சிவபுராணம் என்றால் .....?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 PM | Best Blogger Tips

 
திருச்சிற்றம்பலம் 🙏

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

மாணிக்கவாசகர்சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர், மாணிக்கவாசக பெருமானிடம் தாங்கள் எழுதிய திருவாசகத்தைநீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.அர்ச்சனைப் பூக்களின்

அருமையான

பலன்கள்

கேதார்நாத் விழித்திருக்கும் மஹாதேவ்என்று ஏன் அழைக்கப்படுகிறது..

மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள். ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய்ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டிஇப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் என்றார்.

அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

ஆக , ஆனி மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

சிறப்பு – (1) நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது. (2) சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்கஎன முடியும். ( 3) அதை அடுத்த 5 வரிகள் வெல்கஎன முடியும். (4) அடுத்த 8 வரிகள் போற்றிஎன முடியும்.

இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும். புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்நமச்சிவாய.

🙏திருச்சிற்றம்பலம்

 

நன்றி இணையம்

புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips


 


தென்னாட்டிலிருந்து காசி யாத்திரையாக பெற்றோருடன் கிளம்பிய புண்டலீகன், ஆங்காங்கு தங்கி மாதக் கணக்கில் பயணம் செய்து இவ்விடம் வந்தான்.

இங்கு குக்குட மஹரிஷி என்பவர் வசித்து வந்தார். அவர் குக்கூடாசனத்தில்‌ அமர்ந்து சாதனைகள் செய்து சித்தி பெற்றவர். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை காஞ்சி மஹா பெரியவர் ஸர்வசாதாரணமாகப் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.

மிகவும் வயதான தாய் தந்தையரை வைத்துக்கொண்டு,புண்டலீகன் கஷ்டப்பட்டு யாத்திரை செல்வதைப் பார்த்த மஹரிஷி, இதற்கு மேல் வயதானவர்களை அழைத்துக்கொண்டு அலையவேண்டாம்.‌ பெற்றோருக்கு சேவை செய்வது கங்கையில் ஸ்நானம் செய்த பலனைத் தரும். நதி தீரமாய் இருப்பதால், பெரியவர்களுடன் வசிப்பதற்கும், அவர்களின் சேவைக்கும் வசதியாக இருக்கும். இங்கேயே தங்கி பெற்றோர் சேவை செய் எனப் பணித்தார். ப்ரும்மதேஜஸுடன் விளங்கிய மஹரிஷியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு புண்டலீகன் அங்கேயே குடிசை போட்டுக்கொண்டு பெற்றோருடன் வசிக்கலானான்.

தினமும் பெற்றோர்க்கு உணவு ஏற்பாடு செய்வதும், அவர்களின் ஸ்நானம் போன்ற அன்றாட வேலைகளுக்கு உதவி செய்வதும், அவ்வப்போது கைகால்கள் பிடித்து விடுவதும், இரவு உறங்கும்போது விசிறிவதும், பல புராணங்களைப் பார்வை மங்கிய பெற்றோருக்குப் படித்துக் காட்டுவதும், தனக்குத் தெரிந்த இறைப் பாடல்களை பாடி அவர்களை மகிழ்விப்பதுமாய் இனிதாகப் பொழுது போயிற்று.

அவ்வமயம் துவாரகையில் கண்ணபெருமான் வசித்துவந்தான். ஒருநாள் அவன் நீண்ட சிந்தனையில் இருப்பதைக் கண்ட நாரதர் என்ன சிந்தனை என்று விசாரிக்க..

நாரதரே! என் பெற்றோருக்கு சேவை‌ செய்யும் பேறு எனக்குக் கிட்டவில்லை. சுமந்து பெற்ற அன்னைக்கு மழலையின்பம் கூடத் தரவில்லை. எனக்கு அது பெரும் குறையாய் இருக்கிறது. பெற்றோருக்கு சிறப்பாக சேவை செய்பவர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப்‌ பார்த்தாவது நான் மகிழ்ச்சி அடைவேன் என்றான்.

நாரதர் இருக்கிறார் கண்ணா.. என்றதுதான் தாமதம். உடனே பார்க்கலாம் வாருங்கள் என்று கிளம்பி வந்துவிட்டான்‌ கண்ணன்.

துவாரகாதீசன் கிளம்பியதும், தாயார்‌ருக்மிணியும் கிளம்ப, ஒரு‌ பரிவாரமே கிளம்பியது.

நாரதர் கண்ணனை ‌நேராக நமது புண்டலீகன் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினார்.

அரசன் வந்திருப்பதாக கட்டிய வசனங்கள் வானைப் பிளக்க, புண்டலீகனோ உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த தந்தைக்கு கால் பிடித்துக் கொண்டிருந்தான்.

குடிசைக்குள் எட்டிப் பார்த்த கண்ணன், அமைதியாய் இருக்கும்படி பரிவாரங்களுக்கு சைகை காட்டிவிட்டு மெதுவாக அழைக்க,

புண்டலீகனோ, அரசே! சற்று பொறுங்கள். வயதான என் தந்தை உறங்குகிறார். வயதானவர்களுக்கு உறக்கம் வருவதே அரிது. சற்று நேரத்தில் வருகிறேன். அதுவரை இந்த செங்கல்லை ஆசனமாக ஏற்றுக்கொள்ளுங்கள். என்று சொல்லி இரண்டு செங்கற்களை வாசலை நோக்கி வீசினான்.

அன்பே உருவான கண்ணனும் ருக்மிணியும் புண்டலீகன் வீசிய செங்கலின்மீது ஏறி நின்று கீழே விழாமல் சமன் செய்வதற்காக இடுப்பில் கையை வைத்துக் கொண்டனர். இவர்கள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டிருப்பதற்கு இன்னும் பல காரணங்களைப் பெரியோர் சொல்கின்றனர். அவற்றைப் பிறகு பார்ப்போம்.

தந்தை உறங்கியதும் வெளியில் வந்த புண்டலீகன் இறைவனிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு வேண்ட, கண்ணனோ, புண்டலீகனின் பெற்றோர் சேவையில் நெகிழ்ந்துபோயிருந்தான்.

வழக்கம்போல் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கலியுகத்திற்கான ப்ரத்யேக வேண்டுதலாக‌, நமக்காக புண்டலீகன் கேட்டது என்ன தெரியுமா?

பெற்றோர் சேவைக்கு மனம் மகிழ்ந்து இறைவனே நேரில் காண வந்து வாசலில் நின்றான் என்பதன் சாட்சியாக நீ இங்கேயே இருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டான்.

தங்கள் திவ்ய மங்கள‌ரூபத்திலிருந்து இரண்டு விக்ரஹங்களை எடுத்துக் கொடுத்தனர் கண்ணனும் ருக்மிணியும்.

ஆம், விட்டலனின் விக்ரஹம் ஒரு உளி கொண்டு சிற்பியால்‌ செதுக்கப்பட்டதல்ல. இறைவனின் திருமேனியிலிருந்தே வெளிவந்தது.

இருபத்தெட்டு சதுர்யுகங்களாக புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே நிற்கின்றான் பாண்டுரங்கன்

 

நன்றி இணையம்

நாம் திராவிடரில்லை, நாம் தமிழரே...!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips

 


நாம் திராவிடரில்லை,

நாம் தமிழரே...!

சி.பா.ஆதித்தனாரின்

அருமையான

ஆறு பதில்கள்

1. கேள்வி:

திராவிடர்கள் யார்?

பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.

2.கேள்வி:

திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?

பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார்.


அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம்.

அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும்.

தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

3.கேள்வி:

திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?

பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்து தான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

4.கேள்வி:

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?

பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் 'திராவிடம்' என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.

5.கேள்வி:

இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?

பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.

6.கேள்வி:

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?

பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நூலிலிருந்து .

( 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905)

 

நன்றி இணையம்

கோவில் உண்டியல்களில் பணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

 அ .நி.துறைக்குப் பணம் போவதால், கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்று எழுதியது அரச விரோதமாம். சட்டப்படி வழக்கு போடுவேனென்கிறார் ஓர் கழக வழக்குரைஞர்.

அவருக்கான என் பதில், பொதுவெளியில்:

உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று அறிவுரை சொன்னேன். கோவிலுக்குள் நுழையும் போது கால் அலம்பிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்வது போல. கோவிலுக்குள் குப்பை போடாதீர்கள் என்று சொல்வது போல.

கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று ஊர் முழுவதும் எழுதி வைப்பது அரச விரோதமன்று, ஆனால், உண்டியலில் பணம் போட வேண்டாம் என்பது விரோதம் என்பது என்ன பகுத்தறிவு?

கோவிலுக்கு முன்னர் 'கடவுளைக் கும்பிடுபவன் காடுமிராண்டி' என்று எழுதி வைக்கும் திராணி உள்ளவர்கள், கோவில் வாசலில் 'இந்தக் கோவில் உண்டியலில் பணம் போட வேண்டாம், தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது' என்று எழுதி வைக்கத் திராணி உண்டா? காசு என்றால் வாய் பிளப்பது பிணம் மட்டும் இல்லை போல.

கோவில் நிலங்களில், சர்வே எண்ணைக் கொடுத்து, ஒவ்வொரு சர்வே எண்ணில் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளாக என்ன வசூல் செய்தீர்கள் என்று கேட்டால், பதில் இல்லை உங்கள் அ.நி.துறையிடம். உண்டியல் என்றதும் உறைக்கிறதோ?

ஏழை மக்கள், இளிச்ச்வாயர்கள் உண்டியலில் போடும் சில்லறைக் காசுகளைக் கொண்டு இன்னோவா கார் வாங்குவதற்குக் கூசவில்லையா? அப்போது வரவில்லையா மானமும் ரோஷமும்?

அன்றாடங்காய்ச்சிகள் உண்டியலில் போடும் 10,20 காசுகளை வெட்கம் இன்றிக் கொள்ளையடிப்பது போல் எடுத்து, கல்லூரி கட்டுகிறேன் என்று கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் போது எரியவில்லையா உங்கள் அரச மானம்?

அ.நி.துறைக்குச் சொந்தமான கோவில் பாழடைந்து கிடக்கிறது என்று செய்தி வாசித்தால் உங்களால் அன்றைய தினம் சோறு சாப்பிட முடிகிறதா? சோறு போட்டவன் கேட்பாரற்றுக் கிடக்கிறான். நாம் அவன் சோற்றை உண்கிறோம் என்கிற எண்ணமாவது ஏற்படுகிறதா அ.நி. துறைக்கு? வெட்கமாக இல்லையா?

உற்சவங்கள் நடத்த வேண்டும் என்றால் 'பணம் இல்லை. நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்' என்று வெட்கம் இன்றிக் கூறும் அ.நி.துறை, கோவிலில் இருந்து திருடிக்கொண்ட பணத்தில் அலுவலர்களுக்குக் கார் வாங்குவது கேவலம். உற்சவங்கள், சம்ப்ரோக்ஷணங்கள் நடத்த வகையற்ற அரசுத் துறை, உற்சவப் பத்திரிக்கையில் ஆணையர் முதல் அலுவலர் வரை பெயர் போட வேண்டும் என்று வெட்கமின்றிக் கேட்பது மானமுள்ள மனிதர்கள் செய்யும் செயலா?

இந்த மானமற்ற செயல்களைச் செய்தது இந்தக் கட்சி தான் என்றில்லாமல், காங்கிரஸ் கட்சி துவங்கி அனைத்து அரசுகளும் இப்படியே தரக்குறைவாக நடந்துகொண்டுள்ளன. அ.நி.து. சட்டம் கொண்டுவந்த காங்கிரஸ் அரசும் இந்தக் கீழ்மையில் அடக்கம்.

10,20 காசுகளைக் கூட பறித்துச் செல்வார்களாம், ஆனால், கோவில் ஆகமப்படி நடக்க கூடாது என்பார்களாம். பூசாரி நியமனத்தைற்கு முன் நாத்திகர்களிடம் சென்று ஆசி வாங்கி வருவார்களாம். வந்த பின்னர் உண்டியலில் கை வைப்பார்களாம். பார்த்துக் கொண்டிருந்த காலங்கள் மலையேறிவிட்டன. இது இணையக் காலம். ஆர்.டி.ஐ. மூலம் உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும் காலம்.

சோத்துக்குச் சிங்கியடித்த கீழ நடுத்தர வர்க்கம் மலையேறிவிட்டது. இப்போது வேலைக்கு யாருக்கும் பஞ்சமில்லை. வழக்குகள் பாயத் துவங்கியுள்ளன. பதில் சொல்லி மாளாத நிலை வரப் போகிறது. அதற்கான ஓணானை நீங்களே எடுத்து வேட்டியில் கட்டிக் கொள்கிறீர்கள்.

மயிலை ஆதி கேசவன் கோவிலை எடுத்துக்கொள்கிறோம் என்று போர்டு எழுதி வைத்த ஈரம் கூட காயவில்லை, எதிர்த்து அறங்காவலர் வழக்கு போட்டதும், கோர்ட்டில் பதில் சொல்லும் முன்னர் உத்தரவை வாபஸ் பெற்ற பெருமை உடைய துறை அ.நி.துறை.

மீண்டும் சொல்கிறேன். அ.நி.துறைக் கோவில்களின் உண்டியல்களில் பணம் போடுவது அரசின் கோவில் கொள்ளைக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பது போன்றது. சட்ட அங்கீகாரம் அற்ற அ.நி.துறை செயல் அலுவலர்களுக்கு இன்னோவா கார்கள் வாங்க பக்தர்கள் பணம் போகக் கூடாது. நீதிமன்றமே இதைப் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளது.

வருமானம் உள்ள கோவில் உண்டியலில் விழும் பணத்தைக் கொண்டு வசதி இல்லாத கோவில்கள், இடிந்த கோவில்கள் என்று செப்பனிடலாமே. மானமுள்ள அதிகாரிகள் துறையில் இருந்தால் செய்வார்கள்.

வந்தவாசி தாலுக்காவில் எத்தனையோ கோவில்கள் பூட்டியே கிடக்கின்றன. ஒரு வேளை பிரசாதமும் இல்லாமல் தெய்வங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றிற்கு ஒரு வேளையாவது கைங்கர்யம் என்று ஏற்படுத்தலாமே. இன்னோவா கார் வாங்குவதை விட உத்தமமான காரியம் அன்றோ?

ஒன்று செய்யலாம். உண்டியலில் போடலாம் - 'அற நிலையத் துறையே, கோவிலை விட்டு வெளியேறு' என்று எழுதப்பட்ட காகிதங்களை.

குத்தகைக்காரர்களிடம் இருந்து பணம் வாங்கத் திராணி இல்லாத அ.நி.துறையைச் சொன்னால் ரோஷம் வருகிறதோ?

அ.நி. துறை, அரசாங்கத்தின் ஒர் முகம். எல்லா பிரஜைகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை உடையது. கேட்பது மக்கள் உரிமை.

பதில் கிடைக்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.

--ஆமருவி

 

நன்றி இணையம்