காசியில்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:31 | Best Blogger Tips

காசியில்...
கருடன் பறக்காது.
பல்லி கத்தாது.
மாடு முட்டாது.
பூக்கள் மணக்காது.
பிணம் எரியும் போது நாறாது.
முதலில் கேள்விப்பட்ட போது, வழக்கம் போல இதுவும் இந்துமத அதீத நம்பிக்கை தான் போல என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், கருடன் எங்கேயும் பறக்கவே இல்லை. (அத்தனை பிணங்கள் எரியும் இடத்தில் Sky Scavenger கருடன் இல்லை என்பதே பேராச்சர்யம்).
நடக்கும் போது நாலடிக்கொரு இடத்தில் மாட்டுச் சாணம் கிடக்கும் அளவுக்கு மாடுகள் நிறைந்த தெருக்களில் ஒரு மாடு கூட முட்ட எத்தனிக்கவில்லை.
பல்லி கத்தவில்லை ஆராய்ச்சி அவசியமுமில்லை.
பூக்கள் மணக்கவில்லை
(
அதற்க்காக மதுரை மல்லிகையை அங்கே எடுத்துச் சென்று சோதிக்க தேவை இல்லை )
பிணம் எரியும் போது நாறவில்லை. (கிட்டத்தட்ட 4 மணி நேரம் சடலங்கள் வருவதையும், அதன் சடங்குகள், விறகு கொண்டு வருபவர்கள், விறகு உடைப்பவர்கள், எரிப்பவர்கள், எரித்த சாம்பலை அகற்றுபர்களை அருகிலிருந்து கூர்ந்து கவனித்தோம்.)
பக்தியைக் கடந்து புவியியல், மண்ணியல் படி பார்த்தால், அந்த நிலம் ஏதோ ஒரு தனித்துவமாகத் தான் இருக்கக் கூடும். இல்லாவிட்டால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இறங்கி கிழக்கில் பாயும் கங்கை, காசியில் மட்டும் வடக்கு நோக்கி பாயும் சிறப்பு எப்படி அமையும்?
இறைவன் இருப்பதால் அதை புனிதத்தலம் என்று நாம் நினைக்கிறோம். நம் முன்னோர்கள் அது புனிதத்தலமாக இருப்பதால் அதை இறைவன் இருக்கும் இடமாக நிர்மாணித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதரும் காசியில் பாயும் கங்கையில் நீராட வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் அற்புதம். 
வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறையேணும் சென்று வாருங்கள்.

 நன்றி இணையம்