் பிழிந்து.....பாடலில் ,'உனக்கென்ன விதம் இக்கனியை நான் ஈவ தென்று நாணித்தான்..... என்றெல்லாம் பாடுகையில் அவரது குரலில் சீராக ஏறி இறங்கும் வளைவுகள் அற்புதமானவை. ஐயனே! என்று முருகனை விளிக்கும் போதும் சரி, கேள்விக்கு பதில் சொல்லும் போதும் சரி எடுப்பான அவரது குரல் வளம், வார்த்தைகளை அச்சரமாய் நம் மனதில் தொடுக்கும். கந்தன் கருணையில் 'புதியது என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது; முருகா !...என்ன ஒரு கம்பீரமான பாடல்.
பூம்புகாரில் ,வாழ்க்கை எனும் ஓடம், அழகிய தத்துவப் பாடலாய் மிளிர்கிறது. ஔவையார் போன்றே இந்தக் குந்தி அடிகள் வேடமும் கச்சிதமாய் பொருந்தியது.மகாகவி காளிதாசில், 'காலத்தில் அழியாத ,காவியம் .....' பாடல் யார்தான் மறந்திருக்க முடியும் ? கேட்கும் பொது விலகி நிற்க முடியும்.
உயிர்மேல் ஆசை என்ற சமூகப் படத்தில், 'கேளு பாப்பா,
என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்நாளில் தேசப் பக்தி பாடல் நிறைய பாடியுள்ளார்.

via Page Kothai notes on Music and Movie.

பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.

நன்றி
ராகேஷ்

செல்ஃபோன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips
செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:24 PM | Best Blogger Tips

நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சள

ி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லாவிட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களையெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும். மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

ஆரஞ்சு

குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை

பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட்

கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி

இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்

சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

கொக்கோ

கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும். ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.

பேசிக்கொண்டே சாப்பிடுதல் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips

'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]