என்னா அடி!!! மறுபடியும் அடி..!!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:00 | Best Blogger Tips

 பெரம்பலூர் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனுக்கு பிரம்பு அடி: ஆசிரியரிடம்  விசாரணை | perambalur near student attack issue inquiry teacher

 


 

அந்த காலத்தில் நாங்க  எதுக்கெல்லாம் அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்கு  தெரிய வாய்ப்பில்லை...

 

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..

 

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..

 

3. அடி வாங்காமலேயே அழுதாலும் விழும் அடி..

 

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும்  இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..

 வானம் தாண்டிய சிறகுகள்..: பள்ளிக்கால ...

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

 

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தால் அடி.

 

 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..

 

8. தட்டில்  சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

 

 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

 

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி..

 

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

 

 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.

 

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி..

 வகுப்பறை: அந்தக் காலத்தில் நாங்கள் ...

 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

 

 15. ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

 

16. அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி.

 

17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

 

 18. பூரணமா சாப்பிடாமல் இருந்தால் அடி

 

19. சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

 Thillaiakathu Chronicles : கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

 

21. பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.

 

22. விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.

 

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

 

24. பெரியவங்களை முறைத்துப்  பார்த்தால் அடி. 

 

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

 

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

 

27. பெரியவங்களை ஓரக் கண்ணால் பார்த்தால் அடி..

 

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

 

 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்கார்ந்திருந்தாலும் அடி.

 

 30. சாப்பிட்டபின் தட்டை அலம்பலேன்னா அடி.

 

 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

 

 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டால் அடி.

 

 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி..

 

34. நகத்தை கடிச்சா அடி

 

 34. குளிக்காவிட்டால் அடி.

 

35. காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர்.

 

36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.

 

 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

 

 38. தெருவில் போகிற கார் உரசிட்டு போச்சுன்னா அடி.

 

39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கிரதைக்கு நாலு அடி.

 

 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி.

 

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

 

 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

 

 43. ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி.

 

44. அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி

 

45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி.

 

46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்திசொந்தமா என்னடா gas விட்ரன்னு சொல்லி  அடிக்கும்.

 

 47. டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கரெக்ட் பதில் எழுதினா வாத்திட்டநீ பெரிய பிஸ்தாவான்னு சொல்லி வாங்கும்  அடி..

 

48. வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.

 

49. சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.

 

50 மூன்று தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.

 தற்போது பள்ளி மாணவர்கள் இடையே ஒழுங்கீனம் அதிகரித்துக் கொண்டே வருகிறதே,  இதற்கு யார் காரணம்? (பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது மீடியாக்கள் ...

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.

 

52. சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

 

53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி.

 

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள் - பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் இந்த அடிகள் வாங்கியது தான் எங்களுக்கு  வாழ்வில் முன்னேற உதவின.

 

வாழ்க  பெற்றோர்கள்....

 


நன்றி இணையம்