ஈஸியான... காளான் டோஸ்ட் ரெசிபி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips


காளான் டோஸ்ட் மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. அதிலும் காலையில் அலுவலகத்தில் செல்லும் பேச்சுலர்களுக்கு, காலை வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய ரெசிபியும் கூட. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் நல்ல ஆரோக்கியமான ஒரு காலை உணவை செய்து தர நினைத்தால், இந்த காளான் டோஸ்ட் சரியானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:


கோதுமை பிரட் - 4 துண்டுகள்
சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)
காளான் - 8 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிரட் துண்டுகளைப் போட்டு, இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பின்பு அந்த கலவையை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மீது வைத்து, அதன் மேல் துருவிய சீஸை தூவி, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 2-3 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது ஈஸியான காளான் டோஸ்ட் ரெடி!!! இதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு