ஒரு கோயில்
என்றால், அங்கே ஐந்து நிலையில் அர்ச்சகர்கள் இருப்பார்கள்.
இந்த ஐந்து
நிலையில்,
சிவாலயம் என்றால்
சிவாச்சாரியார் மரபினரும்,
வைணவ ஆலயம்
என்றால் பட்டாச்சாரியர் மரபினரும் இருப்பார்கள்.
1) ஆச்சார்யர் ( தலைமை
சிவாச்சாரியார்).
2)அர்ச்சகர்
3)ஸாதகர்.
4)அலங்கிருதர்
5)வாசகர்
இதில்,
1) #ஆச்சார்யர்
என்ற தலைமை
சிவாச்சாரியர் ,அவ்வாலயத்தின் காலபூஜைகளில் மட்டு
பங்கு கொள்வார். இவருக்கென்று கோயிலும் தனி பீடம், சன்னதி உண்டு. கால பூஜை பூர்த்தி பெற்ற பின்பு இவர் தமது
பீடத்துக்கு சென்று அங்கிருந்தே பக்தர்களை வரவழைத்து ஆசி வழங்கவேண்டும். விபூதி
பிரசாதம் வழங்குவார்.
இவருக்கென தனி
பல்லாக்கு, தீவட்டி, பீடம், கொடை மரியாதை உண்டு.
இவருக்கு துணையாக
உதவி ஆச்சார்யர் என ஒருவர் இருப்பார்.
சம்பந்தபட்ட
கோயிலின் ஆகம விசயம், பூஜை விசயம், விழா விசயம் எதுவாகிலும் இவரது முடிவே இறுதி தீர்ப்பாகும்.
இக்காலத்தில்
உள்ளோருக்கு புரியவேண்டும் என்றால், சபரிமலையில் உள்ள மேல்சாந்தி, கீழ்சாந்தி போன்று.....
திருவண்ணாமலையில்
கூட பெரிய பட்டம், சின்ன பட்டம் என சிவாச்சாரியார்கள்
இன்று விளங்குகிறார்கள்.
இதுபோல் பெரிய
சிவாலயம் அனைத்திலும் இப்படியான ஆச்சார்யர் இருந்தார் ஒரு காலத்தில்.
இவர்கள் மடாதிபதிகள்
போல் பேற்றப்படவேண்டியவர்கள்...
2) அர்ச்சகர் :
இவரும்
சிவாச்சார்ய மரபினர்தான். ஆனால் தலமை சிவாச்சாரியார் கால பூஜையை முடித்து தந்த
பின்பு, நித்ய பூஜை, பக்தர்களை கவனிப்பது இவரது
பணியாகும்.
3) ஸாதகர் :
அதாவது முதன்மை
சிவாச்சாரியாருக்கு துணையாக இருப்பவர். பூஜைக்கு தேவையான திரவ்யங்களை, பொருட்களை எடுத்து தந்து உதவியாக இருப்பவர்.
4)அலங்கிருதர் - நித்யபடி, விசேஷகாலங்களில் அலங்காரம் செய்திடும் சிவாச்சாரியார்.
5) வாசகர் :
வேத ஆகமம் ஓதும்
சிவாச்சாரியார்.
இந்த ஒவ்வொரு
நிலைக்கும் கீழே கோயில் திட்டம் சார்ந்து, சிலரோ பலரோ இந்த பணியை செய்வார்கள்.
2,3,4,5 ஆகிய நான்கு நிலைகளில் உள்ளவர்கள், முதல் நபராக உள்ள தலைமை சிவாச்சாரியாருக்கு உதவிடவே. அதாவது அவரது
நோக்கம் அறிந்து செயல்படுபவர்கள். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள்.தலைமை
சிவாச்சாரியாருக்கு இவர்கள் அங்கம்.
இப்படியாக ஆலய
பூஜை கட்டமைப்பு உள்ளது. இதில் எப்படி எல்லா அர்ச்சகர்களும், எல்லா நேரங்களும் இருக்கமுடியும்...
கலெக்டர், Dro, rdo தாசில்தார் என ரேங்க் உள்ளது அல்லவா?
தாசில்தார்
இருக்கும் நேரத்தில் அவ்விடம் கலெக்டர் இருக்கமுடியுமா?
பொதுவாகவே என்று
அர்ச்சகர்கள் #ஊழியமானியங்களை விட்டுக்கொடுத்து, கையெழுத்திட்டு ஒரு ரூபாய்
சம்பளமாவது பெற ஆரம்பித்தார்களோ, அன்றே கோயில்களில் அர்ச்சகர்களின்
கம்பீரம், உரிமை, கௌரவம் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது.
பலமுறை
கூறியுள்ளேன் சம்பளம் வாங்குவது மாபெரும் தவறு. அதற்க்கு பதில் அவர்களது
ஊழியநிலங்களை மீட்டுத்தரவே நம்மோர் போராடவேண்டும். துணை நிற்க்கவேண்டும்.
காரணம், ஆலய சிவாச்சாரியார்கள் ,சுய ஆச்சார்ய புருஷர்கள்.
இவர்களுக்கென தனிமடமோ, வேறு இடத்தில் தீக்ஷை வாங்குவது, வேறு சந்நியாசிகளை வணங்குவது என அனைத்தும் விலக்கப்பட்டது.
இவர்களுக்கு
தாங்கள் பூஜிக்கும் ஸ்வாமியே முதற்தெய்வம். தனது தந்தை அல்லது தனது மரபில் வந்த
உத்தம ஆச்சார்யரே குருநாதர்.
இவர்கள் தங்கள்
சம்பிரதாய விசயங்களில், பூஜை விசயங்களில் எவருக்கும்
கட்டுப்பட்டு இருக்கவேண்டியதில்லை.
கோயில் நிர்வாகம்
என்பது தனி.
இப்படியான
இவர்களின் கம்பீர சுயத்துவத்தை உடைக்கவே, பல காலமாக முயற்ச்சிக்கப்பட்டது.
1) முதலில் தலைமை சிவாச்சாரியார் என்ற
நிலை அழிக்கப்பட்டு, பீடம், கொடை, தீவட்டி ஆகியன பறிக்கப்பட்டது.
2) இவர்களுக்கான ஊழிய நிலைங்கள்
பறிக்கப்பட்டு, மாயவார்த்தைகள் பல கூறி ஒரு ரூபாய்
சம்பளமாவது வழங்கப்பட்டு, கையெப்பம் இடவைத்தை நீ எனக்கு அடிமை
என அறிவுறுத்தப்பட்டது.
3) இவர்களுக்கான குரு காணிக்கை
நிறுத்தப்பட்டு, அதன்வழி இவர்கள் வாழ்வாதாரத்தை
போராட்டமாக்கி, ஒற்றை வேஷ்டிக்கு அலையவிட்டு, அதனால் இவர்களுக்குள்ளையே கலகம், சண்டை என்ற பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, பிழைக்க இவர்கள் பணம் என வாய் திறந்து கேட்கும் நிலைக்கு
தள்ளப்பட்டது..
4) அர்ச்சககுடிகளாகிய சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் தனித்துவ அடையாளத்தை, சிறுக சிறுக ஊடுருவி அழித்தது, வரலாற்றை திரித்தது பரப்பியது என,
பசுவின் நான்கு
கால்களை ஒடைப்பது போல் ,இவர்களை நிலையை உடைத்து,
இன்று தன்
வரலாறும் தெரியாமல், தன் சுயத்துவமும் உணராமல், கம்பீரத்தை காட்டவும் முடியாமல் பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியும், அதையும் கடந்துபோகும் ஒரு மறத்து
போன நிலைக்கு வந்துவிட்டார்கள்.
இன்றைய நிலையில்
இவையெல்லாம் பழங்கதையே. பேசி பிரயோஜனம் இல்லை.
தலைக்கு மேல்
வெள்ளம் என நிலை....
இருந்தாலும் ஒரு
சிலராவது கோயில்களில் அர்ச்சகர் நிலை ஒரு காலத்தில் எவ்வாறு இருந்தது என
தெரிந்துகொள்ளட்டும்.
இனி
வரும்காலத்தில் அர்ச்சகர்கள் ஒற்றைத்தலைமை, ஒற்றை சிவாச்சாரியார் மடம் கீழ், என ஒருங்கினைந்தால்தான் வரும் காலத்தை ஓரளவேனும் சமாளிக்கமுடியும்.
சிவார்ப்பணம்.
நன்றி @ தில்லை கார்த்திகேயசிவம்.