குழந்தை வரமருளும் மல்லீஸ்வரர்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:38 | Best Blogger Tips
குழந்தை வரமருளும் மல்லீஸ்வரர்..!

மயிலாப்பூரில் உள்ள 7 சிவாலயங்களில் ஒன்று பஜார் சாலையில் அமைந்துள்ள மல்லீஸ்வரர் கோயில். கபாலீஸ்வரர் கோயிலை விட பழமைவாய்ந்த இந்த  ஆலயம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 3 நிலை ராஜகோபுரத்தை கடந்து சன்னிதானத்துக்குள் சென்றவுடன் கிழக்கு  நோக்கி அருள் பாலிக்கிறார் மல்லீஸ்வரர். மூலவர் சன்னதிக்கு வலதுபுறத்தில் மரகதாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அயோத்தி மாநகரை  சேர்ந்த பிரார்த்தன் என்ற பக்தன் சிவ பெருமானுக்கு வேள்வி செய்வதற்காக இடம் தேடி திரிந்துள்ளான்.

அப்போது மயிலையில் மல்லிகை வனத்தில் சிவலிங்க திருமேனி ஒன்று இருப்பதை கண்டு இறங்கினான். பின்னர் இந்த இடத்தில் சிவ பெருமானை வேண்டி  அதிருத்ர ஹோமத்தை செய்தான். வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண்முன் தோன்றி வரம் அருளினார். மேலும் மல்லிகை நிறைந்த இந்த  தோட்டத்தில் சிவ தலத்தை அமைக்க ஆணையிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் வந்ததாக  புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகமவிதிப்படி, கோயிலின் இடதுபுறத்தில் விநாயகர் அருள் பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் பின்புறம் சுவாமி ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் முருகன்,  நடராஜர் மற்றும் பள்ளியறை அம்மன் தனி சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். கோயிலின் ஈசான பாகத்தில் நவக்கிரக சன்னதியும் உள்ளது. இக்கோயிலில்  பிரதோஷ வழிபாடு மாதம் 2 தடவை நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் 9 நாட்களும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.  மேலும் கார்த்திகை மாதம் சோமவார சங்கு அபிஷேகம், சந்திரசேகர் உட்புறப்பாடு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தில் நடராஜர் திருவீதி உலா,  மாசி மக கடலாடு தீர்த்தவாரி, மகா சிவராத்திரியன்று இரவு 4 கால பூஜைகள் நடந்து வருகிறது.

மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உற்சவங்கள் இக்கோயிலில் கோலாகலமாக நடைபெறுகிறது.  காலை 6.30 மணி முதல் 11.30 வரைக்கும், மாலை 5 முதல் இரவு 8.30 வரை கோயில் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள கல்யாண சுந்தரரை 6  திங்கள்கிழமை மல்லிகை மலர் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினால் திருமணத் தடை நீங்கும். கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில்  கலந்து கொண்டு 6 வாரம் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எப்படி போகணும்: மயிலாப்பூர் மசூதி பஸ்  நிறுத்தத்தில் இருந்து 15 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.   

அபூர்வ தரிசனம்

மாசி மாதம் சிவராத்திரி தினத்துக்கு பின் வளர்பிறை நாட்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் மீது  படும்.சென்னையில் உள்ள  சிவாலயங்களில் மல்லீஸ்வரர் ஆலயத்தை தவிர வேறு எந்த கோயில்களிலும் இந்த தரிசனம் கிட்டாது. ஒவ்வொரு ஆண்டும்  நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியன்று இந்த கோயிலில் தென் சிவாலய லிங்கங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.

Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism