நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா என்னனு தெரியுமா?
சில வருடங்களுக்கு முன் மோதிஜி
ஒரு பேட்டியில் சொன்னார். டீமானிடைசேஷன் அறிவித்த அன்று, அர்ஜெண்டினா அதிபர் அவரது மனைவியிடம் சொன்னாராம். “ என் நண்பர் மோதி இனி தன் தூக்கத்தை இழந்து
தவிக்கப் போகிறார். அவர் எடுத்த இந்த நடவடிக்கையில் வெற்றி பெறவேண்டும் என்று
இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.
அதே போல, QUAD (Quadrilateral Security Dialogue ) என்ற அமைப்பைத் தொடங்கிய பின் அதில் உறுப்பினராக இருந்த ஆஸ்திரேலியா மெதுவாக அன் அஃபிஷியலாகக் கழண்டு கொண்டது. அதன் பிறகு மோதிஜியுடனான நட்பு கிடைத்த பின், QUAD ல் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியது. (வரும் 24ம் தேதி கூட க்வாட் அமைப்பின் கூட்டம் நடைபெற இருக்கிறது).
சரி இப்ப இந்த ரெண்டு
விசயத்திற்கும் நம்ம நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? நமக்கென்ன லாபம்?
கச்சா எண்ணெய் குறைத்தல், மாசுக்கட்டுப்பாடு, வாகனத் தயாரிப்பு வளர்ச்சி போன்றவற்றில் இனி
லித்தியம் பேட்டரிகளின் பங்கு தான் மிக மிக அதிகமாக இருக்கப் போகிறது. நம்மிடம்
லித்தியம் தாது என்பது அரவே கிடையாது. நாம் முழுக்க முழுக்க சீன பேட்டரிகளை
இறக்குமதியை நம்பியே வாழ வேண்டிய சூழலில் இருந்தோம். நமக்கு லித்தியம் தாதுகளை
சப்ளை பண்ண நினைக்கும் நாடுகளை மறைமுகமாக மிரட்டி அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த
சீனாவை இப்பொழுது மோதிஜியின் நட்பினால், பிற நாடுகள் உதாசீனம் செய்யத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக அர்ஜெண்டினாவும், ஆஸ்திரேலியாவும் நமக்கு லித்தியம் தாதுக்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. (பொலிவியா சிலி ஆகிய நாடுகளும்) கடந்த நான்கு வருடங்களில் நான்கு மடங்கு தாதுக்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.
இனி வரும் காலங்களில் கச்சா
எண்ணெய்க்கு மாற்றாக உலகின் வர்த்தகத்தில் கோலோச்சப் போகும் லித்தியம் தாதுக்களைப்
பிரித்தெடுத்தல் மற்றும் பேட்டரி செய்தல் தொழிலில் நாமும் மிகப் பெரிய அளவில்
சாதிக்கப் போகிறோம். லித்தியம் பேட்டரி தயாரிப்பின் முன்னோடியான சாம்சங் சீனாவில்
தன் கம்பெனியை மூடி விட்டு இந்தியாவில் கம்பெனியைத் தொடங்கியிருப்பது நம் மீது உலக
நிறுவனங்களின் நம்பிக்கையை மிக அதிகளவில் உயர்த்தியிருக்கிறது.
ஊர் சுத்தும் மோதி என்று
ஊளையிட்ட உள்ளூர் நரிகள் இப்பொழுதே உள்காயங்களுடன் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
மோதிஜி உருவாக்கும் நட்புகள் அவரது சொத்துக்களை வளர்க்க அல்ல! தேசத்தின் மதிப்பு
மற்றும் வளர்ச்சியைக் கூட்ட என்பது மக்களுக்கு புரியத் தொடங்கியிருக்கின்றது.
நன்றி ; ஆனந்தன் அமிர்தன்