நீட் தேர்வை ஆதரிப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:28 | Best Blogger Tips

 


#NEET


பள்ளிக்கூடத்தில் பத்து வகுப்பு, அப்புறம் +2, அதற்குப் பிறகு பட்டப் படிப்பு 3 வருடம் ஆக 15 வருடம்... 


அதுவே முதுகலைப் படிப்பும் படித்தால் கூட 2 வருடம் சேர்த்து 17 வருடம்... 


அதற்குப் பிறகு B.Ed... 


இப்படிப் படித்துவிட்டு வருபவர்களை "ஆசிரியர் தகுதித் தேர்வு" - என்று தனியாகத் தேர்வு வைப்பது "சமூக அநீதி"! 


இதே போல 10+2+3+2 = 17 வருடம் படித்துவிட்டு வருபவனை எதற்கு IAS/ IPS எல்லாம் எழுத வைத்து சிரமப்படுத்த வேண்டும்? அப்படியே நேரடியாக மாவட்ட கலெக்டர்/ போலீஸ் கமிஷனர் என்று ஆக்க வேண்டியதுதானே?  


அல்லது GROUP -I, GROUP-II... என்றெல்லாம் TNPSC பரீட்சை வைத்து ஏன் சிரமப்படுத்த வேண்டும்? கல்லூரியில் இருந்து வெளியே வந்தாயா?- இந்தா பிடி ஒரு GROUP- I POST! 


எல்லாம் "சமூக அநீதி"! 


+2 வரைக்கும் படித்தவனை "நீட்" தேர்வும் எழுதச் சொல்வது சமூக அநீதி!  


M.Sc B.Ed படித்துவிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் என்ன M.Sc பாடத்திலா தேர்வு எழுதுகிறார்கள்? இவர்கள் பாடம் நடத்தப் போகும் பள்ளிக்கூட ஆசிரியர் லெவலுக்கான கேள்விகளுக்குதானே விடை அளிக்கிறார்கள்? 


அப்புறம் +2 முடித்துவிட்டு மெடிகல் போறவனுக்கு மட்டும் ஏன் அதே +2 பாடத்தில் இருந்து கேள்வி?? "சமூக அநீதி"! 


மாபெரும் கல்வியாளர்,   மிகப்பெரும் "சமூக நீதி" புரட்சிக்காரர்- கூத்தாடி சூர்யா கேட்ட கேள்வியைப் போல - மேற்கண்ட வகையில் பலரும் கேட்க முடியும்! 


 2007 என்று நினைவு - அந்த ஆண்டுடன் என்ஜீனிரிங் / மெடிக்கல் போன்ற தொழிற்கல்விகளுக்கான ENTRANCE EXAMINATIONS மாநில அளவில் நீக்கப்பட்டன! 


+2 மதிப்பெண் "மட்டும்" போதும் என்று ஆனது! 


அள்ளினார்கள் பாருங்கள் இடங்களை - நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இதற்கென்றே பிரத்யேகமாக அமைந்த பள்ளிகளின் மாணவர்கள்! 


ENGINEERING ஆ? MATHS/ PHYSICS/ CHEMISTRY 3 கோர் சப்ஜெகட்டுகளிலும் 200/ 200! 


மெடிக்கலா? PHYSICS/ CHEMISTRY/ BIOLOGY மூன்றிலும் 200/ 200! 


மாணவர்களைப் போட்டு அப்படி தயார் செய்தன - நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பிரத்யேகமான '+2 ஸ்பெஷலிஸ்ட்' பள்ளிகள்! 


பா


டத்தில் ஆழமான ஞானமோ, வித்தியாசமாக ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு நுட்பமாக அந்தப் பாடத்தின் CONCEPT ஐ விளங்கிக் கொண்டு பதிலளிக்கும் மதியூகமோ தேவையே இல்லை! 


டெஸ்ட் எழுது! டெஸ்ட் எழுது! டெஸ்ட் எழுது! வாரா வாரம், மாதா மாதம் - வீக்லி ரிவிஷன் டெஸ்ட், மன்த்லி ரிவிஷன் டெஸ்ட்.... - போட்டு அரைத்து அரைத்து - 200/200 அது ஒன்றே இலக்கு! 


இப்படிப்பட்ட பள்ளிகளை "பிராய்லர் பள்ளிக் கூடங்கள்"- என்றே கல்வியாளர்கள் வர்ணித்தனர்! 


ஒரு தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் கூட - இப்படிப்பட்ட பள்ளிகளின் 'கல்வித் தந்தை' ஒருவர் வெளிப்படையாகவே கூறினார்:- "எங்களுடைய நோக்கம் அவனை இந்த நிலையில் விஞ்ஞானி ஆக்குவதல்ல - கோர் சப்ஜெக்ட் மூன்றிலும் செண்டம் வாங்க வைப்பது ஒன்றுதான்!"- இதை அவர் தெளிவாகவே சொன்னார்! 


அந்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் லட்சக் கணக்கில் ஃபீஸ்! 


"நல்ல என்ஜினீரிங் காலேஜோ, மெடிக்கல் காலேஜோ கிடைத்தால் பிற்காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறார்கள்தானே? அதற்கு இப்போது சில லட்சங்கள் செலவு செய்தால் என்ன தப்பு?"- இதைத்தான் பள்ளி உரிமையாளர்களும் கேட்டனர் - மாணவர்களின் பெற்றோரும் நினைத்தனர்! 


விளைவு? 


200/ 200 சென்டம் வாங்கி (கோர் பாடங்களில்) மெடிக்கல் சீட்டுகளை அள்ளியவர்கள் பெரும்பாலும் இந்தப் பள்ளிகளின் மாணவர்களே! 


அரசுப் பள்ளி, கிராமப்புறமோ நகர்ப்புறமோ, அந்த மாணவர்களால் மெடிகல் சீட் (200/200 IN CORE PAPERS) கற்பனை கூட செய்ய முடியாது - அப்படித் தேறியவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே! 


இது போக +2 மார்க் பற்றிக் கவலையே இல்லாமல் - இன்றைக்கு +2 மார்க் போதுமே என்று வாதாடும் சூர்யாக்கள் இதை கவனிப்பதே இல்லை - மேனேஜ்மெண்ட் கோட்டாவில் லட்சக்கணக்கில் கொடுத்து மெடிகல் சீட் வாங்கும் "வசதி"யும் உண்டு! 


"நீட்"- வந்த பிறகுதான் இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வந்தது! 


+2 வுக்கு என்றே "சிறப்பாக தயார் படுத்தும்"- பள்ளிகள் காற்று வாங்கத் தொடங்கின! 


அவர்களின் குரலாகவே இன்று சூர்யா பேசுகிறார்! 


+2 மார்க் மட்டும் போதும்! 


அதுவும் +2 பொதுத் தேர்வே ரத்தான சூழலில் இவர்களே பள்ளி அளவில் நடத்திய காலாண்டு/ அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் போட்டதாகக் கூறிய "மார்க்" தான்! 


தனியார் பள்ளிகளின் காட்டில் மழைதான்! அடடா, அடடா, அடை மழைதான்! 


இனி வருவார்கள் பாருங்கள் - CORE SUBJECT எல்லாவற்றிலும் 200/200 மார்க்குடன் - சுமார் லட்சம் பேராவது வருவார்கள்! 


நான் எல்லாத் தனியார் பள்ளிகளையும் கூறவில்லை - ஆனால் மிகப் பலவற்றில் இவ்வாறு "அடைமழை" பெய்ய வாய்ப்புண்டு! 


அரசுப் பள்ளி மாணவர்களும், அல்லது மிகப் பல தனியார் பள்ளிகளிலேயே இந்த "சென்டம்" - ஏற்பாட்டுக்கு வசதியற்ற மாணவர்களும் விரலை சீப்பிக் கொண்டு நிற்க வேண்டியதுதான்! 


மூன்று CORE SUBJECT களிலும் 200/200 "வாங்கியதாக" சான்றளிக்கப்பட்ட மாணவர்கள் மெடிகல் சீட்டுகளை அள்ளிக் கொண்டு போவார்கள்! 


இதெல்லாம் சூர்யாவுக்குத் தெரியாமல் இல்லை! 


இப்படி ஒரு அபாயம் இதில் உள்ளதைக் கணக்கிடத் தெரியாதவர்கள் இல்லை இந்த வகையறா ஆசாமிகள்! 


இவர்களின் தனியார் பள்ளிக் கொள்ளைக்கும், 


தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மெடிகல் சீட் வியாபாரத்துக்கும் துணை போகும் ஆசாமிகள்! 


இவர்களின் கலகக் குரலைப் புறக்கணிப்போம்! 


"நீட்"- அவசியம் தேவை! 


அரசே "நீட்"- பயிற்சி மையங்களை விரிவுபடுத்துவதே சரியான தீர்வு! 


#WESUPPORTNEETEXAM 


#நீட்தேர்வைஆதரிப்போம்



நன்றி இணையம்