கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று - ஜூலை 1

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:27 | Best Blogger Tips
கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று - ஜூலை 1

இந்தியாவில் பிறந்து அமெரிக்க பிரஜையானவர் கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). கொலம்பியா விண்வெளி கலத்தில் ஏழு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி எனும் பெருமைக்கு உரியவர். STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது.

குழந்தைப் பருவம்:

இந்தியாவில் உள்ள ஹரியானாமாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான திரு. ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி:

கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா V/STOL இல்[2] CFD ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார். FCC KD5ESI என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் பிரிவு அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

கல்பனா 1983 ஆம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார்.

கல்பனாவும் நாசாவும்:

கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து ஸ்பார்டன் என்று செயல் குறைப்பாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத சோதனைக்கு பிறகு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் செயலாற்றினார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதும் வழங்கினர்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் STS-107 இல் விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் SPACEHAB/BALLE-BALLE/FREESTAR மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிலைப் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.

விருதுகள்:

மறைவுக்கு பின் அளித்த விருதுகள்

    காங்கிரேசினல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர்
    நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்
    நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
    டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்

கல்பனாவின் நினைவில்:

    பாராட்டுக்குரிய பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றை 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]
    ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[17]
    விண்வெளிக்கு செலுத்தி எரிமீங்களை ஆராயும் மெட்சாட் எனும் செயற்கைக் கோள் வரிசைக்கு இந்திய பிரதமர் பிப்ரவரி 5, 2003 அன்று கல்பனா வரிசை என்று பெயர் மாற்றுவதாக அறிவித்தார். 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் நாள் அனுப்பப்பட்ட மெட்சாட்-1 கல்பனா-1 என்று அழைக்கப்படுகிறது. "கல்பனா-2" 2007 ல் விண்வெளிக்கு அனுப்பப் படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது [18]
    நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது
    ஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[19]
    இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 ல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]
    பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறை தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழை வழங்குகிறது.[21]
    நாசா கலபனாவின் நினைவாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது.[22]
    புளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடி கட்டிடங்களை தனது மாணவர்கள் தங்குவதற்கு கட்டிதந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்கு கொலம்பிய குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களை சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
    நாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைக் சிகரங்களுக்கு கொலம்பிய குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
    டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப்பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[23]
    கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா " எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம்? அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான நட்சத்திரம் .அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்க இடம் பிடித்திருப்பார்" என்றார்.[24]
    நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[25]
    குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[26]
    இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[27][28]
    மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது ராணுவ வீட்டு வசதி வாரியத்திற்கு கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது.அங்கு சாவ்லா வே எனும் தெருவும் உள்ளது.

Thanks Wiki.

Via FB ரிலாக்ஸ் ப்ளீஸ்