மஹா சிவராத்திரி ஸ்பெஷல்: 1

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips

 No photo description available.



மஹா சிவராத்திரி தோன்றிய தலம் இது தான்

மஹாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில் தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றி னார் என்று புராணங்களில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
🔴Live: மஹா சிவராத்திரி விழா 2024 | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் |  Maha Shivaratri 2024 Live
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மா வுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவ ரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார் அந்த நெரு ப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பிரார்த்தனை!
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறே ன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை.

இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற் சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிட ம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிரு ப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்ட தாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொ ண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது.

தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான். நெருப் புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமா ன் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங் களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியி ல் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலரா வாய் என்றும் சாபமிட்டார்.
மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம் |  Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil |  thiruvampavai songs | thiruvampavai songs in tamil ...
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாம லையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்து தான் சூரியன், சந்தி ரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன் றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணா மலையில்தான் முதன் முதலில் லிங்க வழி பாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவரா த்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மஹா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலையே..

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும் மகா சிவராத் திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்கு பரவியது

அவனருளால் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

மஹா_சிவராத்திரி 🌷 நாகைக்கும் - சிவராத்திரிக்கும் உண்டான தொடர்பு 🌷🌷🌷🌷🌷

மணக்கால் அய்யம்பேட்டை | 3:52 PM | Best Blogger Tips

மகா சிவராத்திரி 2025 4 கால பூஜையும் வழிபடும் முறையும் Sivarathiri |  Shivratri | Maha Shivaratri 2025

 அனைவருக்கும் #மஹா_சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். 

இப்பதிவில் நாகைக்கும் சிவராத்திரிக்கும் உண்டான தொடர்பும் , 

 

 மஹாசிவராத்திரி 2025:அன்று வீடுகளில் வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள் -  ஐபிசி பக்தி

நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களை பற்றி பார்ப்போம்.



நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். 

Maha Shivaratri 2022: wishes, quotes, messages in tamil : மகா சிவராத்திரி  அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்புங்க...! -  Tamil BoldSky

அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், 

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், 

Thirunageswaram Naganathar Temple

திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், 

ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர்  திருக்கோயில்ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர்  திருக்கோயில்

இறுதியாக #நாகை காரோணத்தில், 

நாகை காரோணம் Nagapattinam Sivan Temple - Kayaroganeswarar Kovil - Tamil Vlog

நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான்.

சர்வதோஷ நிவர்த்திக்கு நாகை காயாரோகணேசுவரர் திருக்கோயில்

எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

Sakthi Vikatan - 20 February 2024 - நாகை சிவாலய மகிமைகள்|Glories of Nagai  Sivalayam - Vikatan

காசிக்கு இணையாகக் கருதப்படும் சிவராஜதானி ஷேத்திரம் எனக் குறிப்பிடப்படும் நாகையில், காயாரோகணசுவாமி கோயிலை சுற்றியுள்ள 12 சிவாலயங்களை மகா சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது ஆன்மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே பின்வருமாறு.
நாகை காரோணம்
1. #நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)
நாகப்பட்டினம் அமரநந்தீஸ்வரர் ...
2. #அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில்
(நீலா கீழ வீதி தேரடி அருகில்)
Akkaraikulam Chokkanathar Shiva Temple, Nagapattinam - lightuptemples
3. #சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)
சட்டையப்பர் கோவில், நாகப்பட்டினம் – today news in tamil | daily news tamil  | தமிழ் நியூஸ்
4. #ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)
Naganathar Temple : Naganathar Temple Details | Naganathar- Kilperumpallam  | Tamilnadu Temple | நாகநாதர்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம் - Vastushastram
5. #நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி)
Nagapattinam – TN Temples Project
6. #அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி)
நடுவத்தீஸ்வரர் கோவில், நாகப்பட்டினம் – today news in tamil | daily news  tamil | தமிழ் நியூஸ்
7. #மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி பின்புறம்)
Nagapattinam Veerapathra Samy Kovil நாகப்பட்டினம் வீரபத்திர சுவாமி  திருக்கோயில்
8. #விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. #அமிர்தகடேஸ்வரம் ,
கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)
நாகை காரோணம்
10. #கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)
மணக்கால் அய்யம்பேட்டை : நாகைக்கும் ...
11. #காசிவிஸ்வநாதம்,
காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

பாழடைந்த கோவில் | உழவாரப்பணி
12. #அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)
OmNamaSivaya: Sri Kailasanathar Temple, Madhavaram
சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம்


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and temple 🌷 🌷🌷 🌷

.