🦀 *இன்று* ஏதோ வாழும் வாழ்க்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 PM | Best Blogger Tips

 

*அன்று* 

வீடு நிறைய குழந்தைகள் 

*இன்று* 

வீட்டுக்கொரு குழந்தை 

*அன்று* 

பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்

*இன்று* 

சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

*அன்று* 

குறைந்த வருமானம்

நிறைந்த நிம்மதி 

*இன்று*

நிறைந்த வருமானம்

குறைந்த நிம்மதி 

*அன்று*

படித்தால் வேலை

*இன்று* 

படிப்பதே வேலை

*அன்று* 

வீடு நிறைய உறவுகள்

*இன்று* 

நிறைய வீடுகள் உறவுகள் இல்லை

*அன்று*  

உணவே மருந்து

*இன்று*

மருந்துகளே உணவு

*அன்று*

முதுமையிலும் துள்ளல்

*இன்று*

இளமையிலேயே அல்லல்

*அன்று* 

உதவிக்கு தொழில் நுட்பம்

*இன்று*

தொழில் நுட்பம் தான் எல்லாம்

*அன்று* 

யோக வாழ்க்கை

*இன்று*

எந்திர வாழ்க்கை 

*அன்று* 

படங்களில் ஒரு குத்து பாட்டு

*இன்று*

குத்து பாட்டில் தான் படமே

*அன்று*  

ஓடினோம் வயிற்றை நிறைக்க 

*இன்று* 

ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

*அன்று*

பெரியோர்கள் பாதையில்

*இன்று* 

இளைஞர்கள் போதையில் 

*அன்று*  

ஒரே புரட்சி 

*இன்று* 

ஒரே வறட்சி

*அன்று* 

சென்றார்கள் வளர்ச்சியில்

*இன்று*

செல்கிறது சினிமா கவர்ச்சியில்

*அன்று* 

ஊரே கூட கோலாகல விழா

*இன்று*

ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

*அன்று*

கைவீசி நடந்தோம்

*இன்று*

கைப்பேசியுடன் நடக்கிறோம்

*அன்று* 

ஜனநாயகம்

*இன்று*

பணநாயகம்

*அன்று* 

விளைச்சல் நிலம்

*இன்று*

விலை போன நிலம்

*அன்று* 

கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்

*இன்று*

கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

*அன்று* 

நிறைந்தது மகிழ்ச்சி

*இன்று*

நடக்குது வெற்று நிகழ்ச்சி 

🦋 *அன்று*

வாழ்ந்தது  வாழ்க்கை

🦀 *இன்று*

ஏதோ வாழும் வாழ்க்கை.


*படித்ததில் பிடித்தது...🙏🌹நன்றி இணையம

நீட் தேர்வை ஆதரிப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 PM | Best Blogger Tips

 


#NEET


பள்ளிக்கூடத்தில் பத்து வகுப்பு, அப்புறம் +2, அதற்குப் பிறகு பட்டப் படிப்பு 3 வருடம் ஆக 15 வருடம்... 


அதுவே முதுகலைப் படிப்பும் படித்தால் கூட 2 வருடம் சேர்த்து 17 வருடம்... 


அதற்குப் பிறகு B.Ed... 


இப்படிப் படித்துவிட்டு வருபவர்களை "ஆசிரியர் தகுதித் தேர்வு" - என்று தனியாகத் தேர்வு வைப்பது "சமூக அநீதி"! 


இதே போல 10+2+3+2 = 17 வருடம் படித்துவிட்டு வருபவனை எதற்கு IAS/ IPS எல்லாம் எழுத வைத்து சிரமப்படுத்த வேண்டும்? அப்படியே நேரடியாக மாவட்ட கலெக்டர்/ போலீஸ் கமிஷனர் என்று ஆக்க வேண்டியதுதானே?  


அல்லது GROUP -I, GROUP-II... என்றெல்லாம் TNPSC பரீட்சை வைத்து ஏன் சிரமப்படுத்த வேண்டும்? கல்லூரியில் இருந்து வெளியே வந்தாயா?- இந்தா பிடி ஒரு GROUP- I POST! 


எல்லாம் "சமூக அநீதி"! 


+2 வரைக்கும் படித்தவனை "நீட்" தேர்வும் எழுதச் சொல்வது சமூக அநீதி!  


M.Sc B.Ed படித்துவிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் என்ன M.Sc பாடத்திலா தேர்வு எழுதுகிறார்கள்? இவர்கள் பாடம் நடத்தப் போகும் பள்ளிக்கூட ஆசிரியர் லெவலுக்கான கேள்விகளுக்குதானே விடை அளிக்கிறார்கள்? 


அப்புறம் +2 முடித்துவிட்டு மெடிகல் போறவனுக்கு மட்டும் ஏன் அதே +2 பாடத்தில் இருந்து கேள்வி?? "சமூக அநீதி"! 


மாபெரும் கல்வியாளர்,   மிகப்பெரும் "சமூக நீதி" புரட்சிக்காரர்- கூத்தாடி சூர்யா கேட்ட கேள்வியைப் போல - மேற்கண்ட வகையில் பலரும் கேட்க முடியும்! 


 2007 என்று நினைவு - அந்த ஆண்டுடன் என்ஜீனிரிங் / மெடிக்கல் போன்ற தொழிற்கல்விகளுக்கான ENTRANCE EXAMINATIONS மாநில அளவில் நீக்கப்பட்டன! 


+2 மதிப்பெண் "மட்டும்" போதும் என்று ஆனது! 


அள்ளினார்கள் பாருங்கள் இடங்களை - நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இதற்கென்றே பிரத்யேகமாக அமைந்த பள்ளிகளின் மாணவர்கள்! 


ENGINEERING ஆ? MATHS/ PHYSICS/ CHEMISTRY 3 கோர் சப்ஜெகட்டுகளிலும் 200/ 200! 


மெடிக்கலா? PHYSICS/ CHEMISTRY/ BIOLOGY மூன்றிலும் 200/ 200! 


மாணவர்களைப் போட்டு அப்படி தயார் செய்தன - நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பிரத்யேகமான '+2 ஸ்பெஷலிஸ்ட்' பள்ளிகள்! 


பா


டத்தில் ஆழமான ஞானமோ, வித்தியாசமாக ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு நுட்பமாக அந்தப் பாடத்தின் CONCEPT ஐ விளங்கிக் கொண்டு பதிலளிக்கும் மதியூகமோ தேவையே இல்லை! 


டெஸ்ட் எழுது! டெஸ்ட் எழுது! டெஸ்ட் எழுது! வாரா வாரம், மாதா மாதம் - வீக்லி ரிவிஷன் டெஸ்ட், மன்த்லி ரிவிஷன் டெஸ்ட்.... - போட்டு அரைத்து அரைத்து - 200/200 அது ஒன்றே இலக்கு! 


இப்படிப்பட்ட பள்ளிகளை "பிராய்லர் பள்ளிக் கூடங்கள்"- என்றே கல்வியாளர்கள் வர்ணித்தனர்! 


ஒரு தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் கூட - இப்படிப்பட்ட பள்ளிகளின் 'கல்வித் தந்தை' ஒருவர் வெளிப்படையாகவே கூறினார்:- "எங்களுடைய நோக்கம் அவனை இந்த நிலையில் விஞ்ஞானி ஆக்குவதல்ல - கோர் சப்ஜெக்ட் மூன்றிலும் செண்டம் வாங்க வைப்பது ஒன்றுதான்!"- இதை அவர் தெளிவாகவே சொன்னார்! 


அந்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் லட்சக் கணக்கில் ஃபீஸ்! 


"நல்ல என்ஜினீரிங் காலேஜோ, மெடிக்கல் காலேஜோ கிடைத்தால் பிற்காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறார்கள்தானே? அதற்கு இப்போது சில லட்சங்கள் செலவு செய்தால் என்ன தப்பு?"- இதைத்தான் பள்ளி உரிமையாளர்களும் கேட்டனர் - மாணவர்களின் பெற்றோரும் நினைத்தனர்! 


விளைவு? 


200/ 200 சென்டம் வாங்கி (கோர் பாடங்களில்) மெடிக்கல் சீட்டுகளை அள்ளியவர்கள் பெரும்பாலும் இந்தப் பள்ளிகளின் மாணவர்களே! 


அரசுப் பள்ளி, கிராமப்புறமோ நகர்ப்புறமோ, அந்த மாணவர்களால் மெடிகல் சீட் (200/200 IN CORE PAPERS) கற்பனை கூட செய்ய முடியாது - அப்படித் தேறியவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே! 


இது போக +2 மார்க் பற்றிக் கவலையே இல்லாமல் - இன்றைக்கு +2 மார்க் போதுமே என்று வாதாடும் சூர்யாக்கள் இதை கவனிப்பதே இல்லை - மேனேஜ்மெண்ட் கோட்டாவில் லட்சக்கணக்கில் கொடுத்து மெடிகல் சீட் வாங்கும் "வசதி"யும் உண்டு! 


"நீட்"- வந்த பிறகுதான் இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வந்தது! 


+2 வுக்கு என்றே "சிறப்பாக தயார் படுத்தும்"- பள்ளிகள் காற்று வாங்கத் தொடங்கின! 


அவர்களின் குரலாகவே இன்று சூர்யா பேசுகிறார்! 


+2 மார்க் மட்டும் போதும்! 


அதுவும் +2 பொதுத் தேர்வே ரத்தான சூழலில் இவர்களே பள்ளி அளவில் நடத்திய காலாண்டு/ அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் போட்டதாகக் கூறிய "மார்க்" தான்! 


தனியார் பள்ளிகளின் காட்டில் மழைதான்! அடடா, அடடா, அடை மழைதான்! 


இனி வருவார்கள் பாருங்கள் - CORE SUBJECT எல்லாவற்றிலும் 200/200 மார்க்குடன் - சுமார் லட்சம் பேராவது வருவார்கள்! 


நான் எல்லாத் தனியார் பள்ளிகளையும் கூறவில்லை - ஆனால் மிகப் பலவற்றில் இவ்வாறு "அடைமழை" பெய்ய வாய்ப்புண்டு! 


அரசுப் பள்ளி மாணவர்களும், அல்லது மிகப் பல தனியார் பள்ளிகளிலேயே இந்த "சென்டம்" - ஏற்பாட்டுக்கு வசதியற்ற மாணவர்களும் விரலை சீப்பிக் கொண்டு நிற்க வேண்டியதுதான்! 


மூன்று CORE SUBJECT களிலும் 200/200 "வாங்கியதாக" சான்றளிக்கப்பட்ட மாணவர்கள் மெடிகல் சீட்டுகளை அள்ளிக் கொண்டு போவார்கள்! 


இதெல்லாம் சூர்யாவுக்குத் தெரியாமல் இல்லை! 


இப்படி ஒரு அபாயம் இதில் உள்ளதைக் கணக்கிடத் தெரியாதவர்கள் இல்லை இந்த வகையறா ஆசாமிகள்! 


இவர்களின் தனியார் பள்ளிக் கொள்ளைக்கும், 


தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மெடிகல் சீட் வியாபாரத்துக்கும் துணை போகும் ஆசாமிகள்! 


இவர்களின் கலகக் குரலைப் புறக்கணிப்போம்! 


"நீட்"- அவசியம் தேவை! 


அரசே "நீட்"- பயிற்சி மையங்களை விரிவுபடுத்துவதே சரியான தீர்வு! 


#WESUPPORTNEETEXAM 


#நீட்தேர்வைஆதரிப்போம்நன்றி இணையம்


காலம் மாறுகிறது

மணக்கால் அய்யம்பேட்டை | 10:16 PM | Best Blogger Tips

 

*


ஒரு பார்ப்பணரல்லாத இந்து மத சகோதரியின் பதிவு*


*ஐயர்களை மட்டுமே திட்டித் திட்டி*


காலம்  மாறுகிறது  

இது தான் காலத்தின் சுழற்ச்சி.


முதலில் ஒன்றை புரிய வைக்க வேண்டும், நான் பாப்பாத்தி இல்லை,  நான்  ஜாதி பாப்பதும் கிடையாது.. உண்மையை சொல்லுகிறேன்.


பிராமின்ஸ் இல்லை என்றால் ஆன்மிகமும்  கர்நாடக இசையும்  கலாசாரமும் அழிந்தே போய் இருக்கும், இன்றும் கூட நமது கோவில்களை நமது நம்பிக்கைகளை அழியாமல் காத்து வருபவர்கள் இவர்கள்தான்  இது உண்மை.


பார்ப்பான் பார்ப்பான் என்று சொல்லி, சொல்லியே நம் கலாசாரத்தை கெடுத்தவன் இந்த திராவிடம், திக பொறுக்கிகள். 


அரை நூற்றாண்டுகளாக ஐயர்களை மட்டுமே திட்டித் திட்டி ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க.

அப்படி என்னதான் செய்து விட்டார்கள் இந்த பார்பணர்கள்.


ஐயர்கள் யாரும் சண்டைக்கு போவதில்லை, கொலை பண்ணுவது இல்லை, அடுத்த ஜாதியில் தலையிடுவதில்லை, அடுத்தவனை மிரட்டுவது இல்லை,, தண்ணி அடித்து விட்டு தகராறு செய்வதில்லை,  எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. அவர்கள் விஷயத்தில் மிக சரியாக இருப்பார்கள்.


பெரிய பெரிய கம்பெனிகளில் இவர்கள் தான் பெரிய பதவி வகிப்பார்கள், என்றென்றால் நேர்மை, துல்லியமாக திட்டமிடுதல், களவு போவதை அனுமதிக்க மாட்டார்கள்,, எல்லாவற்றிக்கும் மேலாக உண்மையை கம்பெனி MD யிடம் சொல்லி  அதாவது கம்பெனி வளர்வதற்கு என்ன, என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வார்கள் இது அவர்கள் குணம், பெரும்பாலும் பெரிய பெரிய கம்பெனிகளில் வெளியே தெரியாமல் பெரிய பதவியில் அவர்கள் தான் இருப்பார்கள்.


இவர்களிலும் கெட்டவர்கள் இருப்பார்களா. இருக்கும் எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த % சதவிகிதம் மிக குறைவு.


ஆனாலும் அவர்களை பேசி பேசியே வயிறு வளர்க்கிறான் இந்த திக காரன்.         


பார்ப்பான் பார்ப்பான் என்று சொல்லி சொல்லி இழுவுபடுத்தும் நாய்கள்  ஒரு நாளும் அடுத்த ஜாதியை இழிவுபடுத்துவதில்லை,  காரணம் அடுத்த ஜாதியை இழிவு படுத்தினால் எதிர்த்து அடித்து விடுவார்கள்.   


பிராமணர்கள் பற்றி 

------------------------------------

சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் ...


நூற்றுக்கு ஐம்பது பிராமணர்களது பெயர் அதில் இருக்கும் ...


ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் முதல் ... தனது கவிதைகளால் கலங்கடித்த பாரதி தொடர்ந்து .... சுப்ரமணிய சிவா, நீலகண்ட சாஸ்திரிகள் என்று பெரும் பட்டியல் அது ...


அடுப்பங்கரையிலும் இருக்கிறார்கள், அமெரிக்காவிலும், இருக்கிறார்கள்  புரோகிதராகவும், இருக்கிறார்கள்  புரொபஷனலாகவும், இருக்கிறார்கள்.


நீ இட ஒதுக்கீடு என்ற முறையில் அரசாங்க வேலை இல்லை என்றாய், அவர்கள் கவலைப் படவில்லை, கவலைப் பட்டு சோர்ந்து விடவில்லை, போராட்டம் பண்ண வில்லை, உன்னிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அடம் புடிக்க வில்லை,, மாற்றுவழி கண்டார்கள். 


லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றதால் பெரும் கம்பெனிகள் மற்றும்  வெளி நாட்டு கம்பெனிகள் அவர்களை வரவேற்றன.


அவர்கள் அறிவை கொண்டு அமெரிக்காவிலும் பிரான்சிலும் ஜெர்மனியிலும்  பெரிய வளர்ச்சியை கண்டார்கள்...


இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டு பிரஜையாக இருந்தாலும் அந்த நாட்டுக்கு துரோகம் செய்யாத ஒரு இனத்தில் அதுவும் ஒன்று.


உண்மையில் இன்று எந்த இடத்திலும் சாதிக்கலவரங்களுக்கு எந்த பிராம்மணனும் காரணமாக இருந்ததில்லை ... ஆனால் 

கருணாநிதி அவர்கள்  வளர்த்து விட்ட சாதி கட்சிகள் தான் காரணமாக இருந்து வருகின்றன.


அட அறிவு கெட்ட திக நாதாரிகளே..  

------------------------------------

தீண்டாமையைக் கொண்டு வந்தவர்கள் என்ற பழைய பல்லவியை பாடி கொண்டு இருக்காதீர்கள்.


பசுவை தெய்வமாக கொண்டாடும்  கூட்டம்.. எந்த உயிரையும் கொன்று தின்று விடக் கூடாது என்று வாழும் பிராம்மணர்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டனர் ...

அவர்கள் அவர்களுடைய நம்பிக்கையின்படி அணியும் பூணூல் உனக்கு என்ன கொடுமை செய்து விட்டது.


இதே போல இஸ்லாமியர்களின் குல்லாவையும், கிறிஸ்தவனின் சிலுவையையும் கேலி செய்யும் தைரியம் உனக்கு இருக்கிறதா ..??


சிவன்  இல்லை என்று சொல்லும் நீ இயேசு இல்லை, அல்லா இல்லை என்று  சொல்ல முடியுமா ? அந்த தைரியம் உனக்கு இருக்கா ?


ஒன்றை சொல்லுகிறேன்:

------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும், அனைவரும் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று புரட்டு சொல்லி கொண்டு அலைபவர்களுக்கு  ஒன்றை சொல்லுகிறேன்.


* ஒரு கோவிலில் அந்த கருவறைக்குள் ஒரு  பிராமணர் பூஜாரியாக நுழைகிறார் என்றால் அதே கருவறைக்குள் இன்னொரு பிராமணர் போக முடியாது.


* என் கோவிலுக்கு அய்யர் அல்லாத ஒருவர் பூஜை செய்கிறார் என்றால் அந்த கருவறைக்குள் நாங்கள் யாரும் போக முடியாது,, எங்கள் கோவில் தான் ஆனாலும் நாங்கள் நுழைய முடியாது நுழைய மாட்டோம்,, எத்தனை மணி ஆனாலும் அவர் வந்து தான் கருவறைக்குள் நுழைத்து பூஜை பண்ண முடியும்.      


* என்னுடைய வீட்டு பூஜை அறைக்குள் கூட நான் அசைவம் சாப்பிட்டால் நுழைய மாட்டேன்.


கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முந்தைய இரவில் இருந்தே நாங்கள் அசைவம் எதுவும் சேர்ப்பதில்லை,, அது போக எங்கள் கோவிலுக்கு போகும் போது குளித்து சுத்தமாகத்தான் போவோம் இதுதான் எங்களுடைய தெய்வங்களுக்கு நாங்கள் தரும் மரியாதை ...


நான் பிராமண குடும்பம் இல்லை, எனக்கே இந்தக் கட்டுப்பாடு என்றால் ...


ஆனால் நீ அப்படி இல்லை, தெய்வம் இல்லை என்பாய்.. உனக்கு குளிப்பும் கிடையாது, சுத்தமும் கிடையாது. அதனால் தினசரி கறி, மீன் சாப்பிடுவாய், தவறான இடங்களுக்கு செல்வாய்  அதனால் உனக்கு கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரியாது.


கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சமூக ஆர்வலர் போர்வையில் அலையும் அல்லது வரலாறு ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை ?? இவர்கள் நம்மவர்கள் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாவர்கள் என்று. 


எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும், மொகலாயனையும் உடன் பிறவா சகோதரன் என்று கூறும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மணனை ஏன் வெறுக்கிறாய்??


பிராம்மணன் உன்  கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா? அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா?? உன் ஜாதியை ஒழிக்க ஏதாவது செய்தானா ? 


ஒரு கூட்டம் அதுவும் அவனது சுயநலத்திற்காக, அவன் வயிற்றை நிரப்ப  அவன் குடும்ப நன்மைக்காக பார்ப்பான், பார்ப்பான் என்று அலறுகிறான் அதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே ஒரிஜினல் தமிழன் எல்லாம் எங்கே என்ற கேள்வி எழுகிறது.


அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல.!! வெறும் 3 முதல் 5 சதவீதம். "அவர்கள்" நிச்சயம் வாக்கு  அரசியலை நிர்மாணிக்க  முடியாது. ஆனால் இப்போது அவர்களை சுற்றி இந்துக்கள் வாங்கு வங்கி அசைகிறது.


ஒரு காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தால் பிராமணர்களை கேவலப்படுத்துகிறார்கள் நமக்கு என்ன என்று மக்கள் இருந்தார்கள்,, ஆனால் இப்போது அதே மக்கள் பிராமணர்களை பேசினால் இந்துக்களாகிய தன்னை பேசுவதாக எண்ணி கொதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


காலம்  மாறுகிறது  

இது தான் காலத்தின் சுழற்சி.

Forwarded message by T.L. Subramanian

 நம்நகரத்தார்கள் எல்லோரும் பிறாமினாள் இல்லாமல் வாழமுடியுமா  

மணிராமன்
நன்றி இணையம்

சொகுசாக ஆட்டம் போட்ட TV

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 PM | Best Blogger Tips


மக்கள் வரிப்பணத்தில்,

சொகுசாக ஆட்டம் போட்ட 

TV  பயல்களுக்கு 

ஆப்பு வைத்த மோடிஜி!


நெடுங்காலமாக இருந்த ஒரு வழக்கம் மோடியால் நிறுத்தப்பட்டது

என்ன அது?


சமீபத்தில் பெரும்பாலான பத்திரிகைகளின் முதலாளிகள் அரசிடம்  பத்திரிகை நடத்தியிருக்கிறார்கள்.

மன்மோகன் சிங் காலம் TV, பத்திரிகைகளின் பொற்காலம்:

அவர் அலுவல் நிமிர்த்தமாய் வெளிநாடு செல்லும்போதெல்லாம் ஊடகவியலாளர்களையும் 

உடன் கூட்டிச் செல்வார்.

நெடுங்கால  காங்கிரசின்  வழக்கம்தான் அது, மக்களின் வரிப்பணம் தானே.

யாரெல்லாம் போனார்கள் 

என பார்க்கலாம்,

1)  தி ஹிந்து - 

81 வெளிநாட்டுப் பயணங்கள்


2)  எக்னாமிக் டைம்ஸ் - 

74 வெளிநாட்டுப் பயணங்கள்

3)  இந்தியன் எக்ஸ்பிரஸ் - 

70 வெளிநாட்டுப் பயணங்கள்


4)  டைம்ஸ் ஆஃப் இந்தியா - 

61 வெளிநாட்டுப் பயணங்கள்


5)  தைனிக் ஜக்ரான் - 

53 வெளிநாட்டுப் பயணங்கள்


6)  தி ட்ரிப்யூன் - 

46 வெளிநாட்டுப் பயணங்கள்


7)  தைனிக் பாஸ்கர் - 

45 வெளிநாட்டுப் பயணங்கள்,


  தி டெலிகிராஃப் - 

44  வெளிநாட்டுப் பயணங்கள்


9)  ஜெக்தீஸ் சந்திரா ஈ டிவி நியூஸ் - 27 வெளிநாட்டுப் பயணங்கள்.


10) சித்தார்த் ஸாராபாய்           

CNN சி என் என் - 10 வெளிநாட்டுப் பயணங்கள்.


11)  பர்கா தத்

NDTV  என் டி டி வி - 

7 வெளிநாட்டுப் பயணங்கள்.


12)  ஆஷிஸ் சிங்

ABB ஏ பி பி நியூஸ் - 

7  வெளிநாட்டுப் பயணங்கள்.


13)  நிதி ரஸ்தான் NDTV  என்டிடிவி - 

6 வெளிநாட்டுப் பயணங்கள்.


14)  நவிகா குமார் Times Now டைம்ஸ் நவ் - 6 வெளிநாட்டுப் பயணங்கள்.


15)  பால் மல்கோத்ரா CNN சிஎன்என் - 6 வெளிநாட்டுப் பயணங்கள்.


16)  திலீப் திவாரி ZEE Media ஜீ மீடியா - 6 வெளிநாட்டுப் பயணங்கள்.


17)  செளரப் சுக்லா TV Today டிவி டுடே - 6 வெளிநாட்டுப் பயணங்கள்.


இவர்களின் பயணச்செலவு, 

மிகச் சிறந்த உணவு, தங்குமிடம், 

தினமும் மாலையில் விலை 

உயர்ந்த மது வகைகள் எல்லாம் 

நம் வரிப்பணத்தில் நடந்தது.


(ஆதாரம் கேட்டு உயிரை வாங்கும் நபர்கள் , இல்லைவே இல்லை எல்லாம் பொய் என அடம்பிடிப்பதை விட்டுவிட்டு, கூகிளில் தேடிப்பாருங்கள் எல்லாமும்

அங்கே இருக்கிறது.)


மோடி பிரதமரானதும், PTI லிருந்து மட்டும் (4 வருடங்களுக்கு முன்.) ஒருவர் மட்டும் செல்வார்.

பிறகு அதுவும் நிறுத்தப்டடது.

அங்கே ஆரம்பித்தது பத்திரிகைகளின் கோபம்.

இப்போது தெரிகிறதா?

எதற்கு ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் மோடிக்கு எதிராக இருக்கின்றன என்று?


அரசு செலவில் இவர்கள் ஊரும் சுற்றி வந்துவிட்டு, பிரதமருடன் போகும் உயர் அதிகாரிகளுடன் பழக்கமும் ஏற்படுத்திக் கொண்டு,

பல காரியங்கள் சாதித்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.நன்றி இணையம்

அவனிடம் சரணாகதி அடையுங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:49 PM | Best Blogger Tips


மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!


 *நம்பினோர் கைவிடப்படார்..* 


பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்..


குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்..


ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது..


தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்..


சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது..


“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது..


“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்..


“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி..!


"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”


இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்..!


குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை..


போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்..


அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை..


ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்..


ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்..


யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்..


ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது..!


மனிதன் தானே..!


“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்..


ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்..!


“பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,


“அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்..!


அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை..!


போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்..


அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்..!


தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்..


ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்..!


“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்..


அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன..


தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!


“பகவானே! என்னை மன்னித்து விடு!


உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்..


அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!


அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்..


அவனை சரணடைவோம்.. மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு..


நம்புவோம்..


நிம்மதியாக வாழ்வோம்..நன்றி இணையம்