மஹா சிவராத்திரி ஸ்பெஷல்: 1

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips

 No photo description available.



மஹா சிவராத்திரி தோன்றிய தலம் இது தான்

மஹாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில் தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றி னார் என்று புராணங்களில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
🔴Live: மஹா சிவராத்திரி விழா 2024 | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் |  Maha Shivaratri 2024 Live
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மா வுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவ ரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார் அந்த நெரு ப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பிரார்த்தனை!
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறே ன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை.

இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற் சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிட ம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிரு ப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்ட தாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொ ண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது.

தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான். நெருப் புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமா ன் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங் களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியி ல் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலரா வாய் என்றும் சாபமிட்டார்.
மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம் |  Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil |  thiruvampavai songs | thiruvampavai songs in tamil ...
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாம லையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்து தான் சூரியன், சந்தி ரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன் றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணா மலையில்தான் முதன் முதலில் லிங்க வழி பாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவரா த்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மஹா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலையே..

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும் மகா சிவராத் திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்கு பரவியது

அவனருளால் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷