☝️முதலிமார்களே யோசியுங்கள்🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 
வெற்றி நிச்சயம்👍

முதலியார் சமூகம் எந்த அளவிற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டார்கள், பயன்பட்டார்கள் என்பதை தெரிவிக்கின்ற பதிவு.

தி.மு.க.தோன்றிய போது அதில் 5 பெரும் தலைவர்கள் இருந்தார்கள். அவற்றில் அண்ணா, நாவலர், என்.வி.நடராஜன் மூவரும் முதலியார்கள். இதை முதலியார் கட்சி என்றே அழைத்னர். திராவிட இயக்கத்தின் தாய் வீடான நீதிக் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர்கள் முதலியார்கள்.

ஒரு காலத்தில் Madras University யை

முதலியார் University என்றே அழைத்தார்கள்.

அதே போல் Madras Medical College முதலியார் Medical College என்றே அழைத்தார்கள்.

Madras was owned by Kondaikatti Mudaliyar, then ThondaiMndalam Mudaliyar, Sengunthar Mudaliyar.

கல்வி, நிர்வாகம், வேளாண்மை, வணிகம், அரசியல், இலக்கியம், விளையாட்டு அரங்கம் ஆகிய இத்துறைகளில் தங்கள் தனித்திறமையை பதித்து வந்துள்ளனர்.

இந்த சமுதாயத்தைச் சேர்ந்த துறை வாரியான பிரபலமானவர்கள்.

நவீன விஞ்ஞானத்திற்கு மயில்சாமி அண்ணாதுரை சரியான சான்று.

நீதிகட்சி (திராவிட இயக்கம் 1912. ) நிறுவனர் டாக்டர் சி. நடேசன் முதலியார்.

நாடக தந்தை

பம்மல் K சம்பந்த முதலியார்.

சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய வேலூர் நேஷ்னல் தியேட்டர் பெருமாள் முதலியார்.

எம்.ஜி.யார் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கந்தசாமி முதலியார் மற்றும் எம்.கே.ராதா.


நவீன கோவையின் தந்நை திவான் பகதூர் முதலியார்.

21 ஆண்டு காலம் சென்னை பல்கலை கழக துணை வேந்தராக இருந்த லட்சுமணசாமி முதலியார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் இராமசாமி முதலியார்.

இட ஒதுக்கீட்டின் முன்னோடி முத்தையா முதலியார்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர உறுதுணையாக இருந்த முத்துரங்க முதலியார்.


வரதராஜ முதலியார் பேரை கேட்டாலே மும்பை நகரமே குலுங்கிய காலம் உண்டு.

திருநெல்வேலி -பாளையம் கோட்டை இடையே உள்ள பாலத்தை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்த சுலோச்சனா முதலியார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைவதற்கு தனது சொந்த நிலத்தை இலவசமாக கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார்.


பெங்களூரில் நகரத்தில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு தனது சொந்த நிலத்தை இலவசமாக கொடுத்த சின்னச்சாமி முதலியார்.

ஈரோடு மற்றும் சென்னிமலை பகுதிகளில் கொமரப்பா செங்குந்தர் முதலியார் கல்வி நிறுவனங்களின் மூலம் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.

தன்னுடைய சொத்து முழுவதையும் கல்வி மற்றும் கோவிலுக்கு வழங்கிய பச்சையப்பன் முதலியார்.

தி.மு.க.வை உருவாக்கிய C.N.அண்ணாதுரை.

தந்தை பெரியாருக்கு காலம் முமுவதும் மருத்துவம் பார்த்த பி.எம்.சுந்தரவதன முதலியார்.

உலகத்திலேயே கணவன், மனைவி இரண்டு பேரும் பல்கலை கழக துணை வேந்தராக இருந்தவர்கள் டாக்டர் சண்முக சுந்தரம் முதலியார் மற்றும் யசோதா முதலியார்.

மதிய உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார்.

அத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி கொடுத்தவர் நெ.து.சுந்தரவடிவேலு முதலியார்.

மதுரை பல்கலை கழகத்தின் முதல் துணை வேந்தர் மு.வரதராசன்.

சென்னையில் பெண்கள் எத்திராஜ் கல்லூரி அமைக்க தன்னுடைய சொத்து அனைத்தையும் கொடுத்தவர் புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் முதலியார்.

லண்டன் நீதிமன்றத்தில் இவரது சிறப்பான வாதத்தால் தான் தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் விடுதலை அடைந்தார்கள்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் பக்தவச்சலம் முதலியார். இவருடைய பேத்தி தான் ஜெயந்தி நடராஜன்.

திராவிட கழகத்தின் முதல் பெண் தலைவர் மணியம்மை.

தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியை நிற வெறிக்கு எதிராக போராட தூண்டுகோலாக இருந்த தில்லையாடி வள்ளியம்மை.

எம்ஜி.யாருக்கும், கலைஞருக்கும் திரையுலகில் முகவரி கொடுத்தவர். அனைவராலும் முதலாளி என்று அன்போடு அழைக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.

லண்டனில் டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் படித்து விட்டு திரைத்துறைக்கு வந்தவர்

தமிழறிஞர் பேராசிரியர் அ.ச.ஞான சம்பந்தம்

பாவேந்தர் பாரதிதாசன்

கம்பீர சிரிப்பிற்கு புகழ் பெற்ற பி.எஸ்.வீரப்பா

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக முதல் துணை வேந்தர் பேராசிரியர் பி.எஸ்.மணிசுந்தரம்.

*புகழ் பெற்ற மருத்துவர்கள்.*

டாக்டர் ரங்கபாஷ்யம்

டாக்டர் வேணுகோபால்

டாக்டர் தணிகாச்சலம்

டாக்டர் சொக்கலிங்கம். (பேராசிரியர் அன்பழகனின் மருமகன் )

A.C.சண்முகம் Ex.MP, MLA

டாக்டர் கலாநிதி M.D., Ex.M.P.

டாக்டர். E.S.S.ராமன் M.D., Ex.M.L.A.

முன்னாள் குமுதம் துணை ஆசிரியர் புனிதன்.

முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் மகாதேவன் I.P.S

திரைப்பட தயாரிப்பாளர்கள்

ஜி.என்.வேலுமணி

அவிநாசி.மணி.

சிவசக்தி பாண்டியன்.

தாணு

ராஜன்

*நடிகர்கள்*

ஆனந்தராஜ்

பாண்டு

தாமு.

*இயக்குநர்கள்*

ஆர்.கே.செல்வமணி

கே.எஸ். ரவிக்குமார்

K சங்கர்

A.C. திருலோகசந்தர்

A P ஜெகநாதன்

*பாடகர்*

எஸ்.என் சுரேந்தர்.

*கவிஞர்கள்*

ஒட்டகூத்தர்.

ஈரோடு, தமிழன்பன்.

நா.முத்துகுமார்.

பா. விஜய்.

வெண்பாவிற்கு புகழேந்தி.

கம்பனின் கொடைவள்ளல்

சடையப்ப வள்ளல்.

அந்தக கவி. வீரராகவ முதலியார்.

இரட்டை புலவர்.

*அரசியல்*

ஒருங்கிணைத்த கோவை மாவட்டம் முன்னாள் தி.மு.க செயலாளர் திரு. ராஜமாணிக்கம்.

கும்மிடிபூண்டி வேணு.

தா.மோ. அன்பரசன்.

டாக்டர் சமரசம்,

சோமசுந்தரம்,

வேலூர் ஞானசேகரன்.

Dr. E.S.S. ராமன் M.D,

கோபிசெட்டிபாளையம் முன்னாள் M.L.A. திரு.வெங்குடு.

திருச்செங்கோடு முன்னாள் M.L.A. திரு. ஆறுமுகம்.

சென்னை அண்ணாநகர் முன்னாள் M.L.A.சோ.மா.ராமச்சந்திரன்.

மாம்பலம் பழக்கடை. ஜெயராமன்.

ஜெயம்கொண்டம் முன்னாள் M.L.A.முத்துகுமரன்.

ஆதிசங்கர் முன்னாள் M.P.,

திருப்பத்தூர் முன்னாள் M.L.A திரு. S.P.மணவாளன்,

திருப்பத்தூர் முன்னாள் M.L.A மற்றும் திருப்பத்தூர் முன்னாள் நகராட்சி சேர்மன் திரு. A.K.C.சுந்தரவேல்.

ஆன்மீகம்

திருமுருக. கிருபானந்த வாரியார்.

வாழும் கலை

தவத்திரு. வேதாந்த மகரிஷி.

துணி உற்பத்தி

Erodex.

துணி மற்றும் நகைக் கடை

தி சென்னை சில்க்ஸ்.

தமிழ்நாடு கால்பந்தாட்ட தலைவர்

சண்முகம்

விட்டல்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பொறுப்பு வகித்த

திரு. பூபதி.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் சர்வதேச போட்டிகளுக்கான பிட்ச் தயாரிப்பாளர்

திரு.பார்த்தசாரதி.

இதற்கு முன்பு அவர் தந்தை தயாரித்தார். ஒரு போட்டியின் முடிவை நிர்ணனிப்பது பிட்ச் தான்.

திருவேங்கிமலை சரவணன்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியில் இரண்டாம் இடத்தில் முதலியார்கள் இருந்தார்கள். எம்.ஜி.யார். முதல்வராக இருந்த போது Protocol படி அடுத்த இடத்தில் இருந்தவர் நாவலர். தி.மு.க. ஆட்சியில் கலைஞருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தார், ப. உ. சண்முகம். தி.முகவிலும் அ.தி.மு.கவிலும் அமைச்சராக இருந்தார். டெல்லி பாராளுமன்றத்தில் சிறந்த பார்லிமென்ட்டேரியன் எனப் புகழப்பட்ட இரா. செழியன். இளம் வயதில் பாராளுமன்ற உறுப்பினரான வேலூர். V.I.T. விஸ்வநாதன்.

இப்படி அனைவரும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

மதுரை காமராஜர் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறக்கூடாது என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.யார். எவ்வளவோ முயற்சி செய்தார். அதற்கும் மீறி பி.டி.ஆர் வெற்றி பெற்றார். இவரது தந்தை பி.டி.ராஜன் நீதி கட்சி ஆண்ட போது முதல்வராக இருந்தார். பெரும் செல்வந்தர் மதுரையில் 24 மணி நேரமும் இவர் வீட்டில் அடுப்பு எரியுமாம். வீட்டிற்கு வருகிறவர்கள் சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அங்கு உண்டு. இன்றைக்கு பி.டி.ஆர் யின் மகன் பி.டி.தியாகராஜன் விருந்தோம்பலில் தந்தை வழியை பின் பற்றுகிறார். இவர்கள் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

கலைஞர், பேராசிரியர் மறைவிற்கு பின்பு துணைப் பொது செயலாளர்கள் நியமித்தார்கள். இதில் ஒருவர் கூட முதலியார் இல்லை. மறைந்த சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் முதலியார், அவர் மறைவுக்குப் பிறகு சென்னை தி.மு.க. வில் முக்கிய பொறுப்பில் முதலியார்கள் யாரும் இல்லை.

மதுராந்தகம் ஆறுமுகத்தின் சீடர் கும்மிடிபூண்டி வேணு. மதுராந்தகத்தார் கட்சி மாறிய போதும் வேணு மாறவில்லை. தாய் கழகத்திலேயே இருந்தார். இவருக்கு இன்றை வரையில் தி.மு.க.தொண்டர் மத்தியில் அபரிவிதமான செல்வாக்கு இன்றைய அளவும் உண்டு. முதலியார் சமூகத்தை சேர்ந்த இவருக்கு கட்சியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பேராசிரியர் மறைவுக்குப் பிறகு அவரது பேரனுக்கோ அல்லது பி.டி.ஆர். தியாகராஜனுக்கோ கட்சியில் முக்கிய பதவி கொடுப்பார்கள் என நினைத்த முதலியார் சமுதாயம் ஏமாந்தது தான் மிச்சம்.

அதே போல் அ.தி.மு.க. எம்.ஜி.யார் இருக்கும் வரை நாவலருக்குதான் இரண்டாம் இடம். முக்கிய மந்திரி பொறுப்பை கொடுத்து பேராசிரியரை தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு எம்.ஜி.யார் இழுக்க பார்த்தார். பேராசிரியர் நான் சாகும் வரை தி.மு.க.தான் என்று சொல்லி விட்டார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் நாவலரும், பேராசிரியரும் பயின்ற போது தங்களது அக்னி பேச்சால் பலரை தி.மு.க.விற்கு இழுத்தனர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது அண்ணா தனது வீரிய குரலால் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி அனைவரையும் கட்டிப் போட்டார். இப்படி தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் முதலியார் சமுதாயத்தின் பங்கு அளப்பறியது. இன்று இந்த இரு கட்சியினரும் ஏன் இந்த சமுதாயத்தை புறக்கணித்தனர். உலகிலேயே வேதனைக்குரிய ஜாதி முதலியார் தான். இதில் இருக்கும் உட்பிரிவு மாதிரி வேறு எந்த ஜாதியிலும் கிடையாது. ஒருவர் தான் ஒட்டுமொத்த முதலியார் சங்க தலைவர் என்று காட்டி கொண்டு தேர்தல் முடிந்தவுடன் தன்னை அகமுடைய முதலியார் என்று காட்டிக் கொண்டார். பாவம் அவருக்கு ஓட்டு போட்ட மற்ற முதலியார் இனம்.

தமிழ்நாட்டில் முதலியார்களின் எண்ணிக்கை குறைந்தது 2 கோடி இருக்கும். அதில் செங்குந்தர், கைக்கோளர் எண்ணிக்கை குறைந்தது 1-1/2 கோடி மக்கள் இருப்பார்கள்.

சென்னை, காஞ்சிபுரம்,

அரியலூர், ஜெயம்கொண்டம், ஆண்டிமடம், கருர், ராசிபுரம், ஆண்டையாம்பட்டி, திருச்செங்கோடு, பள்ளபாளையம் வெண்ணந்தூர், ஈரோடு, பவானி, குமாரபாளையம், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், அவினாசி, சென்னிமலை, திருப்பூர், பொள்ளாச்சி, துறையூர், பெரம்பலூர், உடையார் பாளையம், வாரியம்காவல் , கீழப்பழூர், மலைபாடி, சேலம், எடப்பாடி, தாரமங்கலம், பழனி, திண்டுக்கல், திருத்தணி ஆந்திரா மாநிலம் நகரி, கொள்ளேகால் ஆரணி, திருநெல்லேலி மாவட்டம், தர்மபுரி மாவட்டம் , திருப்பத்தூர், வேலூர் இப்படி பறந்து விரிந்து இருக்கிறார்கள். அறிவார்ந்த நிலையில் மட்டும் அல்லாது உடல் உழைப்பாலும் இவர்களே உயர்ந்து நிற்கிறார்கள். சிவபக்தி, சிக்கனம், பிறரை மதித்தல், நேரம் தவறாமல், எளிமை இது இவர்களின் அடையாளம். நெசவை மூலதனமாக வைத்து வாழ்க்கை நடத்தும் நீண்டகால ஒரே கோரிக்கை, தங்கள் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தான். இது வரை எந்த ஆட்சியாளர்களும் செவி சாய்க்கவில்லை என்பது வேதனை.

இவ்வளவு திறமை உள்ள இனத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவானது தான்...... ஐயா நான் கவுண்டர் தான்.... முதலியார்கள் இவ்வளவு புகழ் உச்சியில் இருந்தனர் என்பது பற்றி குரூப்பில் உள்ள முதலியார் சமூகத்தினர் தெரிந்து கொள்ளவே பகிர்ந்தேன்...

*படித்ததில் பிடித்தது......

 

நன்றி இணையம்