உலகின் மிக பெரிய மனிதாபிமானி

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips

 


ஒரு ரயில்வே உயர் அதிகாரி தலைவர் பற்றி சொன்னது...

எல்லா அரசியல் தலைவர்களும் ரயிலில் பயணிப்பது வழக்கம் அந்த காலத்தில்..

ஆனால் அனைவரும் அதில் இருந்து மாறுபடுபவர் புரட்சிதலைவர் மட்டுமே

போக வேண்டிய இடம் அந்த ரயிலில் எறிய பிறகு...இரவு சாப்பிடும் வேளை வரும் முன் அவர் வீட்டில் இருந்து இடுப்பளவு உயரம் உள்ள சாப்பாட்டு கேரியர்கள் பல வந்து சேர்ந்து இருக்கும்.

மணி 8 அல்லது அதை தாண்டி அவர் பயணிக்கும் கோச்சில் உள்ள டி.டி.ஆர். அவர்களை அழைத்து அவருடன் பணி செய்வோர் எத்தனை பேர் காவல்துறை உட்பட என்று தெரிந்து கொண்டு...

ஒவ்வொரு முறையும் புத்தம் புது கேரியர்கள் அதை கொண்டு வந்து அவர்களிடம் முதலில் அதை கொடுத்து நீங்கள் உங்கள் சார்ந்தவர்கள் இன்று பயணத்தில் என் வீட்டு சாப்பாடு சாப்பிடணும்.

இந்த கவரில் கொஞ்சம் பணம் இருக்க அதை கடைநிலை ஊழியர்கள் இடம் கொடுங்க என்று சொல்லுவார்...

அப்போது அங்கே அங்கே அவ்வப்போது இருக்கும் அதிகாரிகள் ஐயா எல்லாம் புது கேரியர்கள் இதை எப்படி உங்களிடம் திருப்பித்தர என்று கேட்டால்....


அதற்க்கு தலைவர் சிரித்து கொண்டே நானும் என்னுடன் வருபவர்களும் சாப்பிட்டு முடித்து மீதியை உங்களுக்கு தருகிறோம் என்று எவரும் நினைத்துவிட கூடாது....முதலில் உங்களுக்கு பிறகு நாங்கள் சாப்பிட்டு கொள்வோம்...

அந்த புது கேரியர்கள் நீங்கள் உங்கள் விருப்பம் போல பயன் படுத்தி கொள்ளலாம்.

எங்களிடம் திருப்பித்தர அல்ல என்று சொல்லுவார்..

உலகின் மிக பெரிய மனிதாபிமானி அவர் என்று சொல்லி முடிக்கிறார்....

என்ன தலைவர் நெஞ்சங்களே அதனால் தான் தலைவர் புகழ் ரயில்வண்டி போல நீண்டு கொண்டே இருக்க நாமும் தெரிந்து கொண்டே இருப்போமே..

வாழ்க தலைவர் புகழ்.

நன்றி.. உங்களில் ஒருவன் நெல்லை மணி....நன்றி.

தொடரும்...

அரிய படம் பதிவில் நன்றி...

இப்படிப்பட்ட மாமனிதரையும் இழித்தும் பழித்தும் பேசும் கழிசடை பிறவிகளை கடந்து செல்வோம்....ஆக...

 

நன்றி இணையம்