பிரபஞ்சம் தோன்றியவிதம்----சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips

இந்து என்ற சொல்லில் எதைக்குறிப்பிடுகிறேனோ அதுவும் வேதாந்தம் என்ற சொல்லும் ஒன்றுதான்
கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வ மிதம் விஜ்ஞாதம் பவதி (முண்டக உபநிடதம்1.1.3)எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிய முடியும்? இந்த ஆராய்ச்யையே உபநிடதங்கள் தங்கள் ஒரே கருத்தாக கொண்டிருக்கின்றன.தற்கால மொழியில் சொல்வதானால்,பொருட்களின் ஓர் அறுதி ஒருமையே உபநிடதங்களின் நோக்கம்

ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே துவைத உபதேசமான உபாசனையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,இறுதியில் நம்முள்ளே ஒடுக்கிக்கொள்பவனே இறைவன் என்று முதலில் கற்பிக்கப்படுகிறது. புற அக இயற்கையை வழிநடத்துபவரும் ஆள்பவரும் அவரே,இயற்கைக்கு வெளியே இருப்பதுபோல் தோன்றுகிறார் எனவே அவரை வணங்கவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது.
அடுத்தபடியில் அவர் இயற்கைக்கு வெளியில் இல்லை,ஆனால் அந்தர்யாமியாக,அதாவது நமக்குள்ளே ஊடுருவிக்கலந்திருக்கிறார் என்று அதே ஆசிரியர் போதிக்கிறார்,இறுதியில் அந்த இரண்டு கருத்தும் கைவிடப்பட்டு,உண்மையானவை எல்லாம் அவரே,வேறுபாடு என்பது இல்லை என்று போதிக்கப்படுகிறது. தத்துவமஸி ச்வேதகேதோ(சாந்தோக்கிய உபநிடதம் 6.8.7)ச்வேதகேது அதுவே நீ.அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் அந்த ஒரே பொருள்தான் மனித ஆன்மா. அதுவே நீ,என தெளிவுபடுத்தப்படுகிறது. இங்கு எதற்காகவும் விட்டுக்கொடுத்தல் இல்லை,பிறருடைய அபிப்ராயங்கள் பற்றி பயம் இல்லை,உண்மை தைரியமாக கூறப்படுகிறது.

பிரபஞ்சதோற்றம் பற்றிய கருத்து
---------------
வேதாந்த நெறிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஒன்று பிரபஞ்சக்கருத்து இரண்டாவது பொதுவான மன இயல் உண்மை.வேறுபட்ட ஆற்றல்களுக்கிடையே ஒற்றுமை இருக்கிறது என்பதை ஏதோ சில காலத்திற்கு முன்புதான் விஞ்ஞானம் கண்டுபிடித்தது.வெப்பம்,காந்தம்,மின்சாரம் என்ற வேறுபட்ட ஆற்றல்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே என்றும்,இவை அனைத்தையும் அந்த அடிப்படை சக்திகளாக மாற்ற முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த அடிப்படை சக்தியை எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம்,ஆனால் இந்தக் கருத்து நமது சம்ஹிதைகளிலேயே சொல்லப்பட்டுவிட்டது.இந்த உலகில் காணப்படும் ஈர்ப்பாற்றல்,விலக்கும் ஆற்றல்,மின்சாரம் உட்பட அனைத்தும் பிராணன் என்னும் அடிப்படை சக்தியிலிருந்தே பிறக்கின்றன

பிராணன் என்றால் என்ன?பிராணன் என்பது ஸ்பந்தனம்,அதிர்வு.(பிராணன் என்றால் மூச்சு அல்ல)இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒடுங்கி முன்பிருந்ததைப்போல் ஆகும் போது இந்த அளவற்ற ஆற்றல் என்ன ஆகிறது?அது அழிந்துவிடுகிறதென்றா நினைக்கிறீர்கள்?இல்லை,அழிவதில்லை.அவை அழிந்துவிட்டால் அடுத்த அலை எங்கிருந்து தோன்ற முடியும்?இயக்கம் என்பது அலைகளைப்போல் எழுவதும் விழுவதுமாக அல்லவா உள்ளது.

இனி இந்த பிரபஞ்சம் வெளிப்படுவதைக் குறிக்கின்ற சிருஷ்டி என்பதை கவனிக்கவேண்டும்.இதன் பொருள் கிரியேஷன் என்பதல்ல.இதற்கு இணையான ஆங்கில வார்த்தையில்லை,தோற்றத்திற்கு வருதல் என்று சொல்லலாம்.ஒரு கல்பத்தின் முடிவில் எல்லாம் நுண்மையாகி,மேலும் நுண்மையாகி சிருஷ்டிக்கு முன்பிருந்த நிலையை அடைகின்றன,மறுபடியும் வெளிப்பட தயாராக அந்த நிலையிலே அமைதியாக இருக்கின்றன.மீண்டும் அதிலிருந்து வெளிப்படுவதே சிருஷ்டி அல்லது தோற்றத்திற்கு வருதல்.அந்த அமைதிநிலையில் எல்லா ஆற்றல்களும் என்னவாகின்றன? அவைகள் பிராணனில் ஒடுங்கிவிடுகின்றன.இந்த பிராணன் ஏறக்கறைய இயக்கமற்றதாகிவிடுகிறது.முற்றிலுமாக இயக்கமற்று விடுவதில்லை.இதைத்தான் வேத ஸுக்தம்.ஆனீதவாதம்(ரிக்வேதம் 10.129முதல்322)அது அதிர்வுகளின்றி அதிர்ந்தது என்று கூறுகின்றன.

ஜடம் என்று நாம் அழைக்கின்ற பொருள் என்னவாகிறது?ஜடத்திலெல்லாம் சக்திகள் வியாபித்திருக்கின்றன என்பது உங்ளுக்கு தெரியும்..இந்த ஜடம் ஆகாசத்தில் ஒடுங்குகிறது.(ஆகாசம் என்பது வானம் அல்ல).ஆகாசத்தை ஈதர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.ஆகாசமே ஜடத்தின் மூலநிலை.சக்தியின் மூலநிலை பிராணன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த பிராணனின் இயக்கத்தால் ஆகாசம் அதிர்கிறது.அடுத்து சிருஷ்டி ஆரம்பிக்கும் போது இந்த அதிர்வு விரைவாகிறது.அப்போது ஆகாசம் அலையாகத் திரண்டடித்து,சூரியர்கள் சந்திரர்கள் என்றேல்லாம் நாம் அழைக்கின்ற இந்த உருவங்கள் ஆகின்றன.
யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம்..(கடோபநிடதம்2.3.2)இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிராணனின் அதிர்வால் தோற்றத்திற்கு வருகின்றன.

பிராணன் ஆகாசத்திற்குக் கொடுக்கும் அடிகளின் பலனாக வாயு அல்லது அதிர்வுகள் உண்டாகின்றன.இந்த அதிர்வுகளின் வேகத்தால் ஏற்படும் உராய்வினால் வெப்பம் அல்லது தேஜஸ் தோன்றுகிறது.இந்த வெப்பம் திரவமாகிறது,இதுவே அப்பு அல்லது நீர்,பின்னர் இந்த திரவம் திடன்கிறது.ஆகாசமும் அதிர்வும் இருந்தது,பின்னர் வெப்பம் வந்தது,பின்னர் அது திடபொருளாகி,தூலப்பொருளாகச் சுருங்கியது,ஒடுங்கும் போது துாலத்திலிருந்து தொடங்கி இதே முறையில் பின்னோக்கி செல்கிறது.இப்படியே பிரபஞ்சம் தோன்றித்தோன்றி ஒடுங்கிய வண்ணம் இருக்கிறது.

ஆகாசத்தின் துணையின்றி பிராணன் மட்டும் தனித்து இயங்க முடியாது.அதிர்வு,எண்ணம்,இயக்கம் என்று நாம் அறியும் சக்திகள் அனைத்தும் பிராணனுடைய பல்வேறு நிலைகள்.உருவங்கள் அனைத்தும் ஆகாசத்தின் பல்வேறு நிலைகள்.ஆதாரப்பொருள் இன்றி பிராணனால் தனித்து இயங்க முடியாது.ஆகாசமே அதன் ஆதாரப்பொருள்.ஜடம் இல்லாத சக்தியையோ,சக்தி இல்லாத ஜடத்தையோ இந்த பிரபஞ்சத்தில் இல்லை இரண்டும்இணைந்திருக்கின்றன.

தூலப்பொருட்கள் ஒவ்வொன்றும் தன்மாத்திரைகள் எனப்படும் நுண் அணுக்களால் ஆனது.ஒரு பூவிலிருந்து மணம் என் மூக்கிற்கு வருகிறது.மலர் அங்கே இருக்கிறது மலரிலிருந்து ஏதோ ஒன்று என் மூக்கை வந்தடைகிறது இதுதான் தன்மாத்திரை எனப்படும்.பஞ்சபூதங்கள் அனைத்தும் இதே போல் தன்மாத்திரைகளால் ஆக்கப்பட்டது.தன்மாத்திரைகளை இன்னும் நுட்பமான அணுக்களாக பிரிக்கலாம்.தன்மாத்திரைகளிலிருந்து தான் நாம் காண்கின்ற உணர்கின்ற பொருட்களான நிலம் நீர் போன்றவை படைக்கப்பட்டுள்ளன.இது உங்கள் மனத்தில் நன்றான பதியவேண்டும்.

இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் சூட்சுமத்திலிருந்துதான் ஸ்தூலம் பிறக்கிறது.ஸ்தூலமாகிய ஜடம் தான் கடைசியில் தோன்றுகிறது.ஆற்றலில் ஒருமை உள்ளது.அது பிராணன்.ஜடத்தில் ஒருமை உள்ளது அது ஆகாசம்.இனி இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா?இவற்றை சேர்த்து ஒன்றாக்க முடியுமா?தற்கால விஞ்ஞானத்தில் இந்த கேள்விக்கு பதில் இல்லை.இதற்கு பதில் காணும் ஆற்றலை அவை இன்னும் பெறவில்லை.அந்த ஆற்றலை பெற வேண்டுமானால்,பழைய கருத்துக்களாகிய பிராணன்,ஆகாசம் போன்றவற்றை அவை இப்போதுதான் கண்டுபிடித்து வருகின்றன.
பிராணனுக்கும் ஆகாசத்திற்கும் மேலே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்று முன் மனத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலை நட்டினர் மனத்தின் செயல்பாடுகளைக்கண்டு அதிசயித்து நிற்கின்றனர்,ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனத்தைப்பற்றிய அறிவை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.மனம் என்பது ஜடப்பொருள் என்பதை நாம் முன்பே கண்டுபிடித்து விட்டோம்.விஞ்ஞானிகள் இப்போதுதான் அதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.உடல் என்பது தூலசரீரம்,இதற்கு பின்னால் இருக்கும் மனம் சூட்சும சரீரம்.இந்த இரண்டும் ஜடப்பொருளால் ஆக்கப்பட்டது.

இந்த மனம் என்பது என்ன? நாம் எதையும் உணர்வதற்குப் புற உறுப்புகள் (கண்,காது,நாக்கு,மூக்கு,தோல்) மட்டுமே காரணம் அல்ல.பார்வைக்கான உண்மையான கருவி கண் அல்ல,இந்திரியங்கள்(மூளை மையங்கள்) எனப்படும் வேறு கருவிகள் உள்ளன.இவையே அவற்றை செய்கின்றன.இந்திரியம்(மூளை மையங்கள்) கெட்டுவிட்டால் புறத்தில் கண் இருந்தாலும் பார்க்கமுடியாது. கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இந்திரியங்கள் உள்ளன.இந்த எல்லா இந்திரியங்கள் அதனுடன் புத்தி,சித்தம்,அகங்காரம் இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றையே நாம் சூட்சும சரீரம் என்று அழைக்கிறோம்.

இனி மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்றால் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.சித்தத்தை அமைதியான குளத்திற்கு ஒப்பிடலாம்.இங்குதான்.அனைத்து பதிவுகளும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.ஒரு பெரிய நினைவகம்,நினவுகளை சேமித்து வைக்கும் இடம்.பல்வேறு காரணங்களால் இந்த சித்தம் அதிரும் போது அதை மனம் என்கிறோம்.ஒரு சப்தம் வெளியிலிருந்து வருகிறது,அது பொறிகள் பின்பு புலன்கள் வழியாக சித்தத்தை அதிர வைக்கிறது இன்னதென்று அறியாத அந்த நிலையே மனம்.புத்தி என்பது என்ன?

வெளியில் ஒரு பொருளை பார்க்கிறோம் அதைப்பற்றி பதிவு இந்திரியங்கள் வழியாக மனத்திற்கு வருகிறது மனம் அதை புத்தியின் முன் கொண்டுசெல்கிறது.சித்தத்தில் ஏற்கனவே உள்ள பழைய பதிவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்து அது இன்னதென்று முடிவெடுக்கிறது,இது தான் புத்தியின் வேலை.இதனுடன் நான் என்ற உணர்வும் உள்ளது.இவை அனைத்தும் சேர்ந்ததுதான் சூட்சும சரீரம். அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது,இந்த உடல் என்பது ஜடப்பொருளின் தொடர்ந்த பிரவாகம் ஆகும்.இதில் ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன,ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.ஓர் ஆற்றைப்போன்றது இது.நீர் இடம் மாறிக்கொண்டேயிருக்கிறது.என்றாலும் இவை எல்லாவற்றையும் மனத்துள் ஒன்று சேர்த்து அதை ஆறு என்று அழைக்கிறோம்.மனமும் இதேபோல்தான் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது.

அடுத்தது ஆன்மா பற்றிய கருத்து.ஆன்மா என்னும் வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது ஏனெனில் ஆன்மா பற்றிய கருத்து ஜரோப்பாவில் இல்லை.மனமும் உடலும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கின்றன,எனினும் மாறாத ஒன்று நம்முள் இருக்கிறது.தொடர்ந்து மாறுகின்ற இந்த உடலையும் மனத்தையும் மாறாததுபோல் தோன்றச்செய்வது இதுவே.
நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி...கீதை2.23...இந்த ஆன்மாவை ஆயுதங்கள் துளைக்க முடியாது,நெருப்பு எரிக்க முடியாது,தண்ணீர் நனைக்கமுடியாது,காற்று உலர்த்த முடியாது.இந்த ஆன்மா மாறாதது,இது எங்கும் நிறைந்திருக்கிறது.நித்தியமானது.

---------தொடரும்

-------சுவாமி விவேகானந்தர்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..

SONY
HP
DELL
SAMSUNG
TOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

லாப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்: கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள்.
உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள். Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும்.
ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள்.
ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.
Screen Resolution மிகக் குறைந்தது 800-600 Screen Resolution முதல் 1600-1200 Screen Resolution வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settings களை செய்துScreen ஐப் பார்வையிடுங்கள். சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settingsஅதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.
USB2மற்றும் Fire wire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை Pods, Digital i Pods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.
இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Cardபயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..

SONY
HP
DELL
SAMSUNG
TOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்

Laptop Configuration

Processor

Processor
என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor

Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள்  பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன்  GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic
மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

லாப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்: கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள்.
உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள். Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும்.
ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள்.
ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.
Screen Resolution
மிகக் குறைந்தது 800-600 Screen Resolution முதல் 1600-1200 Screen Resolution வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settings களை செய்துScreen ஐப் பார்வையிடுங்கள். சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settingsஅதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.
USB2
மற்றும் Fire wire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை Pods, Digital i Pods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.
இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Cardபயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.
  
 Via மைலாஞ்சி ( Mylanchi )

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:54 PM | Best Blogger Tips

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..
http://binscorner.com/pages/v/very-urgent-if-you-lose-your-mobile.html

via ; பறையோசை

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின்
அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..
http://binscorner.com/pages/v/very-urgent-if-you-lose-your-mobile.html

via ; பறையோசை

முளைக் கொள்ளு சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

முளைக் கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்
முளைக் கொள்ளு பால்  - 100 மி.லி
தண்ணீர்  - 200 மி.லி
காரட், தக்காளி, வெங்காயம்,
பீன்ஸ், மல்லி, கருப்பிலை, புதினா
இஞ்சி, பூண்டு எல்லாம் கலந்த - 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள், அல்லது
தேன், வெல்லம்  - 25 கிராம்

முளைக் கொள்ளுப் பால் செய்முறை

எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து எட்டு முதல் பதினாறு மணி நேரம் ஈரத்துணியில் வைத்துக் கட்டினால் நல்ல வெள்ளை முளை வரும். இதை எடுத்து நீர் கலந்து அரைத்தால் முளைப்பால் ஆகும்.

செய்முறை

எல்லாக்காய்கறி, கீரைகளைக் கழுவி தோல் சீவி காரட் திருகல் போல் செய்து நீரில் கலந்து சூடுசெய்யவும். கொதி நிலையில் மெதுவாக முளைக் கொள்ளுப்பாலை மெதுவாகக்கலக்கிய படி வேகவிடவும். இனிப்பு அல்லது மிளகுசீரகத்தூள் கலந்து சூடு ஆறும் முன் வடிகட்டியும் வடிகட்டாமலும் சாப்பிடலாம். 

(காரம் தேவையென்றால் மிளகு, சீரகத் தூள் சேர்க்கலாம். இனிப்பு தேவையென்றால் தேன், வெல்லம் சேர்க்கலாம்)

Via  ஆரோக்கியமான வாழ்வு

இயற்கை !வைத்தியம் டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:47 PM | Best Blogger Tips

1.உடல் உறுப்புகள் பலப்பட:---ஜீவ கல்பம்.
2.-நீரழிவு நோய் நீங்க:---சர்க்கரை நிவாரணி,மதுமேகச் சூரணம்.

3.வாத நோய்கள் தீர:--- தாளிசாதிச் சூரணம், ஆறுமுக செந்தூரம்,அயக் காந்த செந்தூரம்,சண்டமாருதச் செந்தூரம்.

4.வயிற்றுப்போக்கு,இரத்தப் போக்கு நீங்க:-படிக லிங்கச் செந்தூரம்,பவழபஸ்பம்,படிகாரச் செந்தூரம்.

5.இருமல்,நுரையீரல் கோளாறுகள், ஆஸ்த்மாதீர:--தாளிசாதிச் சூர
ணம்,திப்பிலி ரசாயனம்,பவழ பஸ்பம்,கணடங்கத்தரி,தூதுவேளை லேகியங்கள்.

6.வெள்ளை,வெட்டை,நீர்க்கடுப்பு நீங்க:----படிகாரபஸ்பம்,குங்கிலிய பஸ்பம்.

7.உடல் பருமன் குறைய:---அயக்காந்த செந்தூரம்.

8.வயிற்றுக் கோளாறு, அஜீரணம்,குன்மம் தீர:----பஞ்ச தீபாக்கினி
சூரணம்,திரிகடுகுச் சூரணம்,அ~;ட சூரணம்,ஆமையோடு பஸ்பம்,
சங்கு பஸ்பம்.

9.இரத்தக் கொதிப்புபோக:---லிங்க செந்தூரம்.

10.குடல்புண்,வாய்ப்புண்நீங்க:---திரிபலாதிச்சூரணம்,படிகார பஸ்பம்.

11.தீராதகாய்ச்சல்(சுரம்)தீர:-திரிகடுகுச் சூரணம்,லிங்க செந்தூரம், அன்னபேதிச் செந்தூரம்.

12.மூலம்,பவுந்திரம்தீர:---தேத்தான் கொட்டை லேகியம்,கருணைக் கிழங்குலேகியம்,நாக பஸ்பம்.

13.ஞாபக சக்தி பெருக, கல்வியில் தேர்ச்சி பெற:-வல்லாரை லேகியம்,வல்லாரைச் சூரணம்,வல்லாரைக் கேப்சூல்ஸ்.

14.தோல்வியாதிகள் சகலமும் நீங்க:--பரங்கிப் பட்டைச் சூரணம்,
பரங்கிப்பட்டைஇரசாயனம், கந்தக பஸ்பம், பலகரை பஸ்பம், ரச
கெந்தி மெழுகு,அருகன் தைலம்.

15.கூந்தல் வளரச்சிக்கு:---மினு மினுப்புக் கூந்தல் தைலம்.

16.இதய நோய்கள் அனைத்தும் தீர:-- சிருங்கி பஸ்பம், அருகம் புல் கேப்சூல்ஸ்.

17.ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி நீங்க:-- அமுக்கராச் சூரணம்,அசுவ கந்திலேகியம்,தாது பு~;டி லேகியம்.

18.தாது பு~;டிக்கு:---தங்க பஸ்பம்,வெள்ளிபஸ்பம்,தாமிர பஸ்பம்.

19.வாயுத்தொல்லை நீங்க:--திரிகடுகு லேகியம்,வெள்ளைப் ப+ண்டு லேகியம்.

20.எய்ட்ஸ்,புற்றுநோய் தீர:--அமிர்த சஞ்சீவி செந்தூரம்,ரசபஸ்பம்,

அசுவ கெந்தி சூரணம்.
Via Gnanayohi Yohi

மாரடைப்பை தடுத்த சுக்கு(உண்மை சம்பவம்)

மணக்கால் அய்யம்பேட்டை | 1:43 PM | Best Blogger Tips

மாரடைப்பை தடுத்த சுக்கு(உண்மை சம்பவம்);
--------------------------------------------------------------
எங்களிடம் வருடாவருடம் மாங்காய் வாங்க வரும் பக்கத்து ஊர் வியாபாரி காலையில் மாங்காய் வாங்க எங்கள் தோப்பிற்கு வந்தார்.அவருடைய தாயார் நலமா என விசாரித்தேன்,அப்பொழுது அவர் சொன்ன சம்பவம்..,

நேற்று அவருடைய தாயாருக்கு திடீரென்று மூச்சு திணறலும்,நெஞ்சுவலியும் வந்துள்ளது அவசரமாக எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார் அவர்கள் பார்க்க முடியாது என சொன்னவுடன் காரில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்களும் கை விரித்துள்ளார்கள்,மருத்துவமனையின் பெரிய மருத்துவர் உடனே தஞ்சாவூர் கொண்டு போங்கள் அப்பொழுதுதான் பிழைக்க வாய்ப்புள்ளது என்றாராம்.

உடல் பலகீனமான நிலையிலும் அவருடைய தாயார் தாகமாக உள்ளது சுக்கு காபி வாங்வா என்றாராம். ஒரு கடையிலும் சுக்கு காபி இல்லாததால் இவரே சுக்கு வாங்கி ஒருகடையில் கொடுத்து பால்கலக்காமல் சுக்கு காபி போட்டு அவர் அம்மாவிடம் கொடுத்து குடிக்க கொடுத்திருக்கிறார்,சுக்கு காபி குடித்த சிறிது நேரத்தில் ஏப்பம் வந்துள்ளது பிறகு அந்த அம்மாவின் வலி முற்றிலும் நீங்கியுள்ளது.ஊருக்கு பஸ்ஸிலேயே அழைத்து வந்துள்ளார்.காலையில் எழுந்து வழக்கம்போல் வீட்டு வேலைகளை பார்த்ததாராம்.

குறிப்பு;
ஒட்டு மாங்காய்,நீலம்,காசா லட்டு போன்ற மாங்காய்களை மிகவும் குறைந்த விலைக்கு கேட்டதால் மாங்காய் கொடுக்கமுடியாது என்றேன் நாளைக்கு வந்து பேசுகிறேன் என்றியிருக்கிறார் வரட்டும் பார்ப்போம்..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
எங்களிடம் வருடாவருடம் மாங்காய் வாங்க வரும் பக்கத்து ஊர் வியாபாரி காலையில் மாங்காய் வாங்க எங்கள் தோப்பிற்கு வந்தார்.அவருடைய தாயார் நலமா என விசாரித்தேன்,அப்பொழுது அவர் சொன்ன சம்பவம்..,

நேற்று அவருடைய தாயாருக்கு திடீரென்று மூச்சு திணறலும்,நெஞ்சுவலியும் வந்துள்ளது அவசரமாக எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார் அவர்கள் பார்க்க முடியாது என சொன்னவுடன் காரில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்களும் கை விரித்துள்ளார்கள்,மருத்துவமனைய
ின் பெரிய மருத்துவர் உடனே தஞ்சாவூர் கொண்டு போங்கள் அப்பொழுதுதான் பிழைக்க வாய்ப்புள்ளது என்றாராம்.

உடல் பலகீனமான நிலையிலும் அவருடைய தாயார் தாகமாக உள்ளது சுக்கு காபி வாங்வா என்றாராம். ஒரு கடையிலும் சுக்கு காபி இல்லாததால் இவரே சுக்கு வாங்கி ஒருகடையில் கொடுத்து பால்கலக்காமல் சுக்கு காபி போட்டு அவர் அம்மாவிடம் கொடுத்து குடிக்க கொடுத்திருக்கிறார்,சுக்கு காபி குடித்த சிறிது நேரத்தில் ஏப்பம் வந்துள்ளது பிறகு அந்த அம்மாவின் வலி முற்றிலும் நீங்கியுள்ளது.ஊருக்கு பஸ்ஸிலேயே அழைத்து வந்துள்ளார்.காலையில் எழுந்து வழக்கம்போல் வீட்டு வேலைகளை பார்த்ததாராம்.

குறிப்பு;
ஒட்டு மாங்காய்,நீலம்,காசா லட்டு போன்ற மாங்காய்களை மிகவும் குறைந்த விலைக்கு கேட்டதால் மாங்காய் கொடுக்கமுடியாது என்றேன் நாளைக்கு வந்து பேசுகிறேன் என்றியிருக்கிறார் வரட்டும் பார்ப்போம்..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:42 PM | Best Blogger Tips

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்:-

* அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து  பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். 

* கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

* ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும். 

* ஆற்றுத்தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும். 

* பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். 

* கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.

Via  Karthikeyan Mathan

ஆரோக்கியமான இயற்கை மருத்துவ குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:41 PM | Best Blogger Tips

ஆரோக்கியமான  இயற்கை மருத்துவ குறிப்புகள் :-

* முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.

* இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு  படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.

* கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.

* 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.

* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

* இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

* அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.

* இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.* முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.

* இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.

* கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.

* 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.

* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

* இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

* அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.

* இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.
Via Karthikeyan Mathan