மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 6

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:26 | Best Blogger Tips


மஹாபாரதத்தின் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்று நாம் ஆராய்ந்தோமானால் அவை வெகு சிலர் மூலமாகமே பெறப்பட்டுள்ளது என்பதை அறியலாம். அதில் ஒன்று பரசுராமர், அவர் மூலமாக துரோனருக்கும், பின் பாண்டவ மற்றும் கவுரவ‌ர்களுக்கும் அவை செல்கின்றன. பீஷ்மரோ, வசிஷ்டரிடமிருந்து ஆயுதங்களை பெறுகிறார். அர்ஜுனனும், நான் சென்ற பாகத்தில் குறிப்பிட்டவாறு, தேவர்களிடமிருந்து, பரம சிவனிடமிருந்தும் ஆயுதங்களை பெறுகிறான்.
இப்படி ஆயுதங்களை வழங்கியவர்களும், ஆயுதங்களை பெற்றவர்களும் பிரபஞ்ச சக்திகளே. பீஷ்மர், துரோனர், க்ருபாச்சாரியர், அஸ்வத்தாமன், பாண்டவர்கள், கௌரவர்கள், திருதிராஷ்டிரன், பாண்டு, சகுனி, பாஞ்சாலி, விதுரர் என ஒவ்வொரு பாத்திரங்களும் பிரபஞ்ச சக்திகள்தான்.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் என இரு பெரும் பிரபஞ்ச சக்திகள், பூமியில் குடியேர தொடங்கியதும், பல்வேறு மனித உருவங்களில் வளரவும் தொடங்கினர். இந்த பிரபஞ்ச சக்திகளின், பிறப்பே பல வினோதங்க‌ளை கொண்டுள்ளதை நாம் பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள், மிக உயரிய அறிவியல் நுட்பத்தோடு உண்டாக்கப் பட்டனர். இன்றைய அறிவியல் நுட்பங்களான‌ க்ளோனிங், செயற்கை கருவுருதல், பரிசோதனை குழாய் குழந்தைகள், விட்ரோ ஃபெர்டிலைசேஷன், எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல்ஸ், விந்து பராமரித்தல் போன்ற அதி முன்னோடியான நுட்பங்களை இவர்களின் பிறப்பு ஒத்திருப்பதை நாம் மஹாபாரதத்தை படிக்கும் போது உணரலாம். இவற்றை குறித்து "மஹாபாரதத்தில் மருத்துவ அறிவியல்" பகுதியில் நாம் பின்னர் பார்ப்போம். இப்போது மஹாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்களை அவற்றின் மூலங்க‌ளையும் நாம் பார்ப்போம்.

கிருஷ்ணர் : பிரபஞ்ச வடிவமைப்பாளர், பிரபஞ்ச ஆதார சக்தி. இந்த பிரபஞ்சத்தை பராமரிப்பவர்.

பீஷ்மர் : உயரிய பிரபஞ்ச சக்தியான எட்டு வசுக்களில் ஒருவர். கங்கைக்கும், சந்தனுவுக்கு பிறந்தவர். கங்கை என்பது வெறும் நதி அல்ல. ஆகாய கங்கை என்று நம் பால்வெளியை (மில்கி வே) அழைப்பர். கங்கை ஒரு ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்தி, பரம‌சிவன் எனும் பிரபஞ்ச ஆதார சக்தியினால் அதன் ஆற்றல் பூமிக்கு இறக்கப்படுகிறது.

த்ரோனர் : பாரத்வாஜர் எனும் பிரபஞ்ச சக்தியின் மரபினர். தாயில்லாமல் பிறந்தவர். பாரத்வாஜிரின் விந்து பராமரிக்கப்பட்டு உயிர்பிக்கப்பட்டது. (இதை குறித்து மருத்துவ பாகத்தில் எழுதுகிறேன்)

க்ருபாச்சாரியார் : வேள்வியில் பிறந்த ஆற்றலினால் தோன்றியவர். "சரத்வத்" எனும் அப்சரைக்கும், கௌதமர் எனும் பிரபஞ்ச சக்திக்கும் பிறந்தவர்.

திருதிராஷ்ட்ரன் : கந்தர்வர்கள் எனும் பிரபஞ்ச சக்தியின் அம்சம்.

விதுரன் : பிரபஞ்ச சக்தியான ரிஷி அத்ரியின் அம்சம்.

பாண்டவர்கள் : யமன், வாயு, இந்திரன், அஸ்வின் எனும் சக்திகள் ஆகியவற்றின் அம்சங்கள்.

கௌரவர்கள் : விழிப்புணர்வு குறைந்த‌ காலத்தை குறிக்கும் கலி புருஷனின் அம்சம்.

துச்சாசனன் மற்றும் ஏனைய‌ கௌரவர்கள் : புலஸ்த்யா எனும் ராக்ஷஸ்ர்களின் (விழிப்புணர்வு நிலை குறைந்த, ரஜோ, தாமஸ குணம் நிறைந்தவர்கள்) அம்சம்.

த்ருடத்யும்னா : அக்னி எனும் பிரபஞ்ச ஆற்றலின் அம்சம்.

கோபிகைகள் : இந்திரனின் அப்சரை எனும் மனதை வசீகரிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த தன்மைகளின் குழுமம். இப்படி யாரையும் வசீகரிக்கக்கூடிய இந்த தன்மைகளை, பிரபஞ்சத்தேயே தன்பால் வசகரிக்கக்கூடிய கிருஷ்ணர் எனும் ஆதார சக்தி தன்பால ஆட்படுத்தி வைக்கிறது. (க்ருஷ்ண என்றால் வசகரிக்கக் கூடிய என்றும் அர்த்தம்)

இப்படி ஒவ்வொரு பாத்திரத்தை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். இவை எவையுமே நம் பூமியை சேர்ந்த சாமான்ய மனிதர்கள் அல்ல. எல்லோருமே ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகள்தான்.

பிரபஞ்ச விதியான "தர்மத்தை" அசுரர்கள் மீறுவதால், தேவர்கள் எனும் ஆக்க‌ சக்திகள் அவர்களோடு மோதுகிறார்கள்.
பூமியில் பல்வேறு வகையில் பிறப்பெடுத்துள்ள இந்த அசுர சக்திகளை களைவதற்கு, பூமியில் தோன்றுகிறார்கள் தேவர்கள் எனும் ஆக்க சக்திகள். பேராற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகளான அசுரர்களும், தேவர்களும் இப்படி பூமியில் தோன்றி செய்த யுத்தம் தான் மஹாபாரதம்.


இது எப்படி நடந்தது ? என்ன விதமான ஆயுதங்கள், அறிவியல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன ? 


அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Via FB Enlightened Master