ஆரூரா.. தொண்டீசா..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips


🌞ஆழித்தேர் ஓர் பார்வை...🌝
உலக புகழ் பெற்றது திருவாரூர் தேர்.
ஆசிய கண்டத்தில் வேறு எந்த ஒரு கோயிலுக்கும் திருத்தேருக்கு ஆழித்தேர் என சொல்லப்படவில்லை.
ஆனால் இந்த கோயிலுக்கு மட்டும் தான் ஆழித்தேர் என அப்பரே பெயர் சூட்டியுள்ளார், சொல்லப்படுகிறது.
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
இவ்வூரில் அஜபா நடனம் மிக சிறப்பானது.
இந்த அஜபா நடனம் ஆடுகின்ற அன்பர்களுக்கு தோள் காளைமாட்டின் திமிழ் போல் சற்று உயர்ந்திருக்கும். இன்றும் காணலாம்.
தேர் ஏறும் ஓர் இரண்டு தினத்திற்கு முன் சுவாமி அஜபா நடனம் ஆடி தேருக்குள் எழுந்து அருள்பாலிப்பார்.
தேரின் இதர விவரம் 2016.
தேரின் உயரம் : 30 அடி.
தேரின் அகலம் : 31அடி.
தேரின் எடை : 340டன்.
அலங்காரத்துடன் பார்த்தால் 440டன்.
தேரை வடம் பிடிக்கும் தேவையான நபரின் அளவு : 13,000பேர்.
மற்றும் இரண்டு யானை.
தேர் பகுதியில் மொத்தம் ஏழு அடுக்கு உள்ளது.
இந்த ஏழு அடுக்கில் இறைவனின் அருள் திறங்களை காணலாம்.
தேரின் மரங்கள் ஒரே காட்டில் விளைந்த மரங்கள்.
ஆரம்ப காலத்தில் திருவாரூர் தேர் ராஜ கோபுர கலசம் வரைக்கும் இருக்குமாம் ( அலங்காரத்தோடு செய்து பார்த்தால்) செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் தேரை இழுப்பதற்கு அந்தனர் ஒருபகுதி, மன்னர் குடும்பத்தினர், மந்திரி மற்றும் அரசு ஊழியர்கள், வேற்றுநாட்டு அரசு (நட்பு) மன்னர் எனவும் இது போதாதுனு தேரை இழுப்பதற்கு யானைப்படையும் பயன்படுத்தினர்.
அக்கால தேர் முழுக்க முழுக்க மரத்தால் ஆனது.
தேர் சக்கரம் கூட மரத்தால் ஆனது.
இப்படி பெருமை வாய்ந்த திருவாரூர் ஆழித்தேர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வடம் பிடிக்கப்படுகிறது.
திருவாரூர் தேர் என தயவு செய்து சொல்லாதீர்கள்...
ஆழித்தேர் என சொல்லுங்கள் அதுவே பொருத்தமாகும்.
ஆழித்தேர் வித்தகா... ஆரூரா. தியாக👑
நன்றி இணையம்


ஊஞ்சல்_ஆடுவது_எதற்காக_தெரியுமா....????

மணக்கால் அய்யம்பேட்டை | 3:51 PM | Best Blogger Tips

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
*
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்குஇதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது....!!!!
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!
முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...!!!!
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran


ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | Best Blogger Tips


ஜூன் 17: ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு
''போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..
பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.
டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.
சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரைஇழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய்
எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.
சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது
ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.
ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.
கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி
குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்
இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார். போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் நினைவு தினம் இன்று..
- பூ.கொ.சரவணன்


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | Best Blogger Tips


ஸ்ரீராஜராஜேஸ்வரி என விளங்கும் பராசக்தி அம்பிகையைப் பற்றிய எட்டு ஸ்லோகங்களும் அற்புதமானவை.
ஆயுளையும் ஆரோக்யத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்கலங்களையும் தர வல்லவை.
சர்வ வல்லமை பொருந்தியவளும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவளுமான அம்பிகையைப் போற்றித் துதிக்கும் இந்த அஷ்டகத்தில் அம்பிகையின் திருப்பெயர்களே பயின்று வருகின்றன. 
அன்னையின் - அழகும் அருளும் ஆற்றலும் நிறைந்து விளங்கும் திருப்பெயர்களுடன் கூடிய அஷ்டகம் , புனிதமான நவராத்திரி நாட்களில் பாராயணம் செய்தற்கு ஏற்றவை.
ஒன்றிய மனத்துடன் நாளும் பாராயணம் செய்யும் போது - அன்னையின் திருநாமங்களை உச்சரித்ததன் பலனாக - அஷ்டகத்தின் உட்பொருளான அவளே - உள்ளத்தில் தோன்றி ஒளிர்வாள். சத்தியம்!..
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம். 
அம்பிகைக்கு ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்.
*******
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனி காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயெளவனா ஸுபகரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த சந்தாயினி
வாணி பல்லவ பாணி வேணு முரளி கானப்ரியா லோலினி
கல்யாணி உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா நூபுர ரத்ன கங்கணதரி கேயூர ஹாராவலி
ஜாதீசம்பக வைஜயந்தி லஹரி க்ரைவேய கைராஜிதா
வீணா வேணு விநோத மண்டிதகரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ரெளத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகி வைஷ்ணவி
ப்ரஹ்மாணி த்ரிபுராந்தகி ஸுரநுதா தேதீப்ய மானோஜ்வாலா
சாமுண்டா ச்ருதரக்ஷ போக்ஷ ஜனனி தாக்ஷாயணி வல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சூலதனு குசாங்குச தரிஅர்த்தேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரி ஆர்யா விஸம்ஸோபிதா
காயத்ரி ப்ரணவாக்ஷராம் ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா
ஓங்காரி விநதா ஸுதார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சாஸ்வதா ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தா ஜனனி யா வை ஜகன் மோஹினி
யா பஞ்ச ப்ரணவாதி ரேபஜனனி யா சித்கலா மாலினி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா பாலித பக்தராஜ ரசிதம் அம்பாஷ்டகம் : படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தே மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் ஸம்பூர்ணம்.
*******
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகையே!.. சந்திர கலையைச் சூடியவளே!.. ஈரேழு புவனங்களுக்கும் ஆதாரமானவளே!.. தூம்ர லோசனனை வதைத்தவளே!.. புல்லாங்குழல் ஏந்திய கோவிந்த வடிவானவளே!.. சண்பக மாலைகளையும் ரத்னாபரணங்களையும் அணிந்திருப்பவளே!.. பத்ரகாளி எனவும் வைஷ்ணவி எனவும் வராஹி எனவும் தோன்றி தீமைகளை அழித்தவளே!..
சூலம், வில், கசை, அங்குசம் எனும் ஆயுதங்களைக் கொண்டவளே!.. முப்பெருந்தொழில்களையும் புரிபவளே!.. ஓங்கார ஸ்வரூபிணியே!.. சிற்றெறும்பு முதல் பிரம்மன் வரையிலான சகல உயிர்களையும் ஈன்றவளே!.. நல்லறிவின் கலைகளாக ஒளிர்பவளே!.. சகல செல்வங்களையும் அருள்பவளே!.. வானுக்கும் வையகத்திற்கும் தலைவியானவளே!..
அம்மா!..
நின் திருவடித் தாமரைகளில்
தலை வைத்து வணங்குகின்றேன்!..
ஓம் சக்தி ஓம்
Happy Friday Morning my Dear Guru, GOD, 
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran