தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

 

 

இந்த போட்டோக்கள் எந்த அரசியல் கட்சி மாநாடு, ஆசிரமம் இல்லை. ஆந்திராவின் பலமனேர் அருகே விருபாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள சித்தவைத்திய சாலை. இங்கு நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது . 
 
நடக்க முடியாதவர்கள் காரிலேயே உட்கார்ந்து இருந்தால் போதும் அவரே வந்து மருந்து கொடுக்கிறார். ஓய்வறைகளும் உள்ளது.
 
மருத்துவர் ஒரு சட்டையும், லுங்கியும் கட்டிக்கொண்டு சாதாரணமாக தன் கையாலேயே ஒரு கிளாஸ்ல மருந்து கொடுக்கிறார். 
 
ஒரே மருந்து எல்லாருக்கும்... எந்த கேள்வியும் இல்லை. மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை குடிக்க வேண்டும். கொஞ்சம் புழுங்கலரிசி சோறு தராங்க. சாப்பிட்டு விட்டு வரனும். 
 
1500ரூபாய் கட்டணம்... இங்கே வருபவர்கள் பெரும்பாலும் பெரிய பணக்காரர்களே.
 
15 நாள் இடைவெளியில் மீண்டும் தரணும், இது இரண்டாம் கட்டம்.. என் பாட்டிக்கு முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம். BP அதிகமாகி பக்கவாதத்தில் சுயநினைவின்றி கிடந்தவரை கொண்டு சென்றோம். இப்போது நல்ல முன்னேற்றம்.
 
கைகால்கள் அசைக்கிறார். சாப்பிடுகிறார். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் சென்றோம்.
 
இன்னொரு முறை வரணும். (மொத்தம் மூன்று முறை வரவேண்டும், அதேபோல ஒரு ட்ரிப்புக்கு மூன்றுமணி நேர இடைவெளியில மூன்று முறை தரவேண்டும் , ஆக மொத்தம் ஒன்பது வேளை) சரியாகிவிடும் நம்பிக்கை இருக்கு. 
 
ஆனால் மருத்துவமனைகளுக்கு போயிருந்தால் எத்தனை லட்சங்கள் ஆகியிருக்குமோ தெரியாது. தினமும் குறைந்தது 250பேர் மூன்று மாநிலங்களில் இருந்தும் வராங்க. உங்களில் யாருக்காவது பாதிப்பிருந்தால் போய்வாருங்கள். நல்லதே நடக்கிறது.
 
முகவரி : குப்பம் அல்லது வி.கோட்டா to பலமனேர் போய் அங்கிருந்து பலமனேர்-நெல்லிபட்லா டவுன்பஸ் (அ)ஆட்டோவில் விருபாட்சிபுரம் போகலாம்..
 
பின்குறிப்பு  - 
நன்கு விசாாித்து விட்டு செல்லவும்
- இது முகநுாலில் ( 

Reddiar ரெட்டியார் &  

Navaneetha Kannan Mayan)

 இருந்து வந்தது நன்றாக இருந்தது யாருக்காவது பயன்பாடு என்பதால் இந்த பதிவு குறைந்த செலவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கட்டுரை மட்டுமே.
 
 
 
 

கிருஷ்ண தீவு..

மணக்கால் அய்யம்பேட்டை | 5:29 PM | Best Blogger Tips

 May be an image of boat and text that says "கிருஷ்ண தீவு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் தீவுக்கருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய தீவான கிருஷ்ணதீவு (Krusadai Island) தான் அது."

கிருஷ்ண தீவு
 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் தீவுக்கருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய தீவான கிருஷ்ண தீவு (Krusadai Island) தான் அது.
 
 
தீவின் சிறப்பம்சம்
 May be an image of ‎1 person, horizon and ‎text that says "‎و தீவின் சிறப்பம்சம் கிருஷ்ணதீவு சுற்றிலும் மிகுந்த உயிரியல் பன்மை கொண்டுள்ளது. முட்டை இடும் கடற்கச்சுகள், அலவை மரங்கள், கடல் பசுமை மற்றும் பல வகை அரிய மீன்கள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.‎"‎‎
கிருஷ்ணதீவு சுற்றிலும் மிகுந்த உயிரியல் பன்மை கொண்டுள்ளது. முட்டை இடும் கடற்கச்சுகள், அலவை மரங்கள், கடல் பசுமை மற்றும் பல வகை அரிய மீன்கள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
 
கடல் உயிரியல் விலங்குகள்
இங்கு பலவிதமான கடல் பாசிகள், 
 May be an image of text that says "கடல் உயிரியல் விலங்குகள் இங்கு பலவிதமான கடல் பாசிகள், சமுத்திரப்பூச்சிகள், சிப்பிகள், சுனாமி தடுப்பு மரங்கள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இது மாங்க்ரோவ் தாவரங்களும் நிறைந்த பகுதியாகும்."
சமுத்திரப்பூச்சிகள், சிப்பிகள், சுனாமி தடுப்பு மரங்கள் போன்றவை காணப்படுகின்றன.
மேலும் இது மாங்க்ரோவ் தாவரங்களும் நிறைந்த பகுதியாகும்.
 
 
அபூர்வ உயிரினங்கள்
 May be an image of text that says "அபூர்வ உயிரினங்கள் பல்வேறு வகையான கொரல்கள், கடல் நரிகள், கடற்கரும்புள்ளிகள் போன்ற அபூர்வ உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன."
பல்வேறு வகையான கொரல்கள், கடல் நரிகள், கடற்கரும்புள்ளிகள் போன்ற அபூர்வ உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
 
இயற்கை காட்சிகள்
 May be an image of temple, horizon and text that says "இயற்கை காட்சிகள் சுற்றிலும் இருக்கும் கண்கவர் இயற்கை காட்சிகள் ரம்மியமான உணர்வை ஏற்படுத்துவதுடன் லோ பட்ஜெட்டில் அந்தமானுக்கு இணையான அனுபவத்தை கொடுக்கின்றன."
சுற்றிலும் இருக்கும் கண்கவர் இயற்கை காட்சிகள் ரம்மியமான உணர்வை ஏற்படுத்துவதுடன் லோ பட்ஜெட்டில் அந்தமானுக்கு இணையான அனுபவத்தை கொடுக்கின்றன.
 
அனுமதி அவசியம்
 May be an image of text that says "அனுமதி அவசியம் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகும். எனவே இங்கு SPPNTe செல்ல ராமேஸ்வரம் வனத்துறை அலுவலகம் மூலம் அனுமதி பெற வேண்டும்."
இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகும். எனவே இங்கு செல்ல ராமேஸ்வரம் வனத்துறை அலுவலகம் மூலம் அனுமதி பெற வேண்டும்.
 
அழகிய தீவு
 May be an image of body of water, beach and text that says "அழகிய தீவு ஆனால் தமிழ்நாட்டிலேயே புதுச்சேரியை தூக்கி சாப்பிடும் அளவு அந்தமானுக்கு இணையான ஒரு அழகிய தீவு உள்ளது."
தமிழ்நாட்டிலேயே புதுச்சேரியை தூக்கி சாப்பிடும் அளவு அந்தமானுக்கு இணையான ஒரு அழகிய தீவாக கிருஷ்ணா தீவு உள்ளது.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷


துக்காராம்_கதைகள் 💃#புதிய புடவை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 AM | Best Blogger Tips

 May be an image of 3 people and temple

💃#புதிய புடவை... இதுவரை அதை ஒரே ஒருமுறை தான் கமலாபாய் கட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத்தான் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். சற்று விலைமதிப்புடையது.
துக்காராமின் மனைவி நல்ல சேலைகளையும் கட்டுவதுண்டு என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே!
 
அதிக அழுக்கில்லை என்றாலும், புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்தாள்.
 
புடவைக்கு நோகுமோ என்பதுபோல, துவைக்கும் கல்லில் லேசாக அடித்துத் துவைக்கும் தன் செயலை எண்ணி, அவளுக்கே சிரிப்பு வந்தது. புதுப்புடவை என்பதால் கைகளுக்கே புடவை மேல் பாசம் வந்துவிட்டதோ!
 
யாரோ ஒருவர்- துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் - அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லாவிட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன!
 
சம்பாத்தியம்! அந்த வார்த்தையை எண்ணியதும் கமலாபாயின் உதட்டில் கசந்த புன்முறுவல் பிறந்தது.
 
உத்யோகம் புருஷ லட்சணமாமே? துக்காராம் எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை.
 
கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா! வயிறு என்று ஒன்று இருக்கிறதே!
 
தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, 
சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள்தான் வாங்கிக் கொடுத்தாள். 
 
கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவேண்டாமா! பரண்மேல் ஏறி பஜனைப் பாடல்களைப் பாடினால் பறவைகள் ஆனந்தமாகத் தாளம் போட்டா கேட்கும்! 
 
அத்தனை சோளத்தையும் அவை கொத்திச் சென்றுவிட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.
 
எப்போதும் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைதான்! அவளுக்கும் கிருஷ்ண பக்தி உண்டுதான். என்றாலும், இப்படியா! தெய்வம் என்றைக்குக் கண் திறக்கும்? இவள் வீட்டின் வறுமை என்று மறையும்?
 
துக்காராமிடம் இன்னொரு சிக்கல். உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை எந்த உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்வார்?
 
ஒரு பெருமூச்சுடன் புடவையைப் பிழிந்து கொல்லைப்புறக் கொடியில் உலர்த்தினாள் கமலாபாய். காற்றில் அரைமணியில் புடவை உலர்ந்துவிடும். 
 
துக்காராமைத் தேடியவாறு வாசலுக்கு வந்தாள்.
வழக்கம்போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும், பக்தியின் ஆழமும் கமலாபாயையும் ஒரு உருக்கு உருக்கத்தான் செய்தது.
 
சம்பாதிக்காவிட்டால் போகிறது... ஆனால், ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ்ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்றால், எல்லோரும் ஒரே மனித ஜாதிதான்! என்று நகைப்பார் அவர்.
 
பார்க்க லட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது.
 
""ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்காரேன்!'' என்று அன்போடு அவளை உபசரித்தார் துக்காராம். கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள்! என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு கழுத்தை நொடித்தவாறு, "இதிலெல்லாம் எனக்கொன்றும் பங்கில்லை' என்பதுபோல விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றாள்.
 
திண்ணைக் கச்சேரி தொடர்ந்தது. ""ஆகா! என்ன கானம்! எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கண்ணனிடம் கிடையாது. 
 
எல்லோரும் கண்ணனைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழிகாணுங்கள்!'' என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தியிசையை முடித்துக் கொண்டார் துக்காராம். 
 
ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"ஏன் அம்மா? நீ புறப்படவில்லையா?''
 
"எல்லோரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள்''.
 
""உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா?''
""நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால், யாரோ ஒரு பெண், மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவைதான்! என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோகவைத்தார்
 
இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது!''
 
துக்காராம் அவளது வீட்டுக் கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டார். ""ஒரு நிமிஷம் இரு!' என்றவர் கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். 
 
வாசலுக்கு வந்தார்.
""அம்மா! இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது''.
சேலையை அவள் கையில் கொடுத்தார். 
 
அவரையே கனிவுடன் பார்த்த அவள், ""நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக்கொள்ள மாட்டாரா?'' என்று கேட்டாள்.
 
*""அவள் கோபம் எத்தனை நேரம்? பிறகு சமாதானமாகி விடுவாள்.* அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. உனக்குத்தான் இது இன்னும் அவசியம்''.
 
துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடைபெற்றாள்.
 
மாலைநேரம். கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணோம்! கோபத்தோடுதுக்காராமிடம் வந்தாள்.
""புடவை எங்கே?''
 
""கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்தேன் கமலா! உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே?''
 
குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால், இவரோ வள்ளல்! ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர்!' கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவரோடு புறப்பட்டாள்.
 
""அழாதே கமலா! நமக்குத் தேவையானவற்றைக் கண்ணன் கொடுப்பான்!''
கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். "என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்?' என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலா.
 
இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். *கமலாபாய் கண்திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது!*
 
"அப்படியானால் கீழ்ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி. என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா! கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்து கொண்டேன்'.
 
கிருஷ்ணரையும் ருக்மிணி யையும் விழுந்து வணங்கிய அவள், ""வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்!'' என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள்.
வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார்:
 
""மறந்துவிட்டீர்களா அம்மா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம்! என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா! அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன்!''
 
கமலாபாய் திகைத்துப் போனாள்.
""கமலா! நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக்கொண்டவன் புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா?'' என்று துக்காராம் சிரித்தபோது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்துகொண்டது... 🙏🏼

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and smiling 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

சில ரோட்டு கடைகளில் கிடைக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips

 No photo description available.

 

ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை நமக்கு விடை தெரியாத கேள்வி என்றால் இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதுதான். 
 
ஒரு கரண்டி மாவில் ஒரு இட்லி சாதாரண கடையில் 5 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 10 ரூபாய். அதே மாவில் ஒரு தோசை சாதாரண கடையில் 40 to 50 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 100 to 150 ரூபாய் அதாவது ஒரு கரண்டி மாவு இட்லியாகும் போது 10 ரூபாய் ஆகுது அதே ஒரு கரண்டி மாவில் சுடுற தோசை 100 ஆக மாறும் தந்திரம் தான் தெரியல. இதைதான் கோபிநாத் அவர்கள் ஹோட்டல் முதலாளிகளிடம் கேட்கிறார்கள் நானும் என்ன தான் சொல்றாங்கன்னு பார்க்கிறேன் ஒருத்தர் கூட சரியான காரணத்தை சொல்லவே இல்லை.
 
 கோபிநாத்தும் அவர்கள் சொல்ற பதிலில் திருப்தி இல்லாமல் இது நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லையேங்கிற மாதிரி வளைச்சு வளைச்சு கேட்டாலும் அவங்க சரியான பதிலை சொல்லவே இல்லை. 
 
ஹோட்டல் செலவு, ஆள் சம்பளம் கரண்ட் பில் இதையே தான் சொல்றாங்க. கடைசி வரை சொல்லவே இல்லங்க. 
 
சாதாரணமா நம்ம வீட்டில் ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து போடுவோம். அரிசி ஒரு 60 உளுந்து 38 ரூபாய் ஆக மொத்தம் 98 அதில் போடுற வெந்தயம் ஒரு 2 ரூபாய் வைச்சுக்குவோம் மொத்தம் 100 ரூபாய் ஆகுது. 
 
தேங்காய் சட்னி, கொஞ்சம் தக்காளி சட்னி கொஞ்சம் சாம்பார் வைச்சா அதற்கு ஆகுற செலவு 50 ரூபாய் வைச்சுக்குவோம். எண்ணெய் ஒரு கால் லிட்டர் ஆகும். ஆக எல்லாம் சேர்த்து ஒரு 200 ரூபாய் ஆகுது இதோட செலவு. 
 
இப்ப இந்த ஒரு கிலோ அரிசியில நாம எத்தனை தோசை ஊத்துவோம் எத்தனை பேர் சாப்பிடுவோம் எத்தனை நாள் வைச்சி சாப்பிடுவோம். ஒரு ஆள் எத்தனை தோசை சாப்பிடுவோம் உங்க மனக்கணக்குக்கே விடுறேன். இப்ப உங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இவர்கள் திரும்ப திரும்ப.. ஹோட்டலுக்கு ஆகுற செலவையே சொல்லிட்டு இருக்காங்க. 
 
ரோட்டு கடை நடத்துறவங்களுக்கு லாபம் கிடைக்குமாம் பெரிய ஹோட்டல்ல லாபமே பார்க்க முடியாதாம். அப்ப லாபம் தான் கிடைக்கலையே அப்ப நீங்க ரோட்டு கடையே நடந்தலாமே அதுல தான் லாபம் வருதில்ல.
 
 எதுக்கு பெரிய ஹோட்டல் கட்டி லாபமே வராம வியாபாரம் பண்றீங்க. ஒன்னு நல்லா புரியுதுங்க கண்டிப்பா புத்திசாலிகள் பெரிய ஹோட்டலுக்கு போகப்போவதில்லை ஆடம்பரத்துக்காக வாழ்கின்றவர்கள் மட்டும்தான் பெரிய ஹோட்டல் போகிறார்கள் நீங்க நடத்துங்க நடத்துங்க.. 
 
ருசிக்கு இங்க ஆயிரம் கடைகள் இருக்கு.
 
சில ரோட்டு கடைகளில் கிடைக்கும் நல்ல சுவையான உணவு பெரிய ஹோட்டல்களில் கிடைப்பதில்லை....??????💯

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

வீடு கட்ட வாங்க போகிறீர்களா....?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips

நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...

''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.


கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...





என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.




கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.



சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி :

விகடன்

பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips
பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்! 

ஒருவர் நின்று சமைக்கும் போது இன்னொருவர் வர இடம் இல்லாத சமையலறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிச்சனுக்குள் கார்டனா? ஏற்கனவே  ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது?  இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில்  இறங்கி பிரச்னை வருமே? இப்படியெல்லாம் திகைக்க வேண்டாம்!

உங்கள் அத்தனை பிரச்னைகளுக்கும் நிறைய மாற்று முறைகள் உள்ளன. கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட், படிக்கட்டு என்று  எங்கு வேண்டுமானாலும் வைக்கும் ‘யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக்  பேக்’ கிடைக்கிறது. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்தப் பைகள் புற  ஊதா கதிர்களைத் தாங்கி, வெயிலிலும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் உழைக்கும். பார்வைக்கு அழகாக பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.

உடையாது... கிழியாது. வளர்க்கும் தாவரங்களுக்கேற்ப நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் வசதி இதில் உண்டு. இவ்வகை  பைகள் உபயோகிப்பதால் களை என்பதே மிக அரிது. நீரின் தேவையையும் மட்டுப்படுத்தி மிக அதிக அளவில் சிக்கனப்படுத்தலாம்.

1. மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கும் பைகள்...
இதில் கொத்தமல்லி முதல் ரோஜா வரை வளர்க்கலாம்.
2. நீளமான 2 இன் 1 பைகள்...
கீழ் அடுக்குகளில் மண்புழு உரமும் மேலே கீரையும் விதைக்கலாம்.
3. மரமும் வளர்க்க உதவும் பெரிய பைகள்...
மரவகையான முருங்கைகூட வளர்க்கலாம். இடமும் அதிகம் தேவையில்லை. எங்கு
வேண்டுமானலும் நகர்த்தும் வசதியும் உண்டு.
4. பால்கனியில் கீரை வகைகள் வளர்க்க சிறிய பைகள்...
பளிச் கீரையே பால்கனியே அழகாகும் இப்பைகளில் வளர்க்கும்போது!
5. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய அளவிலான பைகள்...

மண்ணுக்கும் உண்டு மாற்று!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மண்ணுக்கு மாற்று இட்டு வளர்க்கலாம். அது என்ன மண்ணுக்கு மாற்று? மண்ணைவிட குறைந்த  அளவு தண்ணீர் தேவைப்படுவதும், எடை குறைந்ததும், அதிக அளவு உரம் தேவைப்படாததுமான ‘காயர் பித்’ உள்பட பலவித மண் மாற்றுப்
பொருள்கள் உள்ளன. மேல்நாடுகளில் ஒரே சீரான விவசாயத்துக்கு உதவும் வகையில் இவை அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும் விவரங்கள்  அடுத்த இதழில்...

தண்ணீர் மேலாண்மை பற்றி விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்...

படத்தில் காட்டிய படி ஒரு பெரிய பக்கெட்டை சிறிது உயரமான இடத்தில் வைத்து ஒரு குழாய் மூலம் எவ்வளவு தேவையோ அந்த அளவு நீளத்தில்  பைப் பொருத்தவும்.

தேவைப்படும் இடங்களில் லி, ஜி வடிவ இணைப்புகளை பொருத்தி ட்ரிப்பர் என்னும் சொட்டுநீர் பாசன இணைப்பை ஒரு துளையிட்டு பொருத்தவும்  (இது கடைகளில் 2 ரூபாய் முதல் கிடைக்கும்). இதனை உபயோகிப்பதால் மிகமிக குறைந்த அளவு தண்ணீரில் நிறைய செடிகள் பயனடையும்.

நிரப்புவதற்கு நிறையவே உண்டு!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதைவிட மரக்குச்சிகள், பழைய கால்மிதிகள், தேங்காய் மட்டைகள், மண்புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம்.  பழைய கால்மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகும்.


ஒருவர் நின்று சமைக்கும் போது இன்னொருவர் வர இடம் இல்லாத சமையலறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிச்சனுக்குள் கார்டனா? ஏற்கனவே ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது? இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில் இறங்கி பிரச்னை வருமே? இப்படியெல்லாம் திகைக்க வேண்டாம்!

உங்கள் அத்தனை பிரச்னைகளுக்கும் நிறைய மாற்று முறைகள் உள்ளன. கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட், படிக்கட்டு என்று எங்கு வேண்டுமானாலும் வைக்கும் ‘யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக் பேக்’ கிடைக்கிறது. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்தப் பைகள் புற ஊதா கதிர்களைத் தாங்கி, வெயிலிலும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் உழைக்கும். பார்வைக்கு அழகாக பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.

உடையாது... கிழியாது. வளர்க்கும் தாவரங்களுக்கேற்ப நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் வசதி இதில் உண்டு. இவ்வகை பைகள் உபயோகிப்பதால் களை என்பதே மிக அரிது. நீரின் தேவையையும் மட்டுப்படுத்தி மிக அதிக அளவில் சிக்கனப்படுத்தலாம்.

1. மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கும் பைகள்...
இதில் கொத்தமல்லி முதல் ரோஜா வரை வளர்க்கலாம்.
2. நீளமான 2 இன் 1 பைகள்...
கீழ் அடுக்குகளில் மண்புழு உரமும் மேலே கீரையும் விதைக்கலாம்.
3. மரமும் வளர்க்க உதவும் பெரிய பைகள்...
மரவகையான முருங்கைகூட வளர்க்கலாம். இடமும் அதிகம் தேவையில்லை. எங்கு
வேண்டுமானலும் நகர்த்தும் வசதியும் உண்டு.
4. பால்கனியில் கீரை வகைகள் வளர்க்க சிறிய பைகள்...
பளிச் கீரையே பால்கனியே அழகாகும் இப்பைகளில் வளர்க்கும்போது!
5. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய அளவிலான பைகள்...

மண்ணுக்கும் உண்டு மாற்று!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மண்ணுக்கு மாற்று இட்டு வளர்க்கலாம். அது என்ன மண்ணுக்கு மாற்று? மண்ணைவிட குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுவதும், எடை குறைந்ததும், அதிக அளவு உரம் தேவைப்படாததுமான ‘காயர் பித்’ உள்பட பலவித மண் மாற்றுப்
பொருள்கள் உள்ளன. மேல்நாடுகளில் ஒரே சீரான விவசாயத்துக்கு உதவும் வகையில் இவை அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...

தண்ணீர் மேலாண்மை பற்றி விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்...

படத்தில் காட்டிய படி ஒரு பெரிய பக்கெட்டை சிறிது உயரமான இடத்தில் வைத்து ஒரு குழாய் மூலம் எவ்வளவு தேவையோ அந்த அளவு நீளத்தில் பைப் பொருத்தவும்.

தேவைப்படும் இடங்களில் லி, ஜி வடிவ இணைப்புகளை பொருத்தி ட்ரிப்பர் என்னும் சொட்டுநீர் பாசன இணைப்பை ஒரு துளையிட்டு பொருத்தவும் (இது கடைகளில் 2 ரூபாய் முதல் கிடைக்கும்). இதனை உபயோகிப்பதால் மிகமிக குறைந்த அளவு தண்ணீரில் நிறைய செடிகள் பயனடையும்.

நிரப்புவதற்கு நிறையவே உண்டு!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதைவிட மரக்குச்சிகள், பழைய கால்மிதிகள், தேங்காய் மட்டைகள், மண்புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம். பழைய கால்மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகும்.
 
Via FB ஆயுதம் செய்வோம்

தங்கமா அல்லது ஈக்விட்டியா- எது சிறந்தது?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் ஈக்விட்டிக்களுக்கு பதிலாக தங்கத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தங்கம் பல வருட காலமாக ஒரு நிகரற்ற முதலீடாக விளங்கி வந்துள்ளது என்று சுட்டிக்காடும் சிலர், அதன் நீண்ட கால நல்வாய்ப்பை ஒப்பிடுகையில் தற்போதைய சரிவை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலரோ, தங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

பென் பெர்னான்கே, அவருடைய பத்திரிக்கையாளர் கூட்டத்தின் போது, ஒரு மாதத்தில் சுமார் 85 பில்லியன் டாலர் டிரெஷரி அசிஸ்டன்ஸ் அளிக்கும் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராம் 2013 ஆம் வருட இறுதியில் நிறுத்தப்படக்கூடும் என்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சந்தைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தங்கம் மற்றும் ஈக்விட்டி மாற்றகங்களைப் பொறுத்தவரையில், பயம் கலந்த விற்பனை தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் இவற்றுள் எது சிறந்தது என்று தீர்மானிப்பது மிகவும் சிக்கலானதாகும். இவற்றுள் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

தங்கத்தின் உன்மை நிலை

உண்மையில் முதலீடுகளைப் பொறுத்த வரையில், கடந்த 12 ஆண்டுகளாக, முன்னணியில் இருந்து வந்த தங்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் முதலீட்டாளர்களின் கண்ணின் மணியாய் இருந்துள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் அறைகூவல்களுக்குப் பின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பிராஃபிட்களை புக் செய்துள்ளனர். உலகின் மிகப்பெரும் இடிஎஃப் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிடிஆர் கூட 1000 டன்கள் வரையிலான வரலாறு காணா சரிவைச் சந்தித்துள்ளது

பிராஃபிட் புக்கிங்கில்

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் தங்க இறக்குமதி வேரூன்ற ஆரம்பித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் விலைகள் மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களான, தங்கத்தை வாங்கும் நுகர்வோர்கள் தான் எவ்வாறாயினும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், சர்வதேச விலைகள் பலத்த அடி வாங்கியிருப்பதனால், முதலீட்டாளர்கள் இப்போதும் பிராஃபிட் புக்கிங்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தங்க இருப்பின் அனுகூலங்களைக் குறைக்கக்கூடியதாய் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாய் இது வரை காணாத அளவில் சுமார் 61.15 வரை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தங்க இறக்குமதி சமநிலையை பாதித்து, விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்திய கரன்ட் அக்கவுன்ட் குறைபாடுகள் அரசின் நிலையை கவலைக்கிடமாக்கியுள்ளது. மேலும், தங்க இறக்குமதிகளின் மீதான அதீத அடக்குமுறைகளும் தவிர்க்க இயலாதவையாய் உள்ளன

ஈக்விட்டிகளின் நன்மை

இந்திய ஈக்விட்டிகள் கடினமானதொரு துறையாகக் கருதப்படுகின்றன. மேக்ரோ மட்டத்தில் காணப்படும் இந்த தொய்வு இத்தகைய மந்தமான செயலாக்கத்தின் காரணியாகும். யு.எஸ். டோவ் ஜோன்ஸுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கையில், வர்த்தக வட்டியானது யு.எஸ். இன்டெக்ஸ் மற்றும் டாலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டின் சந்தை, அதனுடைய சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதையும் காணலாம்.

இந்திய முதலீட்டு

உற்பத்தித்திறன், முதலீடுகள், அதீத பணவீக்கம் மற்றும் கிரீன் ஃபீல்டு செயல்திட்டங்கள் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள், இந்திய முதலீட்டு சுழற்சியை குறைவாக்கி உள்ளன. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின் ஃபாரீன் இன்ஸ்ட்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் (எஃப்ஐஐ'ஸ்) கூட போட்ட பணத்தை பறித்துக் கொண்டு விட்டது.

இறுதி அறைகூவல்

இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, கட்டாயமாக பன்மடங்கு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்த கால வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்;

ரூபாயின் விளைவுகள்

சீன சந்தைகளின் மந்தநிலை மற்றும் அவர்களின் தங்க உபயோகம் ஆகியவை புல்லியன்களுக்கான தேவையையும் கீழிறங்கச் செய்துள்ளன. இவ்வருடத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின்னும் தங்க விலையில் பயங்கர இறக்கத்தைச் சந்தித்துள்ள இந்தியா, ரூபாயின் மதிப்பு உயரும் தறுவாயில், தங்கத்தின் விலையில் மேலும் பல சிக்கல்களைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கு சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயம்

1. யு.எஸ். ஈக்விட்டிகளின் உயர்வு ஏனைய சந்தைகளிலும் அத்தகைய ஒரு நம்பிக்கை உணர்வைப் பரவச் செய்யும்.
2. மிக அதிகமான பங்குகளை வைத்திருப்பதனால், சீனா தற்சமயம் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
3. இந்திய சந்தைகள் பல மாத விலைக்குறைப்புகளைக் கொண்டிருக்கும் இச்சமயம், சிறப்பான தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஈக்விட்டி

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, ஸ்டாக் பிக்கிங்கில் கவனமாகத் தேர்ந்தெடுத்தல் அவசியம், ஆனால் செர்ரி பிக்கிங் தான் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது. பெர்னான்கே, தான் க்யூஇ (QE) அஜெண்டாவை சுத்தமாக ஒழிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு

பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:25 PM | | | Best Blogger Tips


பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப
்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.
பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்

டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும்
. ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.

பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்க
உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உத
ாரணங்கள் மூன்று.
ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது.


via Vikatan