பத்திரிகையாளர் சந்திப்பு
என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட மாபியா கூட்டம் உங்கள் மீது தாக்குதல் நடத்தும்
விதமாகத்தான் இருக்கும்.
பல பத்திரிகையாளர் சந்திப்பை
நேரடியாக பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன்.
சந்திப்புக்கு முன் நடக்கும்
நிகழ்வுகளை வீடியோவில் கவர் செய்யும் வரை எந்த பத்திரிகைகளில் இருந்து வந்து
இருக்கிறார்களோ அந்த பத்திரிகைகளின் ஐடி அதாவது அஃபிஷியல் டேக் அவர்களுடைய
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்.
கேள்வி நேரம் தொடங்கி அந்தந்த
பத்திரிகை நிறுவனங்களின் மைக்குகளை கொண்டுவந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு போகும்
போதே அந்த அடையாள அட்டையை கழட்டி பாக்கெட்டில் சொருவி விடுவார்கள்.
அனைத்து கேமராவும் ஒரு இடத்தில்
இருக்கும். ஃபோக்கஸ் முழுவதும் பேட்டி கொடுப்பவர் மீது இருக்கும.
கேமரா இருக்கும் இடத்தை
விட்டுவிட்டு இந்த அடையாள அட்டையை கழட்டி வைத்தவர்கள் சுற்றி ஒரு வட்டமாக
நிற்பார்கள். கேள்வி கேட்பதற்கு என்று ஒரு ஐந்து அல்லது ஆறு பேர் அந்த கேமராவில்
சிக்காமல் சைடில் நிற்பார்கள்.
அவர்கள் மட்டும்தான் கேள்வி
கேட்பார்கள். ஆனால் கேட்கின்ற கேள்விகள் எல்லாமே உங்களை வெறியேற்றுவதற்கும் தவறான
தகவல்களைப் பெறுவதற்காகவும் மட்டுமே.
அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளும் செய்வார்கள். அந்தக் கேள்வி கேட்பவர்களை யாராவது நீங்கள் ஃபோக்கஸ் செய்தீர்கள் என்றால் உடனடியாக அவர் அருகில் இருக்கும் இன்னொருவரிடம் இருந்து அப்ஜெக்ஷன் வரும்.
இப்படி ஏடாகூடமாக கேள்வி
கேட்பவன் யார் என்று கண்டுகொள்ள உங்கள் மொபைலை அந்தப் பக்கமாக திருப்பினீர்கள்
என்றால் சார் கேமரால ஃபீட் வருது, கேமரால டிஸ்டர்பன்ஸ் வருது கொஞ்சம் தள்ளிப் போங்க
என்று உங்களை வேண்டுமென்றே அங்கிருந்து நகர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும்
செய்வார்கள்.
கேள்விகள் எவ்வளவு அபத்தமாக
இருக்கும் என்றால் அவர்கள் கவர் செய்ய வந்த அந்த நிகழ்வுக்கும் அந்த
கேள்விகளுக்கும் சம்பந்தமே இருக்காது.
அந்த வல்லூருகளின் தேவை நீங்கள்
தேவையில்லாத எதையாவது உளர வேண்டும் அதை அவர்கள் வளர்த்தி கொண்டு போய் பெரிய
விஷயமாக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக
பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு பேட்டியில் கூட நாடு இதை செய்திருக்கிறது
பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த நேரத்தில் நாங்கள் நாட்டின் பின் நிற்கிறோம்.
இந்த அரசாங்கத்தை சப்போர்ட் செய்கிறோம் என்று யாராவது ஒரு பத்திரிகையாளன் இதுவரை
ஒரு பேட்டியிலோ அல்லது ஒரு பதிவிலோ தெரிவித்து இருக்கிரானா??
பத்திரிகையாளர் மாணவர் திட்டம்
என்று ஆரம்பித்து அர்பன் நக்சல்கள் அட்டூழியம் செய்ய ஆரம்பித்தார்களோ?? என்று ஜர்னலிஸ படிப்பு துறை முழுவதும்
கிரிப்டோக்கள், கம்யூனிஸ்டுகள் கைகளில் சிக்கியதோ?? அன்று ஆரம்பித்தது இந்த நாட்டின் நான்காம் தூணின்
அழிவு.
அதை அவ்வளவு எளிதாக மீட்டெடுக்க
முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகள் பலவிதமாக ஆரம்பித்து நடந்து கொண்டுதான்
இருக்கிறது.
உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால்
காஷ்மீரில் ஆர்டிகள் 370 நீக்குவதற்கு முன் கிட்டத்தட்ட 880 பத்திரிகைகள் தன்னிச்சையாக செயல்பட்டுக்
கொண்டிருந்தது பாகிஸ்தானின் பணம் பெற்றுக்கொண்டு.
சற்று நினைத்துப் பாருங்கள்
காஷ்மீர் என்கிற ஒரு மாநிலத்திற்கு 880 பத்திரிகைகள் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது??
இவை அனைத்துமே ஜிஹாதிய கருத்துக்களை மட்டுமே முன்வைத்து எழுதுபவை. மக்களை
எப்போது பார்த்தாலும் ராணுவத்துக்கு எதிராக போராடுங்கள் கல்லெறியுங்கள் என்று
எழுதிக் கொண்டே இருந்தவை.
இவை அனைத்தையும் ஒரு அமைப்பின்
கீழ் கொண்டுவந்து அவற்றை தணிக்கை செய்து கிட்டத்தட்ட 680 பத்திரிகைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதில் 200 பத்திரிகைகள் உண்மையை எழுத கூடியவை.
அந்த 200 பத்திரிகைகளை நம் இந்திய அரசு அவர்களுக்கு தேவையான
கட்டமைப்பை உருவாக்கி அவர்களை தொடர்ந்து எழுத வைத்து அதன் மூலமாக ஆர்டிகல் 370 இந்தியா நீக்கிய போது காஷ்மீரத்தில் நமக்கு நல்ல
வரவேற்பு இருந்தது.
ஆனால் இவை நடப்பதற்கு
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பிடித்தது. இந்த எட்டு வருடங்களாக சங்கம் மற்றும்
சங்பரிவார் இயக்கங்கள் மிக மிக அமைதியாக இந்த வேலைகளை மேற்கொண்டது. எட்டு வருட
உழைப்பு அது. அதற்கான பலனை நாம் காஷ்மீரத்தில் இனிமேல் தான் பார்க்கப் போகிறோம்.
இங்கே தமிழகத்தில் நாம் இன்னும்
அந்தக் களையெடுப்பு வேலைகளை ஆரம்பிக்கவே இல்லை. கூடிய சீக்கிரம் ஆரம்பிப்போம்.
அதற்கான பலனையும் பார்ப்போம்.
நன்றி இணையம்