வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர்,

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips

 

Temple : Temple Details | - | Tamilnadu Temple | வாலீஸ்வரர்

🌿🌿அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர், கோயம்புத்தூர்

திருவிழா சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
சேவூர் வாலீஸ்வரர் திருக்கோயில், Sevur Valeeswarar Temple, Kumbabishekam  Promo, S VIKAS NATARAJAN
தல சிறப்பு சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பாலதண்டாயுதர், கையில் தண்டத்துடன் காட்சி தருகிறார்.

பிரகாரத்தில் பஞ்சலிங்கம், சகஸ்ரலிங்கம், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். மேற்கு நோக்கி சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரக மண்டபமும் உள்ளது.

கோயிலுக்கு எதிரே வெளியில் தீப ஸ்தம்பம் உள்ளது. இதில் வாலி, சிவபூஜை செய்த சிற்பம் இருக்கிறது. அருகிலுள்ள அரச மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகில் பாண வடிவில் சிவலிங்கம் இருக்கிறது. இருபுறமும் ராகு, கேது உள்ளது.

பிரார்த்தனை திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவன், அம்பாள், முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால்தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை

சேவலுடன் முருகன் : சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விரு சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் இடது கையில் சேவல் வைத்திருக்கிறார். பொதுவாக முருகன் தலங்களில் சுவாமி, கையில் சேவல் கொடிதான் வைத்திருப்பார்.

இங்கு சேவலை வைத்திருப்பது வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் சிம்மம் இருக்கிறது. வள்ளி, தெய்வானை உடன் இருக்கின்றனர். இங்கு நடராஜர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இந்த மூர்த்தி மிகவும் விசேஷமானவர். விசேஷமான 5 தலத்து நடராஜர்களின் உருவத்தை ஒன்று சேர்த்து இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஆருத்ராதரிசன விழா சிறப்பாக நடக்கிறது.

“இத்தலம் நடு சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. தல விநாயகரின் திருநாமம். அனுக்கை விநாயகர். 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.

தல வரலாறு

சுக்ரீவனின் அண்ணன் வாலி, தோஷ நிவர்த்திக்காக சில தலங்களில் சிவனை வழிபட்டார். அவ்வாறு அவரால் வழிபடப்பட்ட தலம் இது. வாலி வழிபட்டதால் இங்கு சிவன், "வாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பாலதண்டாயுதர், கையில் தண்டத்துடன் காட்சி தருகிறார்.

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and lake 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 



அதிசய சிவன் ஸ்தலங்கள் ...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:08 PM | Best Blogger Tips




ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

இது இந்த காலத்திலும் நடக்கும்
ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம்.

மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.

சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம்.

உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக
நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.

உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.

எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய்
அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம்.
உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம்.

அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.

ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.

கவி கங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.

அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார்.

அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும்.

 
"விஸ்வநாதர் கோயில்"காசி!
இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள்.

இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.

அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.

கேரள மாநிலம், திருச்சூர் - எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர் 'திருக்கூர்'.

இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள்.

இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது.

இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன.

இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள்.

இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது.

இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது.

இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில்.

இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி.

சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.

சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது.

தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம்.

அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.

மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர்.

இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

சின்ன_சின்ன_கைவைத்தியங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:04 PM | Best Blogger Tips

 நலம் நம் கையில்... நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்! - Kungumam Tamil Weekly  Magazine

🖥#சின்ன_சின்ன_கைவைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
Reasons Behind Hiccups|விக்கல் வருவதற்கான காரணங்கள் | why do we get hiccups  | HerZindagi Tamil
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர்நாற்றம் இருக்கா? அதைப் போக்க எளிதான அற்புதமான டிப்ஸ்கள் ! | Simple  & Worth-trying Fixes For Body Odour - Tamil BoldSky
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

Say It Loud! 9 Easy Ways to Get Rid of Bad Breath

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடியை சாப்பிடும் விநோத பெண் – வயிற்றுக்குள் வந்த வினை | வவுனியா நெற்

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.
நன்றி குங்குமம் டாக்டர் முடி உதிர்தல் என்பது ஆண் பெண் வித்தியாசமின்றி  அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்னையாகும். இது மன ...
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!


*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்


* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!


அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சீரக தண்ணீர் !!

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
  🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and flower  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹