இந்தியாவின் ராஜதந்திர விளையாட்டு....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:00 | Best Blogger Tips

 









இந்தியாவின் ராஜதந்திர விளையாட்டு....

Mission impossible.

சமீபத்தில் நடந்து முடிந்த FATF எனும் கூட்ட முடிவில் யாரும் எதிர்பாராத விதமாக துருக்கியை இந்த ஆண்டு க்ரே லிஸ்டில் சேர்த்து அதிரடித்திருக்கிறார்கள். அதுபோலவே இந்த ஆண்டு பாகிஸ்தான் கருப்பு பட்டியலுக்குள் அடைக்க வேண்டும் என்கிற பலரது எதிர்ப்பார்ப்பை அதிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எதிர்ப்பார்ப்பு, எண்ணம் நிறைவேறவில்லை.

இவ்விரண்டுக்கும் பின்னணியில் உள்ள நாடு இந்தியா தான் என்று சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஊடகங்களில் செய்தி வாசித்து வருகின்றனர் .

☝️இப்படி இதற்கு இந்தியா பொறுப்பு....

முதலில் FATF எனும் இந்த சர்வதேச அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து


இருக்கிறார்கள்.அதாவது இந்த வாதத்தை மறுத்து.... தாங்கள்
39 நாடுகளில் பிரதிநிதிகளை கொண்டவர்களாக பல தரப்பட்ட தரவுகளை சேகரித்து அவற்றை ஆராய்ந்து பார்த்து நடுநிலையான முடிவுகளை மேற்கொண்டு வருகிறோம் என கரடியாக தொண்டை கிழிய கத்தினாலும் யாரும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை....

மேலும் அவர்கள் தாங்கள் 34 டாஸ்குகளை பாகிஸ்தானுக்கு கொடுத்து அதில் அவர்கள் இவ்வாண்டு 30 தை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் முக்கியமான அந்த 4 டாஸ்குகளை நிறைவேற்றவில்லை ஆதலால் தான் அவர்கள் இந்த ஆண்டும் க்ரே லிஸ்டில் தொடர்கிறார்கள் என விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

ஆச்சா......

புலனாய்வு ஊடகங்கள் என்னமாதிரியான செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்......

அவர்கள் சொல்வது இதுதான்.

கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் இந்தியா முனைப்புடன் செயல்படவில்லை.... தவிர இந்த ஆண்டும் பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்குள் அடைக்க வேண்டும் என்கிற ரீதியிலான கோரிக்கை எதனையும் பெரியதாக முன்னெடுக்கவில்லை என்கிறார்கள்.

⭕ஏன்??????

ஏனெனில் இந்த சாம்பல் பட்டியலில் தொடர்ந்தாலேயே அதற்கு அதாவது பாகிஸ்தானுக்கு ஆண்டு ஒன்றுக்கு 47முதல்50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பீடு செய்து வைத்து கொண்டு இருக்கிறார்கள். கருப்பு பட்டியலுக்குள் அடைக்கப்பட்டு நாடு சிதைவடைந்து போகும் சூழ்நிலை உருவானால் அது தற்போதைக்கு இந்திய நலன்களுக்கு எதிராக முடியும் என்கிறார்கள்.

எப்படி????


பாகிஸ்தான் எனும் நாடு சிதைவடைந்து போகும் பட்சத்தில் சீனா அதற்கு ஏகப்பட்ட கடன்களை கொடுத்திருக்கும் இந்த சூழ்நிலையில் கடனுக்கு ஈடாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் பல அதிகார மையங்களாக விளங்கும் நிறுவனங்கள் சிலபலவற்றை கைப்பற்றி விடுவர்.... அதனையே காரணமாக கொண்டு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலோ... அல்லது பாகிஸ்தானிய கடற்பிராந்தியத்திலோ அத்துமீறி நுழைந்து அட்டகாசம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கருதுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் பலவற்றை இடம் மாற்றம் செய்து மற்ற நாடுகளுக்கோ அல்லது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடமோ கைமாறும் சூழ்நிலை உருவாகி விடும். முன்போ ஆஃப்கானிஸ்தானில் நிலை கொண்டு இருந்த அமெரிக்க படைகளுக்கு பயந்து பல ரகசியமாக சதி திட்டங்களை நிறைவேற்ற தயங்கிய ஜிகாதி குழுக்கள் தற்போது முனைப்பாக களத்தில் இறங்கி விடும் சூழலில் இருக்கும் அபாயத்தை தடுக்கவே இந்தியாவின் இந்த ராஜதந்திர நகர்வு என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதே போல வேறொரு கதையும் இதில் உண்டு.

துருக்கியை இந்த ஆண்டு க்ரே லிஸ்டில் அடைந்ததற்கு FATF சொன்ன காரணம்.... அவர்கள் ஆர்மீனியா அஜர்பைஜான் விஷயத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்பது தான்.

இங்கும் இந்தியாவின் நகர்வு உள்ளதாக இவர்கள் சொல்லும் சமாச்சாரம்.....

முன் ஒரு காலத்தில் மலேஷியா, உலக இஸ்லாமிய நாடுகளின் தலைவராக மகாதீர் முகமது என்பார் எடுத்த பல கட்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்திய பிரதமரை சகட்டுமேனிக்கு சாட ஆரம்பித்தார். பொறுமையா சொல்லி பார்த்த இந்தியா ஒரு கட்டத்தில் அவர்களின் பொருளாதாரத்தில் கை வைத்ததும் ஆடிப் போனது மலேசியா. அங்கு உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டம் கட்டி மகாதீர் முகமதுவுக்கு முன்னாள் அந்தஸ்து கொடுத்து கௌரவித்தது. போதாக்குறைக்கு அவரை இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா அனுப்பி வைத்தனர். அவரும் பாவம் போனால் போகட்டும் என இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இரண்டரை மணி நேரம் தவம் இருந்து சந்தித்து விட்டு சென்றார்.

போகும் போது ஏதோ இரண்டு வார்த்தைக்கு இரண்டரை மணி போலும் என்கிற நல்முத்தை உதிர்த்து சென்றார்.

தற்போது இந்தியாவின் கடைக்கண் பார்வைக்காகவே இந்திய தயாரிப்பு 36 தேஜாஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்ய ஒற்றை காலில் தவம் செய்து கொண்டு இருப்பதாகவும் மலேசிய ஊடகங்களில் பிடில் வாசித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல தான் துருக்கி அதிபர் எர்டோகனும் அகண்ட பரந்த ஒட்டோமான் காலத்து பேரரசு உருவாக்க போவதாக அந்த பாலைவன ஒட்டகத்தின் மீது சத்தியம் செய்து அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து மூக்குடைத்துக்கொண்டார். நேரிடையாக இந்தியாவை கண்டனம் செய்வதாக கூறி கொண்டார்.

ஆர்மீனியாவை இந்தியா ஆதரித்த ஒரே காரணத்திற்காக தான் தனது பே-ராக்டர் TB2 ஆளற்ற தாக்குதல் விமானங்களை அஜர்பைஜானுக்கு ஆதரவாக களத்தில் இறக்கி விட்டு அவர்களுக்கு வெற்றி தேடித் தந்ததாக தம்பட்டம் அடித்து கொண்டார். அதுமட்டுமா..... ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலக்கிக் கொண்டதும் தாங்கள் தொடர்ந்து அங்கேயே தங்கி பாதுகாப்பு பணிகளை கவனிக்கப்போவதாக சொல்லி வைக்க...... வெகுண்டு எழுந்த தாலிபான்கள், துருக்கி படையினரை தொம்சம் செய்து காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றி அதிரடித்திருக்கிறார்கள்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் அல்லல்லோல்பட துருக்கி படையினர் அங்கு இருந்தது தான் காரணம் என்று உளவு அறிக்கை தகவல் சொல்லி வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றியது.

இப்படியான சூழ்நிலையில் இந்தியா மறைமுக வேலை பார்த்து தான் துருக்கியை சாம்பல் பட்டியலில் சேர்க்க வைத்து பழிவாங்கி விட்டது என்கிறார்கள். ஏற்கனவே ஆண்டொன்றுக்கு பல்லாயிரம் டாலர் இழப்புகளை சந்தித்து வரும் துருக்கிக்கு இந்த சாம்பல் பட்டியல் மிகப்பெரிய அளவிலான அழுத்தத்தை அவர்கள் தேசத்து பொருளாதாரத்தில் ஏற்படுத்தி மிகப்பெரிய சம்பவம் செய்து விடும் என்கிறார்கள்.

மறைமுகமாக புன்சிரிப்புடன் இந்த முடிவினை வரவேற்ற நாடுகளின் பட்டியல் மிக நீண்டது என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான தகவல்.

ஈரான்... ஆஃப்கானிஸ்தான் முதற் கொண்டு கீரீஸ், பிரான்ஸ் வரையிலும் மந்தகாசபுன்னகையுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பவே சொன்னேன் கேட்டியா என்கிற பாணியில் மகாதீர் முகமது, எர்டோகனை பார்த்து கேட்டு இருக்கூடும் ..... யார் கண்டது.

நம் தேசத்தின் ராஜதந்திரிகள் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த உலக அரசியல் ஆடுகளத்தில் தற்சமயம் வேறுறோர் நகர்வும் உற்று நோக்கி கவனிக்கப்படுகிறது.

அந்த நாடுகள் மியான்மார் மற்றும் மாலத்தீவு.....

அவைகளை குறித்து அடுத்த பதிவில் பார்த்துவிடுவோம்.

Now a days in INDIA each and every mission is possible.

💓ஜெய் ஹிந்த்.

 


நன்றி இணையம்