1940 - 1980 ... பழைய தஞ்சை ... 'பொத்த காசு காலணா'

மணக்கால் அய்யம்பேட்டை | 10:16 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

1940 - 1980 ...
பழைய தஞ்சை ...
'பொத்த காசு காலணா'
(ஓட்டை காலணா) காணாமல் போன கதை
1930 - 1940 களில் ...
மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 களில் இருந்து மாற தொடங்கின ... முன்பு சொன்னது போல .... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன .. மண்எண்ணெய் அரிக்கன் விளக்குகள்.. பனை விசிறிகள் போன இடம் தெரியவில்லை.
1930- 40 களில் சினிமா கொட்டைகைகள், டெலிபோன்கள் சேவை ஆரம்பித்தன ... 1930 - 1940களில் ட்ராமா கொட்டகைகள் மற்றும் சபாக்கள், சினிமா கொட்டைகளாக மாற்றப்பட்டன .. தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை
"டவர் சினிமா"
(பிறகு ஞானம் டாக்கீஸ் என பெயர் மாற்றம்) . ..
1950களில் எனக்கு தெரிந்த முதல் காசு ... பொத்த காசு காலணா .. பெரிய காலணா .. அரைணா... ஒரு அணா... நாலணா எட்டணா .. ஒரு ருபாய் காசு .....
(16 அணா = 1 ரூபாய்) ... காசுக்கு மதிப்பு இருந்த காலம் ... ஒரு முட்டை ஒரு அணா , கோழியின் விலை முக்கால் ரூபாய் ... ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 54/= ... ஆனால் ஒரு பவுண்ட் ஆஸ்திரேலியா திராட்சை ரூபாய் 20க்கு விற்கப்பட்டது ...
உள்நாட்டில் அப்போது திராட்சை உற்பத்தி இல்லாத காலம் .. அப்போது ஒரு காலன் பெட்ரோல் சுமார் இரண்டு ரூபாயாக இருந்தது .. ஒரு காலன் என்றால் 4.5 லிட்டர் க்கு சமம்.
தங்கம்.. குண்டுமணி கணக்கில் எடை போடுவார்கள் ..
தானியம்/ அரிசி ... படி கணக்கில் .. சின்ன படி .. பெரிய படி.. மரக்கால் கணக்கிலும் அளப்பார்கள்....
மது பாட்டில்.. டானிக் .. மருந்து... அவுன்ஸ் கணக்கில் .. ஒரு அவுன்ஸ் 30 ml க்கு சமம்.
எண்ணெய்.. பால் ... சேர் கணக்கில் .. ஒரு சேர் சுமார் 170 ml க்கு சமம்
பெட்ரோல் ... காலன் கணக்கில்
எடை ... பவுண்ட் கணக்கில் .. ஒரு பவுண்ட்= 0.45 கிலோ.
அளவு ... அடி கணக்கில்
1958ஆம் ஆண்டு மெட்ரிக் முறை அறிமுகமானது ... மெதுவாக செல்லாமல் போனது அணா .. படி .. சேர் ..
அணா பைசாவானது ... படி மற்றும் சேர் .. லிட்டர் ஆனது ,
பெட்ரோலுக்கு காலனுக்கு பதிலாக லிட்டர் அளவு அறிமுகமானது ..
எடை ... பவுண்ட் கணக்கில் இருந்து கிலோகிராம் கணக்காக மாறியது ...
சாலைகளில் மைல் கற்கள் .. கிலோமீட்டர் கற்களாக மாறின
ஆனால் ... அடி ... மீட்டராக மாறினாலும் இன்று வரை அடி கணக்கே உபயோகத்தில் இருக்கின்றது ... பாடத்திட்டங்களில் உள்ள கணக்கு பாடங்களும் மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டன ..
1962ல், காமராஜர் ஆட்சியில், கரூர் - திருச்சி - தஞ்சை - நாகை ஸ்டேட் ஹய்வே சிமெண்ட் ரோடாக மாறிய காலங்களில் கூட மைல் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் தான் இருந்தன
(8 பர்லாங் ஒரு மைல்) ...
படித்ததில் மனம் கவர்ந்தது ...

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

இரயில்களில் #DEMU & #MEMU & #EMU

மணக்கால் அய்யம்பேட்டை | 9:41 AM | Best Blogger Tips

DEMU - MEMU - EMU - LHB - ICF , back to back , skipping Asaoti & SMDP in  high speed , Railfanning


இரயில்களில் #DEMU & #MEMU & #EMU என மூன்று வகைகள் உள்ளன.
 May be an image of 1 person, train, railway and text
🚂 #EMU வகை இரயில்களில் படிகட்டுகள் இல்லை.எனவே இரயில்நிலையங்களில் தனி நடைமேடை தேவைப்படும்.
 May be an image of text
இதில் 6&9&12 என்ற எண்ணிக்கையில் பெட்டிகள் இருக்கும்.சென்னையில்[TN] மட்டும் இயங்குகிறது.
 
🚂#DEMU வகை இரயில்களில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் குறுகிய தூரம் மட்டுமே இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.
May be an image of 1 person, train, railway and text
 May be an image of text that says "DEMU Train டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது DEMU ரயிலின் முழு வடிவமாகும். அதாவது டீசல் இன்ஜின் மூலம் இயங்குவது இதன் அர்த்தம். குறுகிய தூர பயணங்களுக்கு DEMU ரயில்கள் யயன்படுத்தப்படுகின்றன. இதில் டீசல் எலக்ட்ரிக் DEMU, டீசல் மெக்கானிக்கல் DEMU மற்றும் டீசல் ஹைட்ராலிக் DEMU என மூன்று வகைகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கோச் இருக்கும்."
🔹️தஞ்சை-திருச்சி,
தஞ்சை-காரைக்கால் 
 
🚂#MEMU வகை இரயில்களில் 8,12,14என பெட்டிகளின் எண்ணிக்கை காணப்படும்.நெடுந்தூரம் இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.
May be an image of train, railway and text
 May be an image of text that says "MEMU Train மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது MEMU ரயிலின் முழு வடிவமாகும். மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும். ஒவ்வொரு 4 பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கார் பொருத்தப்படிருக்கும். மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, 200 கி.மீ.க்கும் அதிகமான தூர பயணங்களுக்கு MEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன."
🔸️மயிலாடுதுறை-சேலம்
🙏🌹 நன்றி இணையம்May be an image of 1 person and smiling            🌹🙏