வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.
ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை
தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள்
பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது
எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு
கேலிக்குரியதாக மாறிவிட்டது.
ஆண்களின் புறத்தோற்றத்தை
கெடுப்பதில், வழுக்கை முக்கிய கெடுபங்கை வகிக்கிறது.எத்தனையோ நல்ல
விசயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும்,அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு
வட்டம், மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது, அவர்களும்
நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன்தனிமைப்பட்டுபோய்,
மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள், இதனால் சில ஆண்களுக்கும்
மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகிவிடுகிறது.
மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது
போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால்
அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது பார்ப்பவர்களின்
மனத்தளவில் ஏற்படும் ஒரு தேவையற்ற உணர்வே.
வழுக்கை ஏன் விழுகிறது?
ஆண்களுக்கு வழுக்கையை ஏற்படுத்தும் காரணிகள்
தலையை சரிவர பராமரிக்காமல், உண்டாகும் அழுக்கு ,அதனால் ஏற்படும்
பொடுகினாலும் குடும்ப பொறுப்பு அல்லது பணிச்சுமை காரணமாக ஏற்படும்
மனஉளைச்சலாலும் , மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற உடல் உள் நோய்கள்
, வீரியமுள்ள சுரங்கள் வந்தாலும்,
புகை பிடிப்பதும், கை கால்
வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் நோய் எதிர்ப்புக்காக அலோபதி
மாத்திரைகளை சாப்பிடுவதும் தலைமுடி உதிர்வை அதிகம் உண்டாக்கும்.
எப்போதும் வெந்நீரில் குளிப்பதும், தலைமுடியை கருப்பாக்க டை அடிப்பதாலும்
கூட முடிகள் கொட்டும், தலை விரைவில் முடியை இழந்து , வழுக்கையாகும்.
மேலும், இயற்கையிலேயே சிலரது உடலில், இரத்தத்தில், முடி வளரத்தேவையான்
ஹார்மோன் மற்றும் புரதத்தின் அளவு குறைவதாலும், தலை வழுக்கை உண்டாகும்.
ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே நடமாட முடியாதபடி வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.
பெண்களுக்கு வழுக்கை ஏற்படுத்தும் காரணிகள்
இயல்பாக பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் காலங்களான
12 வயது முதல் 15 வயது வரை தலைமுடி அதிகம் இழக்க நேரிடும். பெண்களுக்கு
மாதாந்திர மென்செஸ் காலங்களில் ஏற்படும் அதிக வெள்ளைபடுதலாலும், பெண்களின்
பிரசவ காலங்களிலும் மற்றும் பெண்களின் 45 வயது அல்லது அவர்களின் மேனோபாஸ்
காலங்களிலும் அதிக தலைமுடி இழப்பு காணப்படும்.
மற்றும்
சிலருக்கு தைராய்டு கோளாறுகளாலும், கருப்பை சம்பந்தமான உடலியல் பாதிப்பின்
போதும், இவற்றினால் ஏற்படும் ஹார்மோன் அதீதசுரப்பு அல்லது
குறைசுரப்பினாலும், தலைமுடி உதிரும்.
அலோபதி கர்ப்பத் தடை
மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும், அவசர நகர்ப்புற வாழ்வியல் சூழலில்
ஃபாஸ்ட் ஃபுட் எனும் உடல் நலத்துக்கு சிறிதும் நன்மை பயக்காத , மாறாக
உடலுக்கு கேடு விளைவிக்கும், நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு சிறிதும்
பொருந்தாத சில உணவு வகைகளை திரும்பத்திரும்ப சாப்பிடுவதனால், உடலில் சில
அரிய வகை சத்துக்கள் குறைந்து அதுவே தலைமுடி உதிர்வதற்கும் வழுக்கைக்கும்
காரணமாகிவிடுகின்றது. உடல் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து
குறைவாலும் முடி உதிரும்.
இதைவிட ஒரு கொடிய காரணம், நம் உடலில்
உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், உடலில் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள்
நுழையும்போது, அவற்றை அழிக்கும் வேளையில் தவறாக நோய் காரணிகள் என எண்ணி
தலைமுடிகளையும் அழித்து விடுகின்றன, இதனால் மிக இளம் வயதிலேயே சிலருக்கு
தலை வழுக்கையாவதை நாம் கண்டிருப்போம், இது மிக அரிதான ஒன்றுதான்,
அனைவருக்கும் ஏற்படுவதில்லை.
இதைவிட ஒரு படு மோசமான காரணம்,
எங்கும் கடைகளில் இன்று பரவலாக, பெரு நகரம்,சிறு கிராமம் எனப்பாகுபாடு
இன்றி பாக்கெட்களில்,பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு வரும்
தேங்காய் எண்ணைகளை தலைக்கு தடவுவதால், தலையின் மேல் தோல் வறண்டு
போய்விடும்,முடியும் வறண்டு முடிக்காலுடன் உள்ள உயிர்த்தன்மையை
இழந்துவிடும், மேலும், முடி வெள்ளையாகி , தலைஎங்கும் அரிப்பு எடுக்கும்.
ஏன் அப்படி ஆகிறது?
கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணையில் மினரல் ஆயில் எனப்படும் , லிக்யூட்
பேரப்ஃபின், தேங்காய் எண்ணை எசன்ஸுடன் கலக்கப்படுகிறது. இந்த லிக்யூட்
பேரப்ஃபின் எது தெரியுமா?
எண்ணை எரிவாயு நிலையங்களில் , கச்சா
எண்ணையை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தா, வாசலின் மெழுகு
உள்ளிட்ட 24க்கும் அதிகமான பெட்ரோலியப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன்.
இவற்றில் ஆகக்கடைசியில் கிடைப்பது தான் லிக்யூட் பேரஃபின் எனப்படும்.
மினரல் ஆயில். மிக அடர்த்தியான இந்த ஆயிலுக்கு மணமோ, நிறமோ கிடையாது. எந்த
ஆயிலுடனும் சுலபமாக கலப்படம் செய்யலாம், இப்போது புரிகிறதா?
பாக்கெட்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணை தடவினால் ஏன் வழுக்கை விழும்
என்று.
இருப்பினும் இன்னும் சில ஊர்களில் எந்த அன்னிய வணிகப்
படையெடுப்பிலும் அழியாமல் தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கும், நம்ம
ஊர் செக்கு எண்ணையை , நாட்டு செக்கு தேங்காய் எண்ணையை , தேடிப்பிடித்து ,
வாங்கி தலையில் தடவினால் , நிச்சயம் முடி உதிராது.
வழுக்கை தலையில் முடிவளர டிப்ஸ்
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை
எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு
காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு
மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம்,
குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க
வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி
உதிர்வதைத் தடுக்கலாம்.
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை
தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து
சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
4) சிலருக்கு
முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப்
பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும்.
முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக்
குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில்
போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால்,
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில்
தேய்த்து வந்தாலும் முடி வளரும்
வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில்
தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி
உதிருவது நிற்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு
முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம்
ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ
போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன்
கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.
தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும்
தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில்
தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப்
பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி
சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.
இளநரை
வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம்,
கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர வழுக்கை மறையும்
முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க
வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2.
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற
வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும்
முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது
என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து
வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை
படிப்படியாகக் குறையும்.
5. கறிவேப்பிலையை நன்கு அரைத்து
தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில்
காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
என்ன
செலவானாலும் வழுக்கை தற்போது ஒரு மிகப் பெரிய பிரச்சனையல்ல, எனினும் உணவு
முறை, கவலைப்படாமல் இருத்தல், நல்ல தூக்கம் இதோடு உங்கள் முடி ஆரோக்யத்தை
அவ்வவ்போது பரிசோதனை செய்ய சரும நோய் நிபுணரை அணுகுதல் போன்றவற்றால்
வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு
நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித்
தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை
நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு
முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு