மீனாட்சி அம்மன் என்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

 









சிதம்பரம், காசி, திருக்காளத்தி,திருவண்ணாமலை வரிசையில் முக்கியமான 5வது தலமாக திருவாலவாய் உள்ளது...

திருவாலவாய்என்பது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகும்.இது மிகப்பெரிய சிவ தலமாகும்.

இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது.

இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.



மீனாட்சி அம்மன் என்பது தமிழில் அங்கையற்கண்ணிஎன்று பொருள் அதாவது மீன் போல் கண்ணுடையவள் மீனாட்சி.மீன் எப்போதும் தன் கண்கள் மூலம் தன் முட்டைகளை பாதுகாக்கும் அதைபோலவே எப்போதும் விழித்திருந்து பக்தர்களை பாதுகாப்பவள் மீனாட்சி.

தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாகும்.

இராமர், லட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இக்கோயில் வழிபடப்பட்டுள்ளது.

இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசிபெற்றதாகும்.

2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது.

மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார்.

இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான்.

இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார்.இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது.அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

இக்கோயில் சொக்கலிங்கரையும்,மீனாட்சி அம்மனையும் வழிபட்டால் அனைத்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த கோயில் நாம் கால் வைத்தாலே அது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.

 

நன்றி இணையம்