புவியீர்ப்பு விசை,மற்றும் பூமியின் அமைப்பு,பூமி சூரியனை சுற்றும் காலம்,சூரிய சந்திர கிரகணம் என்பவற்றை வெளிப்படுத்திய சனாதன தர்மம் மற்றும் பாரத தேச முன்னோர்களின் பெருமை பற்றி கடந்த பதிவுகளில் மீட்டுப்பார்த்தோம்.அதே வழியில் இன்றைய பதிவில் பூமி சூரியனை சுற்றும் என்பதையும் அதைவிட அவற்றின் இயக்கம் பற்றி பூரணமான விளக்கத்தை கொடுத்த ரிக் மற்றும் சதுர் வேதங்கள் பற்றிய சிறு தகவலை பதிவாக்குகின்றோம்.
நமது கல்வியறிவின் படி நமது சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாக வைத்தே பூமி உட்பட கோள்கள் சுற்றுவதாக சொல்லியது கொப்பநிக்கல்ஸ் மற்றும் கலிலியோ.1453இல் இது தொடர்பான விசயங்கள் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அவைகள் கிருஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கருதியதால் கொப்பநிக்கல்ஸின் கருத்து முதலில் உதாசீனப்படுத்தப்பட்டு பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.,,ஆனா
நமது தொகுதியின் மையமாக சூரியனே இருப்பதாக எமது வேதங்கள் தெளிவாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொலி விட்டது என்பது வியப்பின் உச்சம்..
இதை குறித்து கூறும் வேத சுலோகங்களை பார்க்கலாம்
01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91)
இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது.
02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41)
இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன
03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91)
இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள்.பூமியானது தாய்க்கிரகமான சந்திரனையும் தந்தைகிரகமான சூரியனையும் சுற்றி வருகின்றது.
சூரியன் தந்தை கிரகமாகவும் சந்திரன் தாய்க்கிரகமாகவும் இந்து மதத்தின் பாவிக்கப்படுவதுண்டு.அதாவது
இதை விட ரிக் வேதத்தின் 10.22.14 பின்வருமாரு கூறுகின்றது
கரங்களும், கால்களும் அற்ற இந்த புவி, நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியில் உள்ள பொருள்களும் அவ்வாறே நகர்ந்து கொண்டே இருக்கிறது (கப்பல் செல்லும் போது அதில் உள்ள பயணிகளும் அதனுடன் செல்வது போல்). இவை அனைத்தும் ஒருசேர ஆதவனை சுற்றி வருகிறது
இதைப்போலவே மேலும் பல வசனங்கல் சூரியன் மற்றும் பூமியின் இயக்கம் பற்றி கூறுகின்றது
ரிக் வேதம் 10.149.1
சூரிய இயக்கத்தையும் கோள் இயக்கத்தையும் ஒரு குதிரையின் செயலுடன் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை தருகின்றது.
அதாவது
எப்படி ஒரு குதிரை பயிற்றுவன் தன் பயிற்றுவிக்கும் குதிரையை கயிற்றில் கட்டி தன்னை சுற்றி வர பயிற்றுவிக்கிரானோ அப்படியே சூரியனானவன் தன் ஈர்ப்பு விசையால் மற்ற கிரகங்களை தான்னை சுற்றி வர செய்கிறது.
இதெபோல ரிக் வேதம் 1.164.13 இல் சூரிய இயக்கம் பற்றி அழகாக கூறப்பட்டு உள்ளது.
சூரியன் தனது சுற்றுப் பாதையில் தனக்குத் தானே சுற்றி வருகிறது. புவியீர்ப்பு விசை காரணமாகவும் மற்ற கோள்களைவிட சூரியனின் எடை அதிகமாக இருப்பதால், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இதே போல சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என் அளப்பெரிய அறிவியலை நம் வேதங்கள் அன்றே கூறிவிட்டன.அதாவது சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை..அவைகள் பூமி சுற்றிவருவதால் மறைதல் உதித்தல் போன்ற தோற்றம் தெரிகிறது.ஆனால் உண்மையில் அவைகள் மறைவதோ உதிப்பதோ இல்லை.
சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை(ரிக்வேதம் அய்ரேய பிரமம்)
இந்த நிகழ்வை "லகு குருநியாய" என்னும் அறிவு பூர்வமான கோட்பாட்டின் மூலம் ஆரியப்பட்டர் தெளிவாக விளக்கி உள்ளார்.லகு என்றால் சிறிய அல்லது கனமற்ற பொருள் என்று அர்த்தம்.குரு என்றால் பெரிய அல்லது கனமான பொருள் என்பது அர்த்தம்.சிறிய பொருள் பெரிய பொருளை சுற்றி வருவதாக இந்த கோர்பாட்டின் மூலம் அவர் கூறியுள்ளார்.சூரியனிடமிருந
அது போக சூரியனை பூமி சுற்ற எடுக்கும் காலத்தை மிகத்திருத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவரும் பூமி தன்னைத்தனே சுற்றும் காலத்தை துணிந்தவரும் இவரேதான்.(ஆர்யப்பட்டா)
அது போக கிரகங்கள் என்பதன் சமஸ்கிருத அர்த்தமே கவரப்படக்கூடியது என்பதுதான்..எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக அகவரும் ஆற்றல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.
அடுத்து சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பெறுகின்றது என்றும் சந்திரனுக்கு சுயமாக ஒளி இல்லை எனவும் பல வேத சுலோகங்கள் வெளிப்படையாக கூருகின்றது
ரிக் வேதம் 1.84.15
சூரியனிடமிருந்தே சந்திரன் தனக்கு தேவையான ஒளியை பெற்றுக்கொள்கின்றான்
ரிக் வேதம் 10.85.9 இல் சூரியன் தனது பிள்ளையான சூரிய கதிர்களை தனது மனைவி சந்திரனுக்கு வழங்குகின்றான் என உவமையாக சூரியனிடமிருந்தே சந்திரனுக்கு ஒளி கிடைப்பதாக கூறுகின்றது
இத்தகைய விஞ்ஞான பெரும்பொக்கிஷத்தை இந்துக்களாக இருந்தும் இதுவரை எங்களால் படித்து உணர்ந்து நம் பெருமைகளை மார்தட்டி வெளியே சொல்ல முடிவதில்லை.அதற்கு சமஸ்கிருத அறிவின்மை,அந்நிய படையெடுப்பு ,பகுத்தறிவு என்ற போர்வை என்பனவும் ஒரு காரணமே..உண்மை இந்து இந்தியன் தமிழன் என்ரு பல பல பல பெருமையான கோபுரங்களின் மீது நிற்க பெருமைப்படவேண்டியவர்கள் நாங்கள்.இந்த பெருமைகளையும் உண்மைகளையும் அரியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்லோம் என்பது வருந்தவேண்டிய விடயம்.
நன்றி
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
Via FB தர்மத்தின் பாதையில்