தெரிந்தது
கையளவு, தெரியாதது உலகளவு என்பார்கள். நமக்கு இந்த உலகை பற்றி எவ்வளவு
தெரியும்? நாம் வாழும் பூமியை பற்றிய சில உண்மைகளை இதோ உங்களுக்காக
* விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.
* சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
* எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
* புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது. கனடா-வின் ஹட்சன் பே (Hudson Bay)-யில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. இதற்கு இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரவில்லை.
* 97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.
* சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.
* பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1 ஆண்டு காலமாக இருக்கிறது.
* லிபியாவின் எல் அசிஸியா (El Azizia)-வில் 136 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலையை அடைவதால், பூமியில் அதிக வெப்பம் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது. -129 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலை அண்டார்டிகா (Antartica)-வின் வோஸ்டாக் (Vostok) என்ற இடத்தில் பதிவானதே பூமியில் மிகுந்த குளிர்ச்சியான பகுதியாக அறியப்பட்டுள்ளது.
* கொலம்பியாவின் ல்லோரோ (Lloro)-வில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 40 அங்குலத்திற்கு மேலாக மழை பதிவானது. சிலி (Chile)-யின் அரிகா (Arica)-வில் ஒரு ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவாகவே மழை பதிவாகிறது.
* 200,000 அல்லது 300,000 வருடங்களுக்கு ஒரு முறை மாக்னெடிக் போலாரிடி (Magnetic polarity) எனப்படும் புவியின் காந்த முனைவுத்தன்மை மாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வட துருவமாக இருந்தது தற்போது தென் துருவமாக மாற்றம் பெற்றுள்ளது என விஞ்ஞான குறிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாற்றத்தை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் எதிர்ப்பார்க்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், அது நேர்ந்தால் வாழும் உயிர்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
* ஆண்டிற்கு சுமார் 30,000 விண்வெளி துகள்களும், தூசுகளும் பூமியினுள் நுழைகின்றன. அதில் பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போதே எரிந்துவிடுகின்றன.
* 25 மில்லியன் ஆண்டுகளில் ஒரு பிரம்மாண்ட கண்டம் உருவாகும் என்றும், தொடர்ந்து நகர்ந்து வரும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் இது சாத்தியமாகும் என அறிவியல் தகவல்கள் கூறுகின்றன. பெசிஃபிக் தட்டுகள் ஆண்டுக்கு 4 செ.மீ வேகத்திலும், அட்லாண்டிக் தட்டுகள் ஆண்டுக்கு 1 செ.மீ என்ற வேகத்திலும் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன .
பூமியில் உள்ள சாதாரணங்களையும், அசாதாரணங்களையும் அத்தனை எளிதில் புரிந்துக்கொள்ளவோ, கூறிவிடவோ இயலுவதில்லை. மிகப்பெரிய ஆச்சர்யங்களும், அதிசயங்களும் கொண்ட ஒரு ஆபூர்வ பெட்டகமாகவே பூமி திகழ்கிறது.
* விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.
* சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
* எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
* புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது. கனடா-வின் ஹட்சன் பே (Hudson Bay)-யில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. இதற்கு இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரவில்லை.
* 97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.
* சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.
* பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1 ஆண்டு காலமாக இருக்கிறது.
* லிபியாவின் எல் அசிஸியா (El Azizia)-வில் 136 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலையை அடைவதால், பூமியில் அதிக வெப்பம் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது. -129 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலை அண்டார்டிகா (Antartica)-வின் வோஸ்டாக் (Vostok) என்ற இடத்தில் பதிவானதே பூமியில் மிகுந்த குளிர்ச்சியான பகுதியாக அறியப்பட்டுள்ளது.
* கொலம்பியாவின் ல்லோரோ (Lloro)-வில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 40 அங்குலத்திற்கு மேலாக மழை பதிவானது. சிலி (Chile)-யின் அரிகா (Arica)-வில் ஒரு ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவாகவே மழை பதிவாகிறது.
* 200,000 அல்லது 300,000 வருடங்களுக்கு ஒரு முறை மாக்னெடிக் போலாரிடி (Magnetic polarity) எனப்படும் புவியின் காந்த முனைவுத்தன்மை மாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வட துருவமாக இருந்தது தற்போது தென் துருவமாக மாற்றம் பெற்றுள்ளது என விஞ்ஞான குறிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாற்றத்தை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் எதிர்ப்பார்க்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், அது நேர்ந்தால் வாழும் உயிர்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
* ஆண்டிற்கு சுமார் 30,000 விண்வெளி துகள்களும், தூசுகளும் பூமியினுள் நுழைகின்றன. அதில் பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போதே எரிந்துவிடுகின்றன.
* 25 மில்லியன் ஆண்டுகளில் ஒரு பிரம்மாண்ட கண்டம் உருவாகும் என்றும், தொடர்ந்து நகர்ந்து வரும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் இது சாத்தியமாகும் என அறிவியல் தகவல்கள் கூறுகின்றன. பெசிஃபிக் தட்டுகள் ஆண்டுக்கு 4 செ.மீ வேகத்திலும், அட்லாண்டிக் தட்டுகள் ஆண்டுக்கு 1 செ.மீ என்ற வேகத்திலும் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன
பூமியில் உள்ள சாதாரணங்களையும், அசாதாரணங்களையும் அத்தனை எளிதில் புரிந்துக்கொள்ளவோ, கூறிவிடவோ இயலுவதில்லை. மிகப்பெரிய ஆச்சர்யங்களும், அதிசயங்களும் கொண்ட ஒரு ஆபூர்வ பெட்டகமாகவே பூமி திகழ்கிறது.
Via Durai Varrathan