பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:43 | Best Blogger Tips
பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்! 

ஒருவர் நின்று சமைக்கும் போது இன்னொருவர் வர இடம் இல்லாத சமையலறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிச்சனுக்குள் கார்டனா? ஏற்கனவே  ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது?  இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில்  இறங்கி பிரச்னை வருமே? இப்படியெல்லாம் திகைக்க வேண்டாம்!

உங்கள் அத்தனை பிரச்னைகளுக்கும் நிறைய மாற்று முறைகள் உள்ளன. கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட், படிக்கட்டு என்று  எங்கு வேண்டுமானாலும் வைக்கும் ‘யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக்  பேக்’ கிடைக்கிறது. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்தப் பைகள் புற  ஊதா கதிர்களைத் தாங்கி, வெயிலிலும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் உழைக்கும். பார்வைக்கு அழகாக பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.

உடையாது... கிழியாது. வளர்க்கும் தாவரங்களுக்கேற்ப நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் வசதி இதில் உண்டு. இவ்வகை  பைகள் உபயோகிப்பதால் களை என்பதே மிக அரிது. நீரின் தேவையையும் மட்டுப்படுத்தி மிக அதிக அளவில் சிக்கனப்படுத்தலாம்.

1. மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கும் பைகள்...
இதில் கொத்தமல்லி முதல் ரோஜா வரை வளர்க்கலாம்.
2. நீளமான 2 இன் 1 பைகள்...
கீழ் அடுக்குகளில் மண்புழு உரமும் மேலே கீரையும் விதைக்கலாம்.
3. மரமும் வளர்க்க உதவும் பெரிய பைகள்...
மரவகையான முருங்கைகூட வளர்க்கலாம். இடமும் அதிகம் தேவையில்லை. எங்கு
வேண்டுமானலும் நகர்த்தும் வசதியும் உண்டு.
4. பால்கனியில் கீரை வகைகள் வளர்க்க சிறிய பைகள்...
பளிச் கீரையே பால்கனியே அழகாகும் இப்பைகளில் வளர்க்கும்போது!
5. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய அளவிலான பைகள்...

மண்ணுக்கும் உண்டு மாற்று!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மண்ணுக்கு மாற்று இட்டு வளர்க்கலாம். அது என்ன மண்ணுக்கு மாற்று? மண்ணைவிட குறைந்த  அளவு தண்ணீர் தேவைப்படுவதும், எடை குறைந்ததும், அதிக அளவு உரம் தேவைப்படாததுமான ‘காயர் பித்’ உள்பட பலவித மண் மாற்றுப்
பொருள்கள் உள்ளன. மேல்நாடுகளில் ஒரே சீரான விவசாயத்துக்கு உதவும் வகையில் இவை அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும் விவரங்கள்  அடுத்த இதழில்...

தண்ணீர் மேலாண்மை பற்றி விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்...

படத்தில் காட்டிய படி ஒரு பெரிய பக்கெட்டை சிறிது உயரமான இடத்தில் வைத்து ஒரு குழாய் மூலம் எவ்வளவு தேவையோ அந்த அளவு நீளத்தில்  பைப் பொருத்தவும்.

தேவைப்படும் இடங்களில் லி, ஜி வடிவ இணைப்புகளை பொருத்தி ட்ரிப்பர் என்னும் சொட்டுநீர் பாசன இணைப்பை ஒரு துளையிட்டு பொருத்தவும்  (இது கடைகளில் 2 ரூபாய் முதல் கிடைக்கும்). இதனை உபயோகிப்பதால் மிகமிக குறைந்த அளவு தண்ணீரில் நிறைய செடிகள் பயனடையும்.

நிரப்புவதற்கு நிறையவே உண்டு!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதைவிட மரக்குச்சிகள், பழைய கால்மிதிகள், தேங்காய் மட்டைகள், மண்புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம்.  பழைய கால்மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகும்.

Via FB ஆயுதம் செய்வோம்