உடல்நலத்தை விற்று! ஆரோக்கியம் தேடுகிறோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 PM | Best Blogger Tips


*மனோகர்   பாரிக்கர்,தற்போதைய கோவா  முதலமைச்சர், நம் பாரத தேசத்தின் முன்னால் பாதுகாப்பு துறை அமைச்சர், பாஜக பார்லிமன்ட்ரி குழு உறுப்பினர். தற்பொழுது உடல் நலக்குறைவால் மரண படுக்கையில் இருக்கிறார்.  மரண படுக்கையில் அவரது பேச்சு*

*என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.*

*கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.*

*இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை *சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.*


*🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில்  நாம்  அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு *இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது*

*🔥மரணத்தை நான் நெருங்கும்  ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.*


*இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் *வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு*  *சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.*

*அரசியலில் எவ்வளவோ வெற்றிகளை பெற்று இருந்தாலும், *போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.*

*மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.*

*உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று  இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.*

*எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்கவே முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.*

*வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும்  நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்*

*எனவே ,,என் பாரத தேச உறவுகளே,  நண்பர்களே,நம் தேசத்தின் எதிர்காலத்தின் மீது அக்கறை செலுத்துங்கள்,  உங்கள் மீதும் அக்கறை செலுத்துங்கள்* *உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.*

 *பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும்,,நம் அடுத்த தலைமுறைக்கு  அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.*
                                -மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)

தமிழாக்கம் :
திரு. விஜய்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி, பவித்ரம்.
கரூர் மாவட்டம்.

நாம் யாராக மாறவிரும்புகிறோமோ அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து

மணக்கால் அய்யம்பேட்டை | 10:11 AM | Best Blogger Tips
Related image


குற்றம் குறை சொல்பவர்களுடன் உங்கள் சங்காத்தம் இருந்தால் நீங்களும் தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை சொல்லப்பழகிவிடுவீர்கள். 

மகிழ்ச்சிகரமான மக்களுடன் பழகினால் உங்களையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.

குழப்பவாதி, குளறுபடியாளர்களுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையும் குழப்பம்தான். ஆர்வம் நிறைந்த உற்சாக மனிதர்கள் உங்கள் தோஸ்த் என்றால் நீங்களும் உற்சாக மனிதர்.

ரேஸ் கார் ஓட்டுவது,

வீர சாகச வேலைகள் புரிவது என்று சிலருக்கு ஆர்வமிருக்கும். அவர்களுடன் நீங்கள் இணைந்தால் உங்களுக்கும் அந்த ஆர்வம் தோன்றிவிடும்.

எதையும் விவாதித்துக் கொண்டே இருப்பவர்களுடன் உறவாட நேரிட்டால், விவாதம் புரிவதே உங்களுடைய இயல்பாகவும் மாறிவிட்டிருக்கும்.

அதைப் போலவே வெற்றியாளர்களுடன் இணைந்தால் அவர்களது பழக்க வழக்கங்கள், வெற்றிப்பாதை உங்களுக்கும் சொந்தமாகிவிடும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் யாராக மாறவிரும்புகிறோமோ அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் வாழ்க்கையில் நொடித்துப் போனவராக, மன அழுத்தத்தில் உள்ளவராக, உற்சாகமற்றவராக இருந்தால், வெகுநிச்சயமாக அவர் பழகும் நட்பு வட்டாரம் அத்தகையவர்களாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே அத்தகைய நிலையிலிருந்தால் அது தற்செயல் அல்லவாம். 

ஆகவே அவர் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வழிவகை காணவேண்டும் எனில் முதலில் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதைவிட்டு விலகி வரவேண்டும்.

அடுத்து நற்குண மக்கள், பண்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பதைப் போலமனம் மாறும், மகிழ்வுறும். வாழ்க்கையும் தானாய் மாறும்.
 Image may contain: Senthil Kumar, closeup
நன்றி 👤 *பெ.சுகுமார்*

மனதிற்கு நோவு - தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:55 AM | Best Blogger Tips
Image result for மனதிற்கு நோவு

நாம் இழக்கும் பல விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு முக்கியமே இல்லை. ஆனால் அதுதான் வாழ்க்கையின் அத்தியாவசியம்என்பது போல் காலப் போக்கில் வந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதை ஏதோ ஒரு காரணத்தால் இழக்க நேரிடும்போது மனது வலித்துத் துடிக்கிறது.

செல்போன் இல்லாமல் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட, மக்கள் கூட்டம் பூவுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. மகிழ்ச்சிகரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமோ என்பது போல் தான் பலரது நிலை மாறியுள்ளது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படிப் பல.

அதனால் தான் உடலுக்கு வலி எப்படி உதவுகிறதோ, அதைப் போல் நமது மனதைப் பாதித்து வலிக்கும் விஷயங்கள் நமது வாழ்க்கையின் முன்னுரிமைகளை மறுபரிசீலனைச் செய்ய உதவும் என்று குறிப்பிடுகிறார்கள்.

அதற்காகக் கார், செல்போன், சொந்த வீடு, வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அர்த்தம் அது இல்லை.

விஷயம் யாதெனில், வெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் அடிபட்டு, மனம் வலிக்கும்போது அதை உணர்ந்து தங்களது வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியானபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்; முன்னுரிமைகளை சரிசெய்து கொள்கிறார்கள்; எதிர்பார்ப்புகளைச் சீரமைத்துக் கொள்கிறார்கள்; குற்றம் குறை காணும் மனோ நிலையைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.

உடலுக்கு நோவு உண்டாக்கும் விஷயத்தை எப்படித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க மாட்டோமோ, தவிர்த்துக் கொள்வோமோ அதைப் போல் மனதிற்கு நோவு உண்டாக்கும் விஷயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது.
தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி 👤 *பெ.சுகுமார்*