பங்குனி_உத்திரத்தின்_மகிமை

மணக்கால் அய்யம்பேட்டை | 9:45 AM | Best Blogger Tips

 No photo description available.

 

 பங்குனி_உத்திரத்தின்_மகிமை

 பங்குனி உத்திரத்தில் இத்தனை திருமணங்களா? இவ்வளவு சிறப்புகளா?

#பங்குனி_உத்திரத்தின்_மகிமை

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் இந்த நன்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் : .

இந்த நன்நாளில் கோயில்களில் நடக்கும் #சிறப்புநிகழ்ச்சிகள் :

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்.

ஓம் சிவாய நம 🙏

பங்குனி உத்திரத்தில் இத்தனை திருமணங்களா? இவ்வளவு சிறப்புகளா?
பெருமைமிகு பங்குனி உத்திரம்...!

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :
முருகன் - தெய்வானை திருமணம் எங்கு நடந்தது? Where did the marriage between  Murugan and Deiva take place?
👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
மாவிளக்கேற்றி மகா விஷ்ணுவை வழிபடும் மகாலட்சுமி | Mahalakshmi Vishnu
👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
பிரம்ம தேவருக்கு நான்கு தலைகள் ஏன்? பிரம்மர் குறித்து ஆச்சர்ய தகவல்கள்
👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்நாளில் பெற்றார்.
இந்திரன் வம்சம் - YouTube
👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
கற்பக விருட்சம்: பங்குனி உத்திரம் -தெய்வங்களின் திருமணத் திருநாள்!
👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
பங்குனி உத்திர நாளில் நடந்த சிறப்பு பொருந்திய நிகழ்வுகள் என்ன...?
👉 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.
இறைவனின் பரிபூரண அருளை தரும் பங்குனி உத்திர வழிபாடு! | Margazhi special |  thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai songs |  thiruvampavai songs in tamil | margazhi kolam | margazhi month ...
👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம் | Madurai  Meenakshi Amman Thirukalyanam celebrated - hindutamil.in
👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
வாரணமாயிரம்' பாடினால் திருமண வரம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமை |  aandal - hindutamil.in
👉 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்.... அவரையே வீழ்த்தி அருள்பாலித்த  எம்பெருமான்...!
👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.
Panguni Uthra Festival: 13-day walk opening at Sabarimala Ayyappan Temple |  பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறப்பு
👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
அருச்சுனன் - தமிழ் விக்கிப்பீடியா
👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.
சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருநாளில் நிகழ்ந்தவை என்ன தெரியுமா...?
👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.
Kanchi Kamakshi amman temple timings : காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் :  அற்புத வரலாறும், சிறப்புகளும்
👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
சுந்தரமூர்த்தி நாயனார்!! -- ஆரூர் சுந்தரசேகர்.
👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!😊🕉️🙏