காரைக்கால்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips
காரைக்கால் காவிரியின் கழிமுகத்தில் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதி தான் காரைக்கால். பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்
கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை.

கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி 1 நவம்பர் 1954 இந்தியாவோடு இணைக்கப்பட்டது!

காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த‌ ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்று இரண்டு மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுக நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் மற்றும் ரசாயண‌ தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.