வெந்தயக் கீரை சத்து, பலன் மற்றும் செய்முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:12 | Best Blogger Tips

வெந்தயக் கீரை

என்ன சத்து?

 வைட்டமின் ஏ,  சுண்ணாம்புச்சத்து இருக்கிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  

என்ன பலன்?

இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,,  பசியைப்போக்கவும் பயன்படுகிறது. 

வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச்  சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.  கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.  வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். 

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர்  விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிட,  வெந்தயக்கீரை இட்லி செய்து தாருங்கள்.

தேவையானவை : இட்லி மாவு 2 கப்
வெந்தயக் கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப‌

வறுத்துப் பொடிக்க - காய்ந்த மிளகாய் - 5, கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2  ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு ஸ்பூன், சீரகம் - அரை ஸ்பூன், பெருங்காயம் - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு ஸ்பூன்

தாளிக்க - கடுகு - 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன், நெய் - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயிலில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். கீரையை பொடியாக நறுக்கி அலசிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். இட்லி மாவைக் கொண்டு, சிறுசிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்து வைக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் கீரையைச் சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.

Via Doctor Vikatan